ஆரிய–திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்–பின்னும் (4)
தீபாவை இயக்குவது பாஜக என்கிறீர்களா?: சசிகலாவை எதிர்க்க வலிமையான தலைவர்கள் இல்லாத நிலையில் உறவு என்ற பெயரில் தீபாவை பாஜக மறைமுகமாகத் தூண்டி வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜெயலலிதாவின் உறவினர் என்பதைத் தவிர தீபாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால், சசிகலா கடந்த பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியல் வியூகங்களை உணர்ந்தவர். அது செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றியவர். எனவே, தீபாவுடன் சசிகலாவை ஒப்பிடுவதே பெரும் தவறு. |
தமிழக பிஜேபியிலும் ஜாதி அரசியல் உள்ளது என்பது நிதர்சனம். ஆகவே, தீபாவை பிஜேபி ஆதரிக்கிறது என்பது பொய். அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள், சசிகலாவின் எதேச்சதிகாரத்தை-சசிகலா-குடும்ப ஆட்சியை எதிர்ப்பவர்கள், எம்.ஜி.ஆர்-ஜெயலிதா அபிமானிகள் தான் தீபாவை ஆதரிக்கின்றனர். இது வெளிப்படையான உண்மை. |
ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்களே?: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பதவியேற்றுள்ளனர்.
எனவே, தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. உண்மையில் வெற்றிடம் இருப்பது ஆளுநர் மாளிகையில்தான். முதலில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டு அரசியல் வெற்றிடம் பற்றி பாஜகவினர் பேசட்டும். மிகப்பெரிய மாநிலமான தமிழகத்துக்கு தனியாக ஒரு ஆளுநரை நியமிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. |
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஸ்டாலினோ அரசியல் மற்றும் இதர விசயங்களில் பலமானவரோ, முதிர்ச்சியுள்ளவரோ இல்லை. ஜெயலலிதா இல்லாமல் இருந்தும், திமுகவினரால் ஒன்றும் செய்து விட முடியாது. உண்மையில், திமுக தனது பணபலத்தால், அதிமுகவை உடைக்க முடியும், ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது. இதுதான் பிரச்சினை. |
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?: இப்படி பேசுவதும்கூட பாஜகவின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தான். ஜெயலலிதாவுக்கு கடவுள், மத நம்பிக்கை இருந்ததால் மட்டும் அதிமுக இந்துத்துவ கட்சியாகி விடாது.
இட ஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு என திராவிட இயக்கக் கொள்கைகளை என்றுமே அதிமுக விட்டுக் கொடுத்ததில்லை. இன்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்ச்சியை அதிமுக நடத்துகிறது. பெரியாருக்கு விழா எடுக்கிறது. இதுவெல்லாம் பாஜகவின் கொள்கைகள்தானா என்பதை வெங்கய்ய நாயுடுதான் விளக்கவேண்டும். ஜெயலலிதா பார்ப்பனராக இருந்தாலும், பார்ப்பனர் கட்சியாக அதிமுகவை நடத்தவில்லை. |
செக்யூலரிஸம் என்ற ரீதியில், இவருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்து-எதிர்ப்பு நாத்திகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றுடன் தான் அந்த பார்ப்பன-எதிர்ப்பும் வருகிறது. காலத்தின் கட்டாயத்தில், பிஜேபியும் அதையெல்லாம் செய்து வருகிறது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அவற்ரையெல்லாம் “திராவிட பாரம்பரியப்படி” செய்யும். இப்பொழுது “ஜல்லிக்கட்டுக்கு” ஜால்ரா போடுவதும் அந்த விதத்தில் தான். |
ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இனி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?:
அவர் தனது ஆசையை கூறியிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதில் உறுதியாக நின்றனர். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமூகநீதிக்கு எதிரான மனநிலை கொண்ட பாஜகவை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். |
அதிமுக-பிஜேபி கூட்டு என்பது, திமுக-பிஜேபி கூட்டு போன்றது. அப்பொழுது, திமுககாரர்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போடவில்லையா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டி.ஆர்.பாலு போன்றோருக்கு வேலை செய்யவில்லையா? வீரமணி இவ்வாறு பிதற்றுவது வேடிக்கையாக இருக்கிறது, மற்றும் அவரது பய்த்தை வெளிப்படுத்துகிறது. |
50 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுகவை பாஜக பகைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்களா?:
நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க் களுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3 ஆவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இந்த அசுர பலத்துக்கு முன்பு எந்த அதிகாரமும், அச்சுறுத்தலும் சாதாரணம் என்பதை ஜெயலலிதா நிரூபித்து வந்தார். இதை உணர்ந்து இன்றைய அதிமுக தலைமை செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை. இந்தச் சூழலை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். |
ஜி.எஸ்.டி விவகாரத்தில் தான் பிஜேபி பயந்து வந்த்து. ஜெயலலிதா மறிந்து விட்டதால் தான் மோடி, சசிகலா தலைமீது கைவைத்து, நடராசனுடன் பேசினார். இவர்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், சட்டம் அமூலுக்கு வரும். ஆகவே, 50 எம்பிக்களை வைத்து, பாராளுமன்றத்தில் இனி பாட்டு பாடுவதை விடுத்து, மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்யலாம். |
அதிமுக திராவிடக் கட்சி என்பதை திராவிட இயக்கத்தினரே ஏற்பதில்லை. ஆனால், நீங்கள் தாய்க் கழகம் என்ற முறையில் சசிகலாவுக்கு வேண்டு கோள் விடுப்பதாக கூறியுள்ளீர்களே?:
எங்களைப் பொறுத்தவரை அதிமுகவும் திராவிட கட்சிதான். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை யான இட ஒதுக்கீடு, சமூக நீதியில் அதிமுக உறுதியாக உள்ளது. 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர அதிமுகவே காரணம். வைகோ எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மதிமுகவும் திராவிடக் கட்சிதான். |
குழப்பத்தில் உள்ள வீரமணிக்கு, திராவிடத்துவத்தை உயிரூட்ட திட்டம் போடுகிறார் போலும். இடவொதிக்கீடு பேசியே, தமிழகத்தை ஆண்டுவிட முடியாது, ஊழலைப் பற்றி பேசாதது, திராவிடத்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஊழல் வழக்குகளில் சிக்கியதால் தான் சசிகலா-ஜெயலிலதா மாட்டிக் கொண்டனர், சிறை சென்றனர். வழக்குகளும் நிலுவையில் உள்ளன. |
திமுகவை மட்டும் ஆதரித்து வந்த நீங்கள், இப்போது அதிமுகவையும் ஆதரிக்கிறீர்கள். இரு கட்சிகளையும் ஒன்றாகவே கருதுகிறீர்களா?:
திமுக, அதிமுக இரண்டும் திராவிடக் கட்சிகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் – தம்பி போன்ற இயக்கங்கள். எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த இயக்கத்தில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் இருப்பதே பெரியார் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம். கொள்கைப் பாதையிலிருந்து விலகிச் சென்றால் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்”, இவ்வாறு கி.வீரமணி கூறினார்[1]. |
திராவிடத்துவவாதிகள் எப்படியெல்லாம் பொய் சொல்வார்கள் என்பதற்கு, இவர் தான் உதாரணம். பெரியார் சொன்ன “கண்ணீர் துளிகள்”, மற்றும் நெடுஞ்செழியன் குறிப்பிட்ட “கடல்நீர் துளிகள்” முதலியவற்றை மறைத்துப் பேசுவது வீரமணியின் கைவைந்த கலை. ஊழலின் ஊற்று, சமுத்திரம் என்றெல்லாம் அதிமுக-திமுக வர்ணிக்கப் பட்டது, அப்பொழுது, அதற்கு காரணம் திகதானே? பிறகு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது, “தவறுகளை சுட்டிக் காட்டுவோம்” என்பதற்கு? |
© வேதபிரகாஷ்
15-01-2017
[1] எம். சரவணன் நன்றி: ‘தி தமிழ் இந்து’ 13.1.2017