ஆரிய–திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்–பின்னும் (3)
திராவிடத்துவவாதிகளின் முரண்பாடு: திராவிட அரசியல்வாதிகள், சித்தாந்திகள், பேச்சாளிகள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் உள்ளவர்களுக்கு, உறுதியான கொள்கையோ, சித்தாந்தத்தில் பிடிப்போ, பேச்சில் ஸ்திரமோ இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். “சுயமரியாதை” என்றெல்லாம், பீழ்த்திக் கொண்டாலும், மரியாதை இல்லாமல், வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் நடந்து வந்துள்ளார்கள். ஒருவரையொருவர் வசைப்பாடிக் கொண்டு, கட்டித் தழுவி வேடமிட்டு நடித்துள்ளார்கள். சினிமாமாவும், அரசியலும் ஒன்றாக வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கூத்தாடிகளுக்கு அதெல்லாம் இல்லை என்பதால், முரண்பாட்டைப் பற்றியும் கவலைப் படவில்லை. பிரமாணரான ஜெயலலிதாவின் நிலை திராவிட அரசியலில் அப்படித்தான் இருந்தது. திராவிட அரசியல்வாதிகள் அவரை நன்றாகப் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதிலும், முதலமைச்சாரக் இருந்த காலத்தில், அவரை வசைப்பாடியவர்கள் எல்லோரும் அவரது கால்களில் வந்து விழுந்தார்கள். வீரமணியும் விலக்கல்ல.
பாப்பாத்தி-ஜெயலலிதாவை வசைவு பாடிய திராவிடர்கள், புகழ்வது-போற்றுவது: ஜெயலலிதாவை நேரிலும், மறைமுகமாகவும், ஊடகங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், கொச்சையாக, கேவலமாக, பெண் என்று கூட பார்க்காமல் விமர்சித்துள்ளார்கள். வயது முதிர்ந்த நிலையில் இருந்த மூப்பனார் முதல், இருக்கும் கருணாநிதி வரை அவ்வாறுதான் பேசியுள்ளனர். அது, வெறும் “ஆணாதிக்கம்” என்ற முறையில் இல்லை, மிக அருவருப்பான திராவிட பாரம்பரியத்தில் ஊறிய நிலையில் வெளிப்பட்ட வார்த்தைகள், வசைவுகள் மற்றும் தரமற்ற விமர்சனங்கள். “பாப்பாத்தி” என்று தாராளமாக பேசி, எழுதி வந்துள்ளதை, அவர்களது அங்கீகாரத்தில், அவர்களே ஆசிரியர்கள் என்று வெளிவரும் “விடுதலை”, “முரசொலி” முதலியவற்றில் தாராளமாகப் பதிவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தாராளமாக பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவ்விசயத்தில் வீரமணியும் சளைத்தவர் அல்ல. இருப்பினும், திகவிற்கு ரூ. ஐந்து லட்சம் நிதி வாங்கியபோதும், இடவொதிக்கீடு விசயத்திலும், “சமூகநீதி காத்த வீராங்கனை” என்று பாராட்டி தப்பித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தீபாவை ஆதரிப்பது-எதிர்ப்பது “ஆரிய-திராவிட போராட்டமா?: இப்பொழுது, தீபா என்ற ஐய்யங்கார் பாப்பாத்தியை தூக்கிப் பிடித்து, அவரை தலைவராக்கி விட்டால், மறுபடியும், திராவிடர்கள் பாப்பாத்திக்கு அடிமையாக நேரிடும் என்ற நோக்கில், பழைபடி “நடப்பது ஆரியர் -திராவிடர் போராட்டமே!” என்று ஆரம்பித்துள்ளார். முன்பு ஜெயலைதா, அதிமுகவின் தலைமை ஏற்றபோதும், முதலமைச்சர் ஆனபோதும், “ஆரிய-திராவிட போராட்டம் ஆரம்பித்து விட்டது” என்று குறும்புத்தகம் எல்லாம் வெளியிட்டார், “விடுதலை”யில் எழுதினார். இன்றும், அதே பல்லவியைப் பாட ஆரம்பித்துள்ளார். போதாகுறைக்கு, இன்று பிஜேபி தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. மத்தியிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளதால், திராவிட கட்சிகளின் தாக்கம் குறைந்து விடுமோ, திராவிடம் மறைந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதனால், மறுபடியும், பார்ப்பனீய எதிர்ப்பு, வசைவு என்று ஆரம்பித்து விட்டார் எனலாம்.
“தி இந்துவுக்கு” திக வீரமணியின் பேட்டி (13-01-2017)[1]: சென்னை, ஜன.13, 2017 அன்று, நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இந்து (தமிழ்) (13.1.2017) ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, என்று “விடுதலை”யில் பெருமையாக வெளியிட்டுக் கொண்டார்.” சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பாஜக தூண்டி விடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி, பின்வருமாறு[2]. வழக்கம்போல, இடது பக்கத்தில் வீரமணியில் பதில் மற்றும் வலது பக்கத்தில் என்னுடைய விளக்கம், விமர்சனம் சேர்க்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பது ஏன்?: என்ன காரணத்துக்காக சசிகலா எதிர்க்கப்படுகிறாரோ, அதற்காகவே அவரை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது.
ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதில்லை. இந்த இருவரின் ஆட்சியில்தான் 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்தது. அவர்கள் வழியில் அதிமுகவை வழிநடத்த பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த சசிகலாவால் முடியும் என நம்புகிறோம். | “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவு” என்பதை கேட்டவரும், பதில் சொன்னவரும் எப்படி புரிந்து கொண்டாரோ தெரியவில்லை. ஆனால், திக உயர்ஜாதி ஆதிக்கத்தை ஆதரிக்கிறது என்பது தெரிகிறது. அதுதான், பெரியாரின் கொள்கையாகவும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி கவலைப் படவில்லை. |
பிராமணர் அல்லாதவர் என்பதுதான் உங்களது அளவுகோலா?[3]: பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் மட்டும் சசிகலாவை ஆதரிக்கவில்லை.
ஜெயலலிதாவின் நிழலாக அவரது வாழ்விலும், தாழ்விலும் 33 ஆண்டுகள் உற்ற துணையாக இருந்தவர். ‘இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’ என்பார் பெரியார். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்தி குறுக்கு வழியில் தமிழகத்தில் காலூன்ற பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிடுகின்றன. இதை முறியடிக்கவே சசிகலாவை ஆதரிக்கிறோம்[4]. | ஆக திராவிட உயர்ஜாதி ஆதிக்க அரசியலை மறைக்க, பார்ப்பன எதிர்ப்பு உபயோகப் படுகிறது. ‘நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’, என்ற செல்லாத, சரித்திர ஆதாரமில்லாத கொள்கையை வைத்துக் கொண்டு தான், திராவிட சித்தாந்திகள் காலந்தள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உழைப்பில்லாம, மக்கள் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அல்லது யாரும் காலூன்ற முடியாது. அதேபோல, காலாவதியான, உபயோகமற்ற சித்தாந்தங்களையும் மக்கள் தூக்கி எரிந்து விடுவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். |
தமிழகத்தில் 2 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட பாஜகவால் 40 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட அதிமுகவை கபளீகரம் செய்துவிட முடியுமா?: மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் முடியும் என்பதே கடந்தகால வரலாறு.
அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போல தமிழகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிடுகிறது. தமிழகத்தில் காலூன்ற என்ன செய்யலாம் என்பது குறித்து பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாமூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். | அதிமுக எம்.எல்.ஏக்கள் பிஜேபியில் சேருவார்களா, பிஜேபிகாரர்கள் ஒப்புக் கொள்வார்களா? அமித்ஷா என்ன அந்த அளவுக்கு முட்டாளா? இதையெல்லாம் மறைத்து, வீரமணி “பூச்சி” காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் பலம், ஆதரவு, ஓட்டுவிகிதம் முதலியவை மற்றும் திராவிடத்துவத்தின் காலாவதித்தனம், இவைதான் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும். |
© வேதபிரகாஷ்
15-01-2017
[1] தி.இந்து, தமிழக ‘அரசியலில் வெற்றிடம் இல்லை; சசிகலாவை வீழ்த்த தீபாவை தூண்டிவிடும் பாஜக: கி.வீரமணி சிறப்பு பேட்டி, எம். சரவணன் Published: January 13, 2017 09:44 ISTUpdated: January 13, 2017 09:46 IST
[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article9477436.ece
[3] விடுதலை, நடப்பது ஆரியர் -திராவிடர் போராட்டமே! இந்து (தமிழ்) ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி, வெள்ளி, 13 ஜனவரி 2017 14:57