திக–திமுகபேச்சாளர்கள், தலைவர்கள்மற்றும்சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்துபேசிவருவது: திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வந்ததை, இன்றைய 70-80-90 வயதானவர்களுக்கு, அதிலும் நேரிடையாக கூட்டங்களுக்குச் சென்று அவர்கள் பேசியதைக் கேட்டவர்களுக்கு, அவர்கள் எவ்வாறு, எப்படியெல்லாம் அநாகரிகமாக, கெட்ட வார்த்தைகள், மோசமான வசைபாடுகள், முதலியவற்றையெல்லாம் சரமாரியாக, வழக்கமாக பேசுவார்கள் என்று அறிவார்கள். அத்தகைய தரமற்ற, மோசமான, ஆபாசமான, மிகக் கேவலமான பேச்சுகள், இப்பொழுது, 2021-2023 ஆண்டுகளிலும் பேசப் படுகிறது என்பதைக் கேட்கும் பொழுது, கவனிக்கும் பொழுது, மிக வருத்தமாக, திகைப்பாக மற்றும் அதிர்ச்சியாக இருக்கிறது. சைதை சாதிக், துரை முருகன், கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்று பலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்பொழுது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது, பழைய அந்த 1950களில் பேசிய திக-திமுகவினரை ஒத்துப் போகிறது. இதை விட கேவலமாக எல்லா கூட பேசியிருக்கிறார்கள். திகவினர் பேசும் பொழுது, பெண்களே வேகமாக நடந்து, ஏன் ஓடவும் செய்வார்கள், அந்த அளவுக்கு மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாகப் பேசுவது உண்டு.
9-01-2023 ஆளுநர்ஆர்.என்.ரவிஉரை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் நீண்டநாட்களாக இருந்து வரும் பஞ்சாயத்துக்கு மத்தியில் பெருத்த எதிர்பார்ப்புடன் இக்கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும் என்று ஆர்.என். ரவி கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்து தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி ஆளுநராக செயல்படாமல் தொடர்ந்து பாஜக கட்சிக்காரராகா கருத்து கூறி வருகிறார் என்றும் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உண்மையில் இவையெல்லாம் கடந்த 50-70 ஆண்டுகளில் ஏற்கெனவே பேசி முடித்தது தான். அச்சிலும் உள்ளது தான்.
திராவிட சித்தாந்த வார்த்தைகளை ஆளுனர் தவிர்த்தது: இதற்கு மத்தியில் சட்டசபை உரையை வாசித்த ஆளுநர் ரவி, உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறது, அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பதையும் வாசிக்காமல் கடந்தார். குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் கடந்துவிட்டார். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு முன்பாகவே எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுனர் உட்கார்ந்திருக்கும் பொழுதே, ஏற்கெனவே தயாரித்த, அச்சிடத்த காகிதப் பேச்சை வைத்து ஸ்டாலின் படிக்க ஆரம்பித்தார். ஆளுனருக்கு தமிழ் தெரியாது என்பதால், ஸ்டாலின், ஆங்கில மொழிபெயட்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அந்நிலையில், ஆளுனர் போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு கேட்கிறார். அவர், ஸ்டாலின் பேசியதைப் பற்றி சொல்லியிருக்கலாம். அதனால், அதிகாரிகளைக் கூப்பிட்டு, வெளியே சென்று விட்டார். “அப்போது ஆளுநர் வெளிநடப்பு செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே,” என்று தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக கூறியுள்ளன. அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆளுநரை விமர்சிக்க கூடாது என்றும் அவரை குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
திமுகபேச்சாளர்சிவாஜிகிருஷ்ணமூர்த்திஆளுநரைபாகிஸ்தானுக்குஅனுப்பிகொல்லவேண்டும்என்று பேசியது: இந்நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசைபாடியும் இருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது[2]; “அரசுகொடுத்தஉரையைஒழுங்காகபடித்திருந்தால்ஆளுநரைகையெடுத்துகும்பிட்டுஅனுப்பிஇருப்பேன்[3]. ஆனால், அவர்டாக்டர்அம்பேத்கர்பெயரையேசொல்லமாட்டேன்என்றுதவிர்த்தால்செருப்பால்அடிப்பேன்என்றுசொல்லஎனக்குஉரிமைஇருக்காஇல்லையா? அம்பேத்கர்பெயரைசொல்லமாட்டேன்என்றுசொன்னால்ஆளுநர்காஷ்மீருக்குசெல்லட்டும்; நாங்களேதீவிரவாதிகளைஅனுப்பிசுட்டுகொல்வோம்,” என்றார். இப்படி சுருக்கமாக செய்தி போட்டிருந்தாலும், மிகவும் கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பதை கேட்கலாம்.
திமுக பேச்சாளரின் கொலைவெறி பேச்சு: இந்தியா டுடே[4], “ஆளுநரைதிட்டவேண்டாம்எனமுதல்வர்கேட்டுக்கொள்கிறார். அவர்பேச்சைசரியாகப்படித்திருந்தால், அவரதுகாலில்பூவைத்துகைகூப்பிநன்றிதெரிவித்திருப்பேன்[5]. ஆனால், அம்பேத்கரின்பெயரைச்சொல்லமறுத்தால்அவரைசெருப்பால்அறையஎனக்குஉரிமைஇல்லையா?[6]அவருடையபெயரைச்சொல்லமறுத்ததால், நீங்கள்காஷ்மீருக்குச்செல்லுங்கள்[7]. உங்களைச்சுட்டுக்கொல்லஒருதீவிரவாதியைஅனுப்புவோம்,” என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[8]. இப்பேச்சு ஆங்கில ஊடகங்களில் 13-01-2023 அன்றே பரவலாக, இணைதளங்களில் வெளியிட்டுள்ளன. ஏனெனில், 2023ல் இவ்வாறு பேசுவது தான் அதிர்ச்சியளிப்பாக உள்ளது. இதனால், இழிவுபடுத்துதல், துஷ்பிரயோகம் செய்தல், அசிங்கமாக-ஆபாசமாக எப்படி பேசுவார்கள் என்று திகைத்து விட்டனர் எனலாம்.
கொஞ்சம் விவரமாக; திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார்[9]. தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்[10]….மேலும், தனது பதவியை பாதியிலேயே ராஜினிமா செய்து வந்த அண்ணாமலை எனக் கூறி அசிங்கமான வார்த்தையில் விமர்சித்த திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பிரான்ஸ்ல தயாரித்த கடிகாரத்தை கட்டிக்கொள்வதுதான் தேசபக்தியாடா..? என்று கேள்வி எழுப்பினார்.…….தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், வாரிசு அரசியல் குறித்து பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு ஆண்மை இருப்பதால் வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஆண்மை இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கிண்டலாக குறிப்பிட்டார்……..அதோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருவது குறித்து பேசிய அவர், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேளியாக குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் எப்போது நடந்தது என்று சொல்லும் யோகிதை இருக்கிறதா..? என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.
[3] India Today, Will send terrorist to kill Tamil Nadu Guv, says DMK leader; BJP demands arrest under Goondas Act, Pramod Madhav and Apoorva Jayachandran , Chennai,UPDATED: Jan 13, 2023 23:07 IST
[5] Times.Now, ‘If you don’t read government’s speech, go to Kashmir and we will…’, DMK leader’s abusive remarks against TN Guv, Updated Jan 13, 2023 | 10:17 PM IST.
ஆனைமுகத்தோனுக்குஆனைவெடிவைத்துஉடைத்தேன்என்றுஆண்டிப்பட்டிராஜா, ஆனைமுத்துஇழவுவிழாவில்பேசிஒப்பாரிவைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)
அம்மா கொடுத்த விபூதிகளை முதலில் பூசிக் கொண்டேன், பிறகு தூக்கி எறிந்தேன்: “1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விபூதிகளை வச்சுக்கோ, இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. …….அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன். அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. …” சிறுவயதில் அத்தகைய எண்ண உருவானது, என்பது, மனோதத்துவ ரீதியில் அலசவேண்டியுள்ளது. ஆனைமுத்து வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் தான். ராசாவைப் போல யாரும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் புண்படும் படி நடந்து கொள்ளவில்லை.
நானேநினைத்தாலும்இந்துவாகஇருந்துஎன்னால்வெளியேறமுடியாது: ஏ.ராசா பேசியது, “என்வாழ்வில்நான்மாற்றியதற்குகாரணம்பெரியார்பேசியஅந்தகடைசிபேச்சுதான். தொடர்ந்துபேசியஅவர்நானேநினைத்தாலும்இந்துவாகஇருந்துஎன்னால்வெளியேறமுடியாது[1]. ஏன்என்றால்இந்துஅமைப்புசட்டத்தில்யார்கிறிஸ்துவர்கள், யார்இஸ்லாமியன், யார்யூதன்இல்லையோமற்றஅனைவரும்இந்துஎன்றுதான்சட்டம்உள்ளது. எனவேநானேநினைத்தாலும்வெளியேறமுடியவில்லைஅப்படிவெளியேறினால்அந்தநாள்வந்தால்அதுதான்ஆனைமுத்துவிற்குமரியாதைசெய்யும்நாளாகஇருக்கும்,” என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்[2]. இங்கு, அம்பேத்கர் அரசியல் சாசனம் சரியில்லை என்கிறாரா அல்லது இந்துசார்புடையது என்கிறாரா என்பதை கவிக்க வேண்டும். அம்பேத்கர் இந்துவிரோதி, இந்துமதத்தை வெறுப்பவர், தோஷிப்பவர்….. அதனால் தான், அவரது பேச்சுகளும், புத்தகங்களும் அவ்வாறே இருந்தன. பிறகு, அவரது அரசியல் சாசனம், நிர்ணய சட்டத்தைக் குறை சொல்வது ஏன் என்று தெரியவில்லை.
ராசாகொடுக்கும்விளக்கம்[3]: ‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே! அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான். வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல. யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது.‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார். இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை. தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.: என்றெல்லாம் விளக்கம் கொடுத்தது விசித்திரமாக இருந்தது[4].
இந்துவிரோதம்மற்றும்எங்ககட்சியில்இந்துக்கள்உள்ளார்கள்என்றமுரண்பாடுதொடரும்: ஆ. ராசா என்கின்ற ஆண்டிப்பட்டி ராஜா இந்து-துவேசம் பேசுவது புதியதல்ல. அவரது வீடியோ பேச்சுகள் ஏற்கெனவே அந்த இதுவிடரோதத் தன்மையினை வெளிக்கட்டியுள்ளது. ஸ்டாலின் விபூதியை அழித்தது போல, இவரும் தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறார் போலும். தாயின் மத உணர்வுகளைக் கூட மதிக்காதவர்களை மக்கள் புரிந்து கொள்வர்கள். அதே போலத்தான், துர்கா ஸ்டாலின், தனது கணவனுக்கு நேர்த்திக் கடன் செய்வது, விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, சமஸ்கிருத சுலோகங்கள் சொல்லி பாராயணம் செய்வது போன்ற காரியங்கள். தனது மாமனாருக்கும் காசிக்குச் சென்று காரியங்களை செய்து வந்துள்ளார். ஆனைவெடி வைத்து ஆனைமுகத்தோனை உடைப்பேன். ஆனால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், திமுகவினரும் சொல்ல மாட்டார்கள்! ஆக, திமுகவின் இரு வேடங்கள் தெரிந்த விசயமே. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும். பிரச்சாரம், விளம்பரங்கள் அதிகமாகும்.
ஆ.ராசாவின் சித்தாந்தம் என்ன?: சிறுவயதிலிருந்து வெடி வைகத்தேன், உடைத்தேன் போன்ற மனப் பாங்கு, வன்முறையினைத் தான் காட்டுகிறது. அத்தகைய உணர்சுகள் அவர் முகத்திலும்வெளிப்படுவது, புகைப்படங்களில் காணலாம்.
ஈவேரா உடைத்தார், அதனால் நானும் உடைத்தேன் என்பது அந்த துலுக்க விக்கிரங்களை உடைக்கும் தீவிரவாதத்தை தான் காட்டுகிறது.
ஏனெனில், மொஹம்மதைப் போலத்தான், தானும் மொஹம்மது என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவில் கஜினி-கோரி மொஹம்மதுகள் தீவிரவாதத்துடன் கோவில்களை இடித்தார்கள், விக்கிரங்களை உடைத்தார்கள், செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றாற்கள்.
தென்னகத்தில்மாலிக்காபூர் இடைக்காலத்தில் அவ்வாறு செய்தான். இப்பொழுது, நவீன காலத்தில் திராவிடத்துவ வாதிகள் செய்து வருகின்றனர்.
சிலை உடைப்பு சித்தாந்தம், நியாயப் படுத்துத்தல், பெருமைப் பேச்சிக் கொள்வது எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
அண்ணா சொல்லியபடி, “இனம் இனத்தோடு சேர்கிறது,” கோவில் இடிப்புகள். விக்கிர உடைப்புகளும் அவ்வாறே உள்ளன.
அம்மாவின் உணர்வுகளையும் மீறி, மதிக்காமல், அவர் கொடுத்த விபூதிகளை எறிந்தேன் என்பதெல்லாம், ஸ்டாலினை திருதிப் படுத்தவா, அல்லது அவரையும் விஞ்சிய திராவிடத்துவத் தலைவர் என்பதை எடுத்துக் காட்டாவா என்று தெரியவில்லை.
எஸ்.சி என்ற நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து, “நானேநினைத்தாலும்இந்துவாகஇருந்துஎன்னால்வெளியேறமுடியாது,” என்று பேசியிருப்பதெல்லாம், எப்படி இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் படியே ஏமாற்றுகிறார் என்பதும் தெரிகிறது.
“பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா: சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என்வாழ்வில்நான்மாறியதற்குகாரணம்பெரியார்பேசியஅந்தகடைசிபேச்சுதான். பெரியாரின்சிந்தனைகள்என்னுள்வந்தபின்புஊரில்இருந்தபிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவைத்துஅதைதகர்த்தவன்தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.
விளம்பரம்–தினசரிஅறிக்கை–அதிரடிடிவிசெய்திகள்மூலம்ஆட்சிநடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுகஆட்சிபொறுப்புக்குவந்ததுமுதல்அரசியல்ரீதியாகவும்நிர்வாகரீதியிலும்பல்வேறுஅதிரடிநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனாகாலம்தொட்டு, மழைவெள்ளம்பாதிப்புவரைஅரசுஎடுத்தஒவ்வொருநடவடிக்கைகளையும்மக்கள்வெகுவாகபாராட்டிவருகின்றனர். இதுஒருபுறம்இருந்தாலும்எதிர்க்கட்சிகளானஅதிமுக–பாஜகபிரச்சாரத்தின்போதுதிமுககொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றவில்லை, பொய்வாக்குறுதிகளைகொடுத்துஆட்சிக்குவந்துவிட்டதுஎன்றுதிமுகமீதுகடுமையானவிமர்சனங்களைமுன்வைத்துவருகின்றன. அதேபோல்பல்வேறுமாநிலங்களில்பெட்ரோலுக்கானமாநிலவரிகுறைக்கப்பட்டுள்ளது, அதேபோல்தமிழகஅரசும்அந்தவரியைகுறைக்கவேண்டும்எனதொடர்ந்துவலியுறுத்திவருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.
இந்துக்களைஎதிர்த்துவரும்கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.
கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில்அதைமெய்ப்பிக்கும்வகையில்திமுகநாடாளுமன்றஉறுப்பினர்ஆ.ராசாபெரியாரின்சுயமரியாதைமற்றும்கொள்கைபாதையைப்பின்பற்றியஆனைமுத்துபடத்திறப்புவிழாவில்இந்துமதத்தைதான்ஏன்எதிர்க்கிறேன்என்றும், காவிஎவ்வளவுஆபத்தானதுஎன்பதுகுறித்தும்விளக்கிபேசியுள்ளார். மேலும்கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருக்கவேண்டும்அப்படிஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.
ஆ.ராசாவின்பேச்சு – அதன்விவரம்பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயதுவரைவாழ்ந்து, 75 ஆண்டுகாலம்பெரியார்குறித்துமட்டுமேபேசிமறைந்தஆனைமுத்துபடத்திறப்புநிகழ்ச்சியில்கலந்துகொள்வதில்மகிழ்ச்சிஅடைகிறேன். அவருக்கும்எனக்கும்உள்ளதொடர்புநீண்டநெடியது, டெல்லிக்குவரும்போதெல்லாம்என்வீட்டிற்குவந்துநீண்டநேரம்பேசுவார். ஒருதத்துவத்தைகூறிஅந்ததத்துவம்நிறைவேறுவதைதன்கண்ணால்பார்த்தஒரேதலைவர்பெரியார்அந்தபெரியாரேபேரறிஞர்எனஆனைமுத்துவைகூறினார். அதைவிடஅவருக்குநாம்என்னபெருமையைசெய்யமுடியும். பூலோகரீதியாகஆனைமுத்துவும்நானும்ஒரேமாவட்டத்தைசேர்ந்தவர்கள்”.
[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம்ஒன்றாகட்டும்.. காவியைவிட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தைதெறிக்கவிட்டஆ.ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]
இந்நாட்டின்அரசமைப்புச்சட்டத்தின்மதச்சார்பின்மை (Secularism) கொள்கைக்குமுற்றிலும்முரணானதுஇது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்”, கிறித்துவர்களின் ‘‘பைபிள்”, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்”, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்”, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா”, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்” நூல் – இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ – அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்ற அமைப்பு தலையாட்டுமா?
கீதைவன்முறையைத்தூண்டும்ஒருகொலைகாரநூல்!: முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல். ‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற – தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில், ‘The Murder of the Mahatma’ – ‘மகாத்மாவின் கொலை’ என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி – விற்பனையாகி – இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்! எவரே மறுப்பர்? பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்! கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்! ‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை – தர்மம் ஆகும்” என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது). ‘‘…தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்….” – இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!
‘‘கடமையைச்செய்; பலனைஎதிர்பார்க்காதே”: ‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே” என்பதில் கடமை என்பது ஜாதி – வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்! திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் – ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது? தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி! இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!! பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது. ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்! தமிழக அரசும், முதலமைச்சரும் – மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்! ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.
2017லும்இதேகருத்தைவெளியிட்டது[1]: சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் – காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான். இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு – கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்[2].
கிருஷ்ணன்என்னஉனக்குமட்டும்தானாதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்குஎன்னதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்! ஆக, எங்கள்கிருஷ்ணனைப்பற்றிபேசிவிட்டார்களாஎன்றுநீங்கள்கேட்கிறீர்கள். கிருஷ்ணன்என்னஉனக்குமட்டும்தானாதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்! ஏனென்றால், நீகிருஷ்ணன்என்றுசொல்கின்றகடவுளைப்பற்றி, உன்மூக்கைசொறிந்து, திசைதிருப்பிவிட்டிருக்கிறார்கள்யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும். திமிருடன், இவ்வாறு ஒருமையில் பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். மனத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருந்தால் ஒழிய, இவ்வாறு பேச்சு வந்திருக்காது. பிறகு, இத்தகைய ஆட்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?
கோர்ட்டில்கிருஷ்ணனையும்கூப்பிடமுடியும்; கிருஷ்ணதாசர்களையும்கூப்பிடமுடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும்சிலபேர்வழக்குபோடுவோம்என்றுசொல்கிறார்கள். போடுங்கள்! உங்கள்வழக்கைத்தான்நான்எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில்கிருஷ்ணனையும்கூப்பிடமுடியும்; கிருஷ்ணதாசர்களையும்கூப்பிடமுடியும். உன்னாலேவரமுடியுமானால், வழக்குபோடுங்கள்!ஆதாரபூர்வமாகதாக்கல்செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள்ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன்செய்தலீலைகளைப்படமாகப்போட்டு, குளத்தில்பெண்கள்எல்லாம்பாதிநிர்வாணமாகநிற்கிறார்கள்; சேலைகளைத்தூக்கிக்கொண்டுமரத்தின்மீதுகிருஷ்ணன்இருக்கிறார்பாருங்கள்அந்தப்படத்தினை, நீதிபதிஅவர்களேஇதனைஆதாரபூர்வமாகதாக்கல்செய்கிறோம்என்றுசொன்னால், என்னஆவார்கிருஷ்ணன், அதனைநீங்கள்எண்ணிப்பார்க்கவேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம், இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
ஒருலட்சம்பிரதிக்குமேல்விற்பனையாகியகீதையின்மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின்மறுபக்கம்! இதோஎன்கைகளில்இருப்பதுகீதையின்மறுபக்கம்நூல்! கிருஷ்ணன்உபதேசம்செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான்கீதை! எதிர்எதிரேபடைகள்இருக்கு. அந்தப்படையில்அர்ஜுனன்சண்டைபோடபோகிறாராம். அர்ஜுனனுக்குத்தேரோட்டியாககிருஷ்ணன்போறாராம். அப்போதுகாதோடுகாதாககீதாஉபதேசம்செய்றாராம். எங்கே? எதிரிப்படைகள்நிற்கின்றஇடத்தில் – 700 சுலோகம்முடியும்வரைஎதிரிப்படைகள்அமைதியாகநிற்கின்றதாம். கீதையின்மறுபக்கம்நூல்இருக்கிறதே, ஒருலட்சம்பிரதிக்குமேல்விற்பனையாகிஇருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லாமொழிகளிலும்அச்சாகிஇருக்கிறது. இதற்குஒருவரிமறுப்புகிடையாது”. முதலில் வாங்கிப் படித்தார்களா, இல்லை, கண்டுகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே தெரிந்த பொய்களை, திரட்டி புத்தகம் போட்டால், யாரும் படிக்க மாட்டார்கள், அதன், தரம் தெரிந்தவர், ஒதுக்கத்தான் செய்வார்கள். பிறகு, அதனைப் பற்றி தம்படாம் அடித்துக் கொள்வதில் என்ன பலனும் இல்லை.
கருணாநிதிசிலைதிறப்பு – சிலைவைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல்எல்லாமேதிராவிடகலாச்சாரம், பண்பாடு, நாகரிகம்தான்! [1]
பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!
1968ல்இரண்டாவதுஉலகத்தமிழ்மாநாடுநடந்த்த்தும், சிலைகள்வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.
எண்
திறந்துவைக்கப்பட்டதேதி
சிலை
விழாத்தலைவர்
திறந்துவைத்தவர்
1
02-01-1968
திருவள்ளுவர்
இஆ. நெடுஞ்செழியன்
கி.ஆ.பெ. விசுவநாதன்
2
02-01-1968
அவ்வையார்
சத்தியவாணி முத்து
எஸ்.எஸ். வாசன்
3
02-01-1968
கம்பர்
ஏ. கோவிந்தசாமி
மீ. பக்தவட்சலம்
4
02-01-1968
கண்ணகி
5
02-01-1968
சுப்பிரமணிய பாரதி
மாதவன்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6
02-01-1968
வீர்மாமுனிவர்
சாதிக் பாஷா
அருளப்பா
7
02-01-1968
கி.யூ.போப்
சி.பா. ஆதித்தனார்
பிஷப் லெஸ்லி நியூபிகின்
8
02-01-1968
பாரதிதாசன்
மா.முத்துசாமி
மு. வரராசனார்
9
02-01-1968
வி.ஓ.சிதம்பரம்
10
07-11-1971
இளங்கோ அடிகள்
இரா. நெடுஞ்செழியன்
ம.பொ.சிவஞானம்
கண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.
கருணாநிதிக்கு 1975ல்வைத்தசிலை 1987ல்இடிக்கப்பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.
உயிருடன்இருந்தபோதுவைக்கப்பட்டசிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.
ஈவேராகருணாநிதிக்குசிலைவைக்கவிரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.
வேதபிரகாஷ்
16-12-2018.
[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”
Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST
[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”
[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்குமுன்பு (2008) பெரியாரைசெருப்பால்அடிப்பேன்என்றுக்கூறியதைபொறுத்துரௌத்திரம்பழகாததன்விளைவைதான்தற்போதுஅனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆண்டாள்எந்தசாதியில்பிறந்திருந்தால்என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.
கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டதாகசிலர்பேசுவதாகவேதனைதெரிவித்தகனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].
15-01-2018 கனிமொழிபேச்சு: ஆரூர் புதியவனின்[5] புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?
“கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டது”: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம். உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?
கருணாநிதியின்மவுனம்கூடநாத்திகம்பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள் கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.
[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
பொங்கல்பற்றிதிராவிடநாத்திகர்களின்குழப்பமானநிலைப்பாடு: 1940களிலிருந்து ஈவேராவின் “ஆரிய-திராவிட” திரிபுவாதங்களால், பொங்கல் பண்டிகைக்கும் மாற்று விளக்கம் கொடுக்கப் பட்டு, திராவிடத்துவவாதிகள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்த்து வந்தது தெரிந்த விசயம். பிராமணர் அல்லாத உயர்ஜாதி இந்துக்கள் ஆதிக்கம் பெறுவதற்காக, சைவமும் திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு, “இந்து-விரோத” ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டது[1]. அந்நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும், அரசு ஆதிக்கத்துடன், தமிழ கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டு முதலிய காரணிகளை சிதைக்க “இந்து அறநிலையத் துறை” உபயோகப் படுத்தப் பட்டது. அண்ணாதுரை பொங்கல் பண்டிகையை எதிர்க்கவில்லை, அதனை “புனித பொங்கல்” என்றார்[2]. கருணாநிதி ஆரம்பத்தில் எதிர்த்தாலும், பிறகு வியாபார ரீதியில் “சமத்துவ பொங்கல்” ஆக்கினார்[3]. “சங்க இலக்கிய சரித்திர ஆதாரங்களுக்கு” முரண்பட்ட, விரோத கருத்துகளைப் புகுத்தி கெடுக்கப்பட்டது தான் “தமிழர் (பொங்கல்) விழா”. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய முறையில் கொண்டாடி வருவதால், பேச்சுடன் வைத்துக் கொண்டு, மற்ற சின்னங்களை அப்படியே திராவிடத்துவத்தில் அடக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில், அதில் முக்கியமாக இருப்பது கோடிக் கணக்கான வியாபாரம், லாபங்கள்!
சென்னைசங்கமும், ஊழல்பொங்கல்கொண்டாட்டங்களும்: “சென்னை சங்கமம்,” கிறிஸ்தவ பாதிரி ஜகத் காஸ்பரின் “தமிழ் மையம்” மற்றும் தமிழக அரசு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை சேர்ந்து, கனிமொழி நடத்த ஆரம்பித்தார். இலக்கிய ரீதியிலும் தேசவிரோத கருத்துகளை பரப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸிடமிருந்து தமிழ் மையத்திற்கு பெரிய நிதி வழங்கப்பட்டது குறித்தும், சி.பி.ஐ. விசாரணை நடந்தது. தமிழக அரசின் ஆதரவுடன் 2007ல் தொடங்கி, இதன் நான்காவது நிகழ்வு ஜனவரி 10 முதல் 16. 2010 வரை நடைபெற்று, பிறகு கோடிக்ககணக்கானா ஊழல் புகாரினால் முடங்கியது[4]. இவ்வாறு சித்தாந்தம் மற்றும் பணம் சம்பாதிக்கும் பின்னணியில் தான், திராவிட நாத்திக அரசியல்வாதிகளின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருந்தது. ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு “இனாம்” கொடுக்கும் முறையும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆக, 2018ல் கனிமொழி இந்துமதத்தை நாத்திக மாநாட்டில் கேவலப் படுத்திய நிலையில், சகோதரர் ஸ்டாலின், இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதை கவனிக்கலாம்.
பொங்கல்விழாவில்கலந்துகொண்டஸ்டாலின்: திமுக சார்பில் சென்னை அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணம் கட்டியும், மேடைகள் அமைத்தும் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்பட்டதை, அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், தமிழகம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய்க்கொண்டிருப்பதாக கூறினார்[5]. திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். தை பிறக்கும் காலத்தில் நல்ல விடிவுகாலம் பிறக்கப்போகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அரசியல் ரீதியாக நாட்டைப்பிடித்துக் கொண்டிருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும் என்றும் கூறினார்[6]. ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்[7]. கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[8].
ஸ்டாலின்முழுபேச்சு: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது. கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை.
காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார்[9]. நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்[10].
[3] திகவின் வீரமணி “விடுதலை,” கருணாநிதியின் “முரசொலி,” நாத்திக-திராவிட சித்தாந்திகள் அத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஏமாற்றி வந்தனர்.
[4] The searches were conducted at Tamil Maiyam, an NGO founded by Jegath Gasper Raj, in Mylapore. Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi, a DMK Member of Parliament, is a trustee of Tamil Maiyam, the key organisation behind Chennai Sangamam, a high-profile cultural event held since 2007.
The CBI recorded the statement of an employee of Green House Promoters Pvt Ltd whose Managing Director Batcha had fired over 40 employees on the recommendation of Balwa. Batcha, who was interrogated by the CBI, was found dead under mysterious circumstances in Chennai in March 2016. ….one company of DB Group, Eterna Developers Pvt Ltd had some business transactions with Green House Promoters Pvt Ltd. It (Eterna Developers) transferred around Rs 1.25 crore to Green House Promoters and after some time, this amount was paid back by Green House Promoters to Eterna Developers…..
திராவிடத்துவவாதிகளின் முரண்பாடு: திராவிட அரசியல்வாதிகள், சித்தாந்திகள், பேச்சாளிகள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் உள்ளவர்களுக்கு, உறுதியான கொள்கையோ, சித்தாந்தத்தில் பிடிப்போ, பேச்சில் ஸ்திரமோ இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். “சுயமரியாதை” என்றெல்லாம், பீழ்த்திக் கொண்டாலும், மரியாதை இல்லாமல், வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் நடந்து வந்துள்ளார்கள். ஒருவரையொருவர் வசைப்பாடிக் கொண்டு, கட்டித் தழுவி வேடமிட்டு நடித்துள்ளார்கள். சினிமாமாவும், அரசியலும் ஒன்றாக வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கூத்தாடிகளுக்கு அதெல்லாம் இல்லை என்பதால், முரண்பாட்டைப் பற்றியும் கவலைப் படவில்லை. பிரமாணரான ஜெயலலிதாவின் நிலை திராவிட அரசியலில் அப்படித்தான் இருந்தது. திராவிட அரசியல்வாதிகள் அவரை நன்றாகப் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதிலும், முதலமைச்சாரக் இருந்த காலத்தில், அவரை வசைப்பாடியவர்கள் எல்லோரும் அவரது கால்களில் வந்து விழுந்தார்கள். வீரமணியும் விலக்கல்ல.
பாப்பாத்தி-ஜெயலலிதாவை வசைவு பாடிய திராவிடர்கள், புகழ்வது-போற்றுவது: ஜெயலலிதாவை நேரிலும், மறைமுகமாகவும், ஊடகங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், கொச்சையாக, கேவலமாக, பெண் என்று கூட பார்க்காமல் விமர்சித்துள்ளார்கள். வயது முதிர்ந்த நிலையில் இருந்த மூப்பனார் முதல், இருக்கும் கருணாநிதி வரை அவ்வாறுதான் பேசியுள்ளனர். அது, வெறும் “ஆணாதிக்கம்” என்ற முறையில் இல்லை, மிக அருவருப்பான திராவிட பாரம்பரியத்தில் ஊறிய நிலையில் வெளிப்பட்ட வார்த்தைகள், வசைவுகள் மற்றும் தரமற்ற விமர்சனங்கள். “பாப்பாத்தி” என்று தாராளமாக பேசி, எழுதி வந்துள்ளதை, அவர்களது அங்கீகாரத்தில், அவர்களே ஆசிரியர்கள் என்று வெளிவரும் “விடுதலை”, “முரசொலி” முதலியவற்றில் தாராளமாகப் பதிவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தாராளமாக பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவ்விசயத்தில் வீரமணியும் சளைத்தவர் அல்ல. இருப்பினும், திகவிற்கு ரூ. ஐந்து லட்சம் நிதி வாங்கியபோதும், இடவொதிக்கீடு விசயத்திலும், “சமூகநீதி காத்த வீராங்கனை” என்று பாராட்டி தப்பித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தீபாவை ஆதரிப்பது-எதிர்ப்பது “ஆரிய-திராவிட போராட்டமா?: இப்பொழுது, தீபா என்ற ஐய்யங்கார் பாப்பாத்தியை தூக்கிப் பிடித்து, அவரை தலைவராக்கி விட்டால், மறுபடியும், திராவிடர்கள் பாப்பாத்திக்கு அடிமையாக நேரிடும் என்ற நோக்கில், பழைபடி “நடப்பது ஆரியர் -திராவிடர் போராட்டமே!” என்று ஆரம்பித்துள்ளார். முன்பு ஜெயலைதா, அதிமுகவின் தலைமை ஏற்றபோதும், முதலமைச்சர் ஆனபோதும், “ஆரிய-திராவிட போராட்டம் ஆரம்பித்து விட்டது” என்று குறும்புத்தகம் எல்லாம் வெளியிட்டார், “விடுதலை”யில் எழுதினார். இன்றும், அதே பல்லவியைப் பாட ஆரம்பித்துள்ளார். போதாகுறைக்கு, இன்று பிஜேபி தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. மத்தியிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளதால், திராவிட கட்சிகளின் தாக்கம் குறைந்து விடுமோ, திராவிடம் மறைந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதனால், மறுபடியும், பார்ப்பனீய எதிர்ப்பு, வசைவு என்று ஆரம்பித்து விட்டார் எனலாம்.
“திஇந்துவுக்கு” திகவீரமணியின்பேட்டி (13-01-2017)[1]: சென்னை, ஜன.13, 2017 அன்று, நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இந்து (தமிழ்) (13.1.2017) ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, என்று “விடுதலை”யில் பெருமையாக வெளியிட்டுக் கொண்டார்.” சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பாஜக தூண்டி விடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி, பின்வருமாறு[2]. வழக்கம்போல, இடது பக்கத்தில் வீரமணியில் பதில் மற்றும் வலது பக்கத்தில் என்னுடைய விளக்கம், விமர்சனம் சேர்க்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாமறைவுக்குப்பிறகுசசிகலாவுக்குநீங்கள்ஆதரவுதெரிவிப்பதுஏன்?: என்ன காரணத்துக்காக சசிகலா எதிர்க்கப்படுகிறாரோ, அதற்காகவே அவரை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது.
ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதில்லை. இந்த இருவரின் ஆட்சியில்தான் 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்தது. அவர்கள் வழியில் அதிமுகவை வழிநடத்த பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த சசிகலாவால் முடியும் என நம்புகிறோம்.
“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவு” என்பதை கேட்டவரும், பதில் சொன்னவரும் எப்படி புரிந்து கொண்டாரோ தெரியவில்லை. ஆனால், திக உயர்ஜாதி ஆதிக்கத்தை ஆதரிக்கிறது என்பது தெரிகிறது. அதுதான், பெரியாரின் கொள்கையாகவும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி கவலைப் படவில்லை.
பிராமணர்அல்லாதவர்என்பதுதான்உங்களதுஅளவுகோலா?[3]: பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் மட்டும் சசிகலாவை ஆதரிக்கவில்லை.
ஜெயலலிதாவின் நிழலாக அவரது வாழ்விலும், தாழ்விலும் 33 ஆண்டுகள் உற்ற துணையாக இருந்தவர். ‘இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’ என்பார் பெரியார். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்தி குறுக்கு வழியில் தமிழகத்தில் காலூன்ற பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிடுகின்றன. இதை முறியடிக்கவே சசிகலாவை ஆதரிக்கிறோம்[4].
ஆக திராவிட உயர்ஜாதி ஆதிக்க அரசியலை மறைக்க, பார்ப்பன எதிர்ப்பு உபயோகப் படுகிறது. ‘நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’, என்ற செல்லாத, சரித்திர ஆதாரமில்லாத கொள்கையை வைத்துக் கொண்டு தான், திராவிட சித்தாந்திகள் காலந்தள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உழைப்பில்லாம, மக்கள் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அல்லது யாரும் காலூன்ற முடியாது. அதேபோல, காலாவதியான, உபயோகமற்ற சித்தாந்தங்களையும் மக்கள் தூக்கி எரிந்து விடுவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 2 சதவீதவாக்குவங்கியைக்கொண்டபாஜகவால் 40 சதவீதவாக்குவங்கியைக்கொண்டஅதிமுகவைகபளீகரம்செய்துவிடமுடியுமா?: மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் முடியும் என்பதே கடந்தகால வரலாறு.
அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போல தமிழகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிடுகிறது. தமிழகத்தில் காலூன்ற என்ன செய்யலாம் என்பது குறித்து பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாமூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பிஜேபியில் சேருவார்களா, பிஜேபிகாரர்கள் ஒப்புக் கொள்வார்களா? அமித்ஷா என்ன அந்த அளவுக்கு முட்டாளா? இதையெல்லாம் மறைத்து, வீரமணி “பூச்சி” காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் பலம், ஆதரவு, ஓட்டுவிகிதம் முதலியவை மற்றும் திராவிடத்துவத்தின் காலாவதித்தனம், இவைதான் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும்.
[1] தி.இந்து, தமிழக ‘அரசியலில்வெற்றிடம்இல்லை; சசிகலாவைவீழ்த்ததீபாவைதூண்டிவிடும்பாஜக: கி.வீரமணிசிறப்புபேட்டி, எம். சரவணன் Published: January 13, 2017 09:44 ISTUpdated: January 13, 2017 09:46 IST
பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்
திருவள்ளுவரைஹிந்துமதத்தைச்சார்ந்தவர்என்றுசாயம்பூசி, அதிகாரப்பூர்வமாக்கிஅரசுஇயந்திரத்தின்மூலம்பரவச்செய்தால்ஏற்படும்கேடுபன்மடங்காகிவிடும்: வீரமணி தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறார், “இதில்திருவள்ளுவரின்திருக்குறளில்இல்லாதமோட்சம் – “வீடு” இருப்பதாகதவறாகவிளக்கமும்கூறிதிரிபுவாதம்செய்யப்பட்டுள்ளது.அத்தகையகோணத்தில்மத்தியஅரசுதிருவள்ளுவரைஹிந்துமதத்தைச்சார்ந்தவர்என்றுசாயம்பூசி, தம்இச்சைபோலவளைத்துவிடவோ, திருவள்ளுவர்பிறப்புப்பற்றியதவறான – அருவறுக்கதக்ககதைகளைகூறி, அவற்றைஅதிகாரப்பூர்வமாக்கிஅரசுஇயந்திரத்தின்மூலம்பரவச்செய்தால்ஏற்படும்கேடுபன்மடங்காகிவிடும். எனவே, விழிப்புணர்வுடன்வரவேற்கவேண்டியஅறிவிப்புஇதுஎன்றுதமிழ்கூறும்நல்லுலகத்தினையும், ஏனையோரையும்எச்சரிக்கவேண்டியதுநமதுமுக்கியகடமையாகும்”, இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். அரசு ஆவணங்களில் இந்து என்றுதான் போட்டுக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர், பிறகென்ன, இந்த வெத்துவேட்டு வெங்காயம் / எதிர்ப்பெல்லாம் என்று கருப்புச்சட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும்[1]. பகுத்தறிவு-சுயமரியாதை திருமணமே இந்து திருமண சட்டத்தில் ஐக்கியமானதும் நினைவு கூரத்தக்கது[2].
பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.3
கிருஷ்ணன்என்னஉனக்குமட்டும்தானாதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்குஎன்னதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்! ஆக, எங்கள்கிருஷ்ணனைப்பற்றிபேசிவிட்டார்களாஎன்றுநீங்கள்கேட்கிறீர்கள். கிருஷ்ணன்என்னஉனக்குமட்டும்தானாதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்! ஏனென்றால், நீகிருஷ்ணன்என்றுசொல்கின்றகடவுளைப்பற்றி, உன்மூக்கைசொறிந்து, திசைதிருப்பிவிட்டிருக்கிறார்கள்யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும்.
பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.2
ஒருலட்சம்பிரதிக்குமேல்விற்பனையாகிய கீதையின்மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்!கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை!எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ் ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”. இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.
சைவ-வைணவ சிண்டு முடிக்கும் வீரமணி. மாமா
பகவத்கீதையைபுனிதநூலாகசைவர்கள்ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணிபேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[6]: “பகவத்கீதைமுழுமையானஇந்துநூலாககருதப்படுவதில்லை. இந்துமதம்என்பதுபலபிரிவுகளைகொண்டது. அந்தவகையில்வைணவர்கள்தான்பகவத்கீதையைஇந்துமதத்தைசார்ந்ததுஎனக்கூறுகின்றனர். சைவர்கள்பகவத்கீதையைஏற்கமாட்டார்கள். அதேபோலமற்றபிரிவுகளைசார்ந்தவர்களும்இதைஏற்றுகொள்வதில்லை. எனவேஇந்துமதத்தைஇந்நூல்முழுமையாகஉரிமைகொண்டாடமுடியாது. ஆனால்மத்தியஅரசுதேசியபுனிதநூலாகபகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[7]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.
[1] திராவிடத்துவவாதிகளின் இரட்டைவேடங்கள் இனிமேலும் எடுபடாது. குடும்ப வாழ்க்கை-மேடை வாழ்க்கை என்று போலித்தனமாக வாழும் இவர்கள் இனி மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள். இருக்கும் கூட்டம் இன்னும் 50-100 ஆண்டுகள் வரை கத்திக் கொண்டிருக்கும்.
[2] 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்கசுயமரியாதைதிருமணம்சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.
வீரமணிக்குகீதைமீதுபிறந்தகாதல்: வீரமணி போன்ற இந்து-விரோதத்துவம் கொண்ட நாத்திகர்களே இன்று பகவத் கீதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். போதாகுறைக்கு, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கோல்வால்கர் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். சரி, கோல்வால்கருக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு விவரிக்க ஆரம்பித்தது தமாஷான விசயம் தான். ஆனால், இதை முன்னமே எடுத்துக் காட்டியுள்ளார். கோல்வால்கர் திருக்குறளை பொதுநூலாக பாவித்தார், ஆனால், திராவிடத்துவவாதிகள் அதனை தமிழர் நூல், திராவிடர்களின் நூல் என்று குறுகிய நோக்கில் சுருக்கினர். குறளைப் படித்து, மற்ற இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சமஸ்கிருத இலக்கியத்துடனான நெருக்கம் தெரிந்தது[1]. இதனால், அதிலுள்ள நீதி, நேர்மை, தார்மீகக் கருத்துகள் வேத-உபநிஷ்ட நூல்களிலிருந்து பெற்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினர்[2]. மேலும், குறள், சூத்திரங்கள் போன்று ஈரடி, ஏழு சொற்கள், சுருங்கச் சொல்லுதல் முதலிய விதிகளையும் பின்பற்றியிருப்பதை எடுத்துக் காட்டினர். இதனால், தனித்தமிழ் இயக்க தமிழ் பண்டிதர்கள் அவ்வாறில்லை என்பதனை எடுத்துக் காட்டவே திரிபு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்
திருக்குறள் மறைமுக எதிர்ப்பு தேச-விரோதமானது: இது 1960களில் ஜைனர்கள், கிருத்துவர்கள் போன்றோரை ஊக்குவித்தது. அவர்கள் குறள் தங்களது நூல் தான், வள்ளுவரும் தங்களது மதத்தவர் தான் என்று கதைகளைக் கட்டிவிட ஆரம்பித்தனர்[3]. வள்ளுவர் குந்தர்-குந்தரின் மாணவர் என்றும் அவரிடத்திலிருந்து குறளைத் திருடிச் சென்று தனது என்று அரங்கேற்றி விட்டார், இல்லை அவரே குந்த்-குந்தர் தான்[4] என்று ஜைன ஆராய்ச்சியாளர்கள் கதை கட்டினர். கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று, தாமஸ் சென்னைக்கு வந்தார், வள்ளுவரை சந்தித்தார், வள்ளுவர் அவரிடத்திலிருந்து பைபிள் கற்றுக் கொண்டு, அதன் தாக்கத்தில் தான் குறளை எழுதினார் என்று பெரிய கட்ட்டுக் கதையைக் கட்டி விட்டனர். போதாகுறைக்கு அத்தகைய போலித்தனமான கள்ள ஆராய்ச்சிகளுக்கு, அவர்களால் ஏற்படுத்தப் பட்ட பல்கலை பிரிவுகள்-சேர்களால் பட்டங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் கருணாநிதி முதல் தமிழ்த்துறையில் உள்ள ஊழியர் வரை உதவி செய்துள்ளார்கள் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
Bhagavatgita, sedition, Tilak
பகவத்கீதைஎதிர்ப்பு–ஆந்நியர்ஆட்சிமுதல்திராவிடஆட்சிவரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதினார். இதுவொன்றும் புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. தேசதுரோக அறிக்கை கமிட்டி அதனை தடை செய்யவும் முற்பட்டது. திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். போதாகுறைக்கு இதே மதத்தில் (செப்டம்பர் 2015) தான் திருப்பதியில் 9 முதல் 11 வரை “ஶ்ரீமத் பகவத் கீதை”ப் பற்றி தேசிய மாநாடு நடந்துள்ளது[5].
Balagangadhara Tilak- Gandhi and Gita
தருண்விஜய்யின்தமிழ்த்தொல்லை, தினமணியின்கொசுத்தொல்லை, வீரமணியின்ஓடோமாஸ்கொள்ளை: ஆகஸ்ட் 2014ல் ஆர்.எஸ்.எஸ் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றது[6]. இந்து-விரோத தளங்கள் இப்படியெல்லாம் புலம்பித் தள்ளின[7], “தருண்விஜய்யின்தமிழ்த்தொல்லையும், தினமணியின்கொசுத்தொல்லையும்நாளுக்குநாள்தாங்கமுடியவில்லை. வடமாநிலங்களில்திருக்குறள்பயிற்றுவிப்பு, திருவள்ளுவர்பிறந்தநாள்கொண்டாட்டம், திருக்குறளைதேசியநூலாகஅறிவிக்கவேண்டும்என்றுவரிசையாகஇந்தஆர்.எஸ்.எஸ். நரிவைக்கும்ஊளையில்காதுகிழிகிறது!திருக்குறளைத்தூக்கிக்கொண்டுகாவிதுடிக்கஅலையும்இந்தநரி, மத்தியப்பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள்எனசமஸ்கிருதத்தைதிணித்துக்கொண்டேவரும்ஸ்மிருதிராணியுடன்சேர்ந்து ‘திருக்குறள், தமிழுக்குஆதரவு’ போஸ்கொடுத்தது.அடுத்தசீன், மத்தியஉள்துறைராஜ்நாத்சிங்கைசந்தித்துதிருக்குறள்அறிமுகம்செய்துதிருவள்ளுவர்சிலையைகைமாத்தியது. உடனேஉளவுத்துறையைகையில்வைத்திருக்கும்உள்துறைஅமைச்சர்பார்வையாளர்கண்களில்தெரியும்படிதமதுஅறையில்சிலையைவைக்குமாறுஉத்திரவிட்டார். போதாதா? “பா.ஜ.க.வின்தமிழ்க்காதல்” பாரீர்என! தினமணிமாமாமூணுகாலத்துக்குபடுத்துப்புரண்டு, பாரடா! எங்கள்பார்ப்பனசமர்த்தைஎன்றுதொடையைத்தட்டுகிறார். திருவள்ளுவர்படத்துக்கேபூணூல்போட்டுஅவர் ‘எங்களவா?’ என்றுஆள்கடத்தல்செய்ததமிழகபார்ப்பனக்கும்பலையும்தாண்டி, திருவள்ளுவர்திரும்பவரவாபோகிறார்என்றதைரியத்தில்தருண்விஜய்சீன்போடுகிறார்”. தருண் விஜய்க்கு சாபம் கொடுத்தன, வசை பாடின[8]. அவர் தமிழ் மீது காட்டும் காதல் பொய்யானது என்றும் கூறின[9].
tarun-vijay-vairamuthu-11
வீரமணியின் கீதை காதலும், தருண் விஜயின் குறள் காதலும்: தருண் விஜய்க்கு திடீரென்று திருக்குறள் பற்று வந்து, அதனை ஆதரித்து, “திருவள்ளுவர் நாள்” என்றெல்லாம் அறிவித்தவுடன், வீரமணி உஷராகி விட்டார். வீரமணியின் கீதை மீதான காதல் அலாதியானது. ஆக, இந்த இரு காதலர்களும் மறைமுகமாகத் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வீரமணி தருணுக்கு எப்படியாவது செக் வைக்க அரும்பாடு பட்டார். இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்றும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்[10].
tarun-vijay-vairamuthu-21
திருவள்ளுவர்நாள்அறிவிப்பு: தமிழ்நாட்டில்ஆர்.எஸ்.எஸ். வேரூன்றபயன்படுத்தக்கூடாது: கி.வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 29.11.2014 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி – நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான ‘பாஞ்சன்யா’வின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும். இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, “கண்ணி வெடியாகவோ” பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில ‘தமிழறிஞர்கள்’கூட எண்ணக் கூடும். அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்
கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் ‘ஞான கங்கை’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169). அந்நூலில் – எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை – ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார். அப்பகுதி இதோ: “தற்காலத்தில்தமிழைப்பற்றிநாம்அதிகம்கேள்விப்படுகிறோம். தமிழ்என்பதுதனக்கெனவேறானகலாசாரமுடையதனிப்பட்டமொழிஎன்றுகூறுகின்றனர். அவர்கள்வேதத்தில்நம்பிக்கைகொள்ளமறுக்கின்றனர். திருக்குறளைஅவர்களதுமறையாகக்கருதுகின்றனர். திருக்குறள்இரண்டாயிரம்ஆண்டுகட்கும்மேற்பட்டஒருபழைமையானஅறநூல்தான். திருவள்ளுவமுனிவர்அதன்ஆசிரியர்ஆவார். அவரைநாம்நமதுப்ராதஸ்மரணத்தில்நினைவுகூர்கிறோம். மிகப்புகழ்பெற்றபுரட்சிவாதியானவ.வே.சு. அய்யர்திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழிபெயர்த்துள்ளார்). திருக்குறளில்நாம்காண்பதுஎன்ன? நாடெங்கும்அறிமுகமானநான்குவிதவாழ்க்கைமுறை (சதுர்விதபுருஷார்த்தம்) அதில்விஷயமாகக்கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப்பற்றியஅத்தியாயம்மட்டும்முன்னால்வைக்கப்பட்டுள்ளது. அதுஎந்தக்கடவுளையும்அல்லதுஎந்தவழிபாட்டுமுறையையும்பின்பற்றுமாறுகூறவில்லை. மோட்சம்என்றஉயர்ந்தவிஷயத்தைப்பற்றியேகூறுகின்றது. எனவே, அதுஎந்தஒருசாரரின்நூலும்அல்ல. மகாபாரதம்கூடதிருக்குறள்கூறுவதுபோன்றவாழ்க்கைமுறைகளையேபுகழ்ந்துகூறுகின்றது. ஹிந்துக்களிடம்அல்லாதுமற்றஎந்தமதத்தவரிடமும்இவ்வாறானசிறந்தவாழ்க்கைமுறைநோக்குகாணப்படவில்லை. எனவே, திருக்குறள்சிறந்தஹிந்துக்கருத்துக்களைத்தூயஹிந்துமொழியில்எடுத்துக்கூறும்ஒருஹிந்துநூல்ஆகும்”, என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.
[4] Jainism is oldest organized religion in world and also it is first organized religion of Dravid culture (refer Archaeology Director in Mahal , Madurai). Thiruvalluvar( Acharya kund kund) was a Jain saint (Naked) who contributed to Tamil Civilization, Tamil Script and Tamil culture, later who was renamed as Thiruvalluvar- You don’t have to trust our claim( you can verify this fact with Dr. Skandalingam, Director of State Archaelogy, Mahal, Madurai Tamilnadu) your narrow brain will be refreshed with fresh information.
[6] உச்சநீதிமன்ற நீதிபதி தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
நக்கீரன், திருவள்ளுவர்நாள்அறிவிப்பு: தமிழ்நாட்டில்ஆர்.எஸ்.எஸ். வேரூன்றபயன்படுத்தக்கூடாது: கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 29, நவம்பர் 2014 (17:43 IST) ;மாற்றம் செய்த நாள் :29, நவம்பர் 2014 (17:43 IST).