கருணாநிதியின் தொகுதியில் கிளப்புகளில் கன்றாவியான குத்தாட்டம்!
விதிகளை மீறி மது கிண்ணத்துடன் ஆட்டம் போட்டதாகவும் புகார்
விதிகளை மீறி மது கிண்ணத்துடன் ஆட்டம் போட்டதாகவும் புகார்: சென்னையில் `டிஸ்கோத்தே’ நடன கிளப்புகளில் அதிரடி சோதனைஅழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் கொண்டாட்டம் அம்பலம்சென்னை,மே.3-சென்னையில் கலாசார நடன கிளப்புகளில் அழகிகளுடன் ரசிகர்கள் மது கிண்ணத்துடன் ஆட்டம் போடுவதாகவும், ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் அழகிகளுடன் கிளு,கிளுப்பு நடனம் ஆடுவதாகவும், வந்த புகாரின் பேரில் போலீசார் 2 நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.திடுக்கிடும் புகார்கள்சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் சரகங்களில் 2 இடங்களில் கலாசார நடன கிளப்புகள் உள்ளன. கடுமையான விதிமுறைகள் விதித்து போலீசார் இந்த நடன கிளப்புகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த நடன கிளப்புகளில் நடன நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. போலீசார் வகுத்து கொடுத்த விதிமுறைகளில், இரவு 11 மணிக்கு மேல் நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது, ஆபாச நடனம் இடம்பெறக் கூடாது, மது விருந்து நடத்த கூடாது, அழகிகள் அருகில் ரசிகர்கள் செல்ல அனுமதிக்க கூடாது போன்றவை இடம்பெற்றிருந்தன.ஆனால் போலீஸ் வகுத்து கொடுத்த விதிகளை மீறி, மது கிண்ணத்துடன் ரசிகர்கள் அழகிகளுடன் ஆட்டம் போடுவதாகவும், அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளிவீசி ரசிகர்கள் களியாட்டம் நடத்துவதாகவும், புகார்கள் வந்தன. இதனால் அந்த கிளப்புகளில் சோதனை போட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அதிரடி சோதனைஇதன்பேரில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர் போலீஸ் படையுடன் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை போட்டனர். சோதனையில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது.இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட 2 நடன கிளப்புகளையும் மூடிவிட்டனர். நடன கிளப்புகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு போட்டு கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.அழகிகள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-உல்லாசத்துக்கு அழைப்புகலாசார நடனம் என்ற பெயரில் போலீஸ் அனுமதி வாங்கி விட்டு, விதிமுறைகளை மீறி `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிப்பதாகவும், மது விருந்து நடப்பதாகவும், ரசிகர்களை அழகிகளோடு ஆட்டம் போட வைப்பதாகவும், புகார்கள் வந்தன. இதன்பேரில் சோதனை போடப்பட்டு, பால்ஸ் மற்றும் சுருதி பேலஸ் என்ற நடன கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. போலீஸ் சோதனை போட்ட போது 25 ரசிகர்கள் அழகிகளோடு ஆட்டம் போட்டுள்ளனர்.ரசிகர்களிடம் தலா ரூ.150, ரூ.200 வீதம் டிக்கெட் பணம் வாங்கி உள்ளனர். தினமும் 2 காட்சிகள் நடத்தியுள்ளனர். இது பரவாயில்லை. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் அழகிகளின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அவர்களை ரசிகர்கள் உல்லாசத்துக்கு அழைப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கலாசார நடன கிளப்புகள் என்ற பெயரில் `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிக்கும் கிளப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்