ஆனைமுகத்தோனுக்குஆனைவெடிவைத்துஉடைத்தேன்என்றுஆண்டிப்பட்டிராஜா, ஆனைமுத்துஇழவுவிழாவில்பேசிஒப்பாரிவைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)
அம்மா கொடுத்த விபூதிகளை முதலில் பூசிக் கொண்டேன், பிறகு தூக்கி எறிந்தேன்: “1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விபூதிகளை வச்சுக்கோ, இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. …….அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன். அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. …” சிறுவயதில் அத்தகைய எண்ண உருவானது, என்பது, மனோதத்துவ ரீதியில் அலசவேண்டியுள்ளது. ஆனைமுத்து வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் தான். ராசாவைப் போல யாரும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் புண்படும் படி நடந்து கொள்ளவில்லை.
நானேநினைத்தாலும்இந்துவாகஇருந்துஎன்னால்வெளியேறமுடியாது: ஏ.ராசா பேசியது, “என்வாழ்வில்நான்மாற்றியதற்குகாரணம்பெரியார்பேசியஅந்தகடைசிபேச்சுதான். தொடர்ந்துபேசியஅவர்நானேநினைத்தாலும்இந்துவாகஇருந்துஎன்னால்வெளியேறமுடியாது[1]. ஏன்என்றால்இந்துஅமைப்புசட்டத்தில்யார்கிறிஸ்துவர்கள், யார்இஸ்லாமியன், யார்யூதன்இல்லையோமற்றஅனைவரும்இந்துஎன்றுதான்சட்டம்உள்ளது. எனவேநானேநினைத்தாலும்வெளியேறமுடியவில்லைஅப்படிவெளியேறினால்அந்தநாள்வந்தால்அதுதான்ஆனைமுத்துவிற்குமரியாதைசெய்யும்நாளாகஇருக்கும்,” என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்[2]. இங்கு, அம்பேத்கர் அரசியல் சாசனம் சரியில்லை என்கிறாரா அல்லது இந்துசார்புடையது என்கிறாரா என்பதை கவிக்க வேண்டும். அம்பேத்கர் இந்துவிரோதி, இந்துமதத்தை வெறுப்பவர், தோஷிப்பவர்….. அதனால் தான், அவரது பேச்சுகளும், புத்தகங்களும் அவ்வாறே இருந்தன. பிறகு, அவரது அரசியல் சாசனம், நிர்ணய சட்டத்தைக் குறை சொல்வது ஏன் என்று தெரியவில்லை.
ராசாகொடுக்கும்விளக்கம்[3]: ‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே! அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான். வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல. யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது.‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார். இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை. தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.: என்றெல்லாம் விளக்கம் கொடுத்தது விசித்திரமாக இருந்தது[4].
இந்துவிரோதம்மற்றும்எங்ககட்சியில்இந்துக்கள்உள்ளார்கள்என்றமுரண்பாடுதொடரும்: ஆ. ராசா என்கின்ற ஆண்டிப்பட்டி ராஜா இந்து-துவேசம் பேசுவது புதியதல்ல. அவரது வீடியோ பேச்சுகள் ஏற்கெனவே அந்த இதுவிடரோதத் தன்மையினை வெளிக்கட்டியுள்ளது. ஸ்டாலின் விபூதியை அழித்தது போல, இவரும் தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறார் போலும். தாயின் மத உணர்வுகளைக் கூட மதிக்காதவர்களை மக்கள் புரிந்து கொள்வர்கள். அதே போலத்தான், துர்கா ஸ்டாலின், தனது கணவனுக்கு நேர்த்திக் கடன் செய்வது, விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, சமஸ்கிருத சுலோகங்கள் சொல்லி பாராயணம் செய்வது போன்ற காரியங்கள். தனது மாமனாருக்கும் காசிக்குச் சென்று காரியங்களை செய்து வந்துள்ளார். ஆனைவெடி வைத்து ஆனைமுகத்தோனை உடைப்பேன். ஆனால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், திமுகவினரும் சொல்ல மாட்டார்கள்! ஆக, திமுகவின் இரு வேடங்கள் தெரிந்த விசயமே. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும். பிரச்சாரம், விளம்பரங்கள் அதிகமாகும்.
ஆ.ராசாவின் சித்தாந்தம் என்ன?: சிறுவயதிலிருந்து வெடி வைகத்தேன், உடைத்தேன் போன்ற மனப் பாங்கு, வன்முறையினைத் தான் காட்டுகிறது. அத்தகைய உணர்சுகள் அவர் முகத்திலும்வெளிப்படுவது, புகைப்படங்களில் காணலாம்.
ஈவேரா உடைத்தார், அதனால் நானும் உடைத்தேன் என்பது அந்த துலுக்க விக்கிரங்களை உடைக்கும் தீவிரவாதத்தை தான் காட்டுகிறது.
ஏனெனில், மொஹம்மதைப் போலத்தான், தானும் மொஹம்மது என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவில் கஜினி-கோரி மொஹம்மதுகள் தீவிரவாதத்துடன் கோவில்களை இடித்தார்கள், விக்கிரங்களை உடைத்தார்கள், செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றாற்கள்.
தென்னகத்தில்மாலிக்காபூர் இடைக்காலத்தில் அவ்வாறு செய்தான். இப்பொழுது, நவீன காலத்தில் திராவிடத்துவ வாதிகள் செய்து வருகின்றனர்.
சிலை உடைப்பு சித்தாந்தம், நியாயப் படுத்துத்தல், பெருமைப் பேச்சிக் கொள்வது எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
அண்ணா சொல்லியபடி, “இனம் இனத்தோடு சேர்கிறது,” கோவில் இடிப்புகள். விக்கிர உடைப்புகளும் அவ்வாறே உள்ளன.
அம்மாவின் உணர்வுகளையும் மீறி, மதிக்காமல், அவர் கொடுத்த விபூதிகளை எறிந்தேன் என்பதெல்லாம், ஸ்டாலினை திருதிப் படுத்தவா, அல்லது அவரையும் விஞ்சிய திராவிடத்துவத் தலைவர் என்பதை எடுத்துக் காட்டாவா என்று தெரியவில்லை.
எஸ்.சி என்ற நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து, “நானேநினைத்தாலும்இந்துவாகஇருந்துஎன்னால்வெளியேறமுடியாது,” என்று பேசியிருப்பதெல்லாம், எப்படி இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் படியே ஏமாற்றுகிறார் என்பதும் தெரிகிறது.
“பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா: சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என்வாழ்வில்நான்மாறியதற்குகாரணம்பெரியார்பேசியஅந்தகடைசிபேச்சுதான். பெரியாரின்சிந்தனைகள்என்னுள்வந்தபின்புஊரில்இருந்தபிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவைத்துஅதைதகர்த்தவன்தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.
விளம்பரம்–தினசரிஅறிக்கை–அதிரடிடிவிசெய்திகள்மூலம்ஆட்சிநடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுகஆட்சிபொறுப்புக்குவந்ததுமுதல்அரசியல்ரீதியாகவும்நிர்வாகரீதியிலும்பல்வேறுஅதிரடிநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனாகாலம்தொட்டு, மழைவெள்ளம்பாதிப்புவரைஅரசுஎடுத்தஒவ்வொருநடவடிக்கைகளையும்மக்கள்வெகுவாகபாராட்டிவருகின்றனர். இதுஒருபுறம்இருந்தாலும்எதிர்க்கட்சிகளானஅதிமுக–பாஜகபிரச்சாரத்தின்போதுதிமுககொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றவில்லை, பொய்வாக்குறுதிகளைகொடுத்துஆட்சிக்குவந்துவிட்டதுஎன்றுதிமுகமீதுகடுமையானவிமர்சனங்களைமுன்வைத்துவருகின்றன. அதேபோல்பல்வேறுமாநிலங்களில்பெட்ரோலுக்கானமாநிலவரிகுறைக்கப்பட்டுள்ளது, அதேபோல்தமிழகஅரசும்அந்தவரியைகுறைக்கவேண்டும்எனதொடர்ந்துவலியுறுத்திவருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.
இந்துக்களைஎதிர்த்துவரும்கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.
கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில்அதைமெய்ப்பிக்கும்வகையில்திமுகநாடாளுமன்றஉறுப்பினர்ஆ.ராசாபெரியாரின்சுயமரியாதைமற்றும்கொள்கைபாதையைப்பின்பற்றியஆனைமுத்துபடத்திறப்புவிழாவில்இந்துமதத்தைதான்ஏன்எதிர்க்கிறேன்என்றும், காவிஎவ்வளவுஆபத்தானதுஎன்பதுகுறித்தும்விளக்கிபேசியுள்ளார். மேலும்கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருக்கவேண்டும்அப்படிஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.
ஆ.ராசாவின்பேச்சு – அதன்விவரம்பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயதுவரைவாழ்ந்து, 75 ஆண்டுகாலம்பெரியார்குறித்துமட்டுமேபேசிமறைந்தஆனைமுத்துபடத்திறப்புநிகழ்ச்சியில்கலந்துகொள்வதில்மகிழ்ச்சிஅடைகிறேன். அவருக்கும்எனக்கும்உள்ளதொடர்புநீண்டநெடியது, டெல்லிக்குவரும்போதெல்லாம்என்வீட்டிற்குவந்துநீண்டநேரம்பேசுவார். ஒருதத்துவத்தைகூறிஅந்ததத்துவம்நிறைவேறுவதைதன்கண்ணால்பார்த்தஒரேதலைவர்பெரியார்அந்தபெரியாரேபேரறிஞர்எனஆனைமுத்துவைகூறினார். அதைவிடஅவருக்குநாம்என்னபெருமையைசெய்யமுடியும். பூலோகரீதியாகஆனைமுத்துவும்நானும்ஒரேமாவட்டத்தைசேர்ந்தவர்கள்”.
[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம்ஒன்றாகட்டும்.. காவியைவிட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தைதெறிக்கவிட்டஆ.ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]
ஸ்டாலின் – அண்ணாசாலையில்கருணாநிதிசிலைநிச்சயம்அமைக்கப்படும்: அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தன்னை சந்தித்த போது இந்த கோரிக்கை தொடர்பாக தன்னிடம் வலியுறுத்துயதாக தெரிவித்தார்[1]. பெரியார் கட்டளையிட்டு திராவிடர் கழகம் வைத்த சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென கி.வீரமணி கோரிக்கை வைத்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்[2]. பொதுவான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தான் சுட்டிக் காட்டியதாக கூறிய முதல்வர், ஏற்கனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டதாகவும் எனவே மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவ எந்த பிரச்சினையும் இல்லை என கி.வீரமணி கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்[3]. அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியதாக கூறிய முதலமைச்சர், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்[4].
பலர் கருணாநிதியிடம், அவ்வாறு சிலை வைக்க வேண்டாம், நல்லதல்ல என்று அறிவுரை கூறினர்.
ஒருநிலையில், குன்றக்குடியும் எடுத்துக் காட்டினார், ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால், சிலை திறப்பு விழாவில், அவரையே உபயோகப் படுத்திக் கொண்டனர்.
வீரமணி பிடிவாதமாக இருந்தார். எல்லா வாதங்களையும் எதிர்க்க வேண்டுமானால், சிலை வைத்தே ஆகவேண்டும் என்று உசுப்பினார்.
மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா என்று சிலைகள் வரிசையாக இருக்கும் போது, அடுத்தது, கருணாநிதி சிலை இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுடன் எடுத்துக் காட்டினார்.
கருணாநிதியின் எம்ஜிஆரின் மீதான வன்மப் பேச்சுகள் தான், அவரது ரசிகர்கள், தொண்டர்கள், முதலியோரை எதிர்மறை விளைவுக்குத் தள்ளியது.
கருணாநிதியின் இத்தகைய செயல்களால் தான், 31-01-1976ல் ஜனாதிபதியா ஆட்சி நீக்க செய்யப் பட்டு, 31-01-1976 முதல் 30-06-1977 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்தது.
30-06-1977 அன்று எம்ஜிஅர் ஆட்சிக்கு வந்தார். நடந்த தேர்தலில் கருணாநிதி-திமுக படுதோல்வி அடைந்தது.
24-12-1987 அன்று எம்ஜிஆர் இறந்தாலும், 12-05-1996 வரை திமுக ஆட்சி நடந்தது.
அதாவது, 17-02-1980 முதல் 13-05-1996 வரை, கருணாநிதி ஆட்சியில் இல்லை. 16 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில்லாமல் தான் இருந்தார். இவரது “பெரியார் விக்கிரகம்,” பெரியார் அருள், ஆசீர்வாதம், மகிமை முதலியவை வேலை செய்யவில்லை.
அதை அவர், “அஞ்ஞான வாசம்” என்றாலும், அ. கணேசன் போன்ற ஜோதிடர்கள் உண்மையினை சொல்வர். இவர் நடத்திய பரிகார ஹோமங்கள், பூஜைகள் அவர் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியும்.
2018 – பெரியார்இருந்திருந்தால்ஏன்சிலைவைக்கிறீர்கள்எனக்கேட்டிருப்பார் – கமல்ஹஸன்: தமிழகத்தில் பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் சிந்தனை, கருத்துக்களுக்கு எதிராக இருந்தவர்களின் செயல்பாடுகள் இன்றும் தொடர்கிறது என்று சொல்வதில்லை தவறொன்றும் இல்லை. சிலை வழிபாடுகளுக்கு எதிராக பேசிய பெரியாருக்கு எதற்காக சிலைகள் என்ற கேள்விகள் எப்பொழுதும் முன்வைக்கப்படும். அதற்கான பதிலை பெரியாரே அவர் வாழ்ந்த காலத்தில் கூறி விட்டு சென்றுள்ளார். என்றெல்லாம், பெரியாரிஸ்டுகள் வாதம் செய்து வருகிறார்கள். 2018-ல் பெரியார் சிலை உடைப்பு பற்றி பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்த போது தமிழகத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. அந்நேரத்தில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் “சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான். ஆனால், அதை உடைப்பது கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்,” என ஈரோட்டில் பேசி இருந்தார். இது திராவிடத்துவவாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து விட்டது. இதனால், மறுபடியும், அதற்கு விளக்கம் கொடுத்தனர்.
விடுதலைஆதாரம்என்றுபழையக்கதையைசொன்னது: 29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றை செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றை செருப்பு தனக்கும் பயன்படாது, வீசியவருக்கும் பயன்பாடாது என்பதால் அதன் மற்றொரு ஜோடி செருப்பையும் பெற்றுக் கொண்டார் பெரியார் என்ற தகவல் விடுதலை நாளிலில் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு பின், அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 1972-ல் கருணாநிதி ஆட்சியில் கடலூர் மக்களால் பெரியாருக்கு சிலை திறக்கப்படுகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிலை திறப்பு நிகழ்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார். சிலைகள் வைப்பதற்கு பெரியாரே எதிர்ப்பார் என கமல்ஹாசன் கூறியது தவறான தகவல். சிலைகள் வைப்பதற்கு பெரியார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கமாட்டார். அதேபோன்று, ஏன் உயிருடன் இருந்தவர் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டார் என சிலரும் கேள்வி கேட்பதுண்டு. ஏ.ஆர். வெங்கடாசலபதி போன்ற சரித்திராசிரியர்களும், இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. கருணாந்தம், எங்கேயாவது உட்கார்ந்து, தூங்கிக் கொண்டிருப்பார். சுப.வீரப் பாண்டியனும் கண்டுகொள்ளமட்டார். விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
உயிரோடுஇருப்பவர்களுக்குசிலைவைக்கலாம்என்றுநியாயப்படுத்திவாதித்தது: பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ளவில்லை. சிலைகள் மக்கள் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை பிரச்சாரமாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். சிலை என்பது வழிபாட்டுக்குரியது அல்ல. பயன்பாட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார். சிலைகளே பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்யும் என அவர் நினைத்தார். “பிற்காலத்தில்ராமசாமினுஒருத்தன்இருந்தான். அவன்பகுத்தறிவுபிரச்சாரம்பண்ணிக்கிட்டுஇருந்தானுபேசுவாங்க. அதுக்காகதான்இந்தசிலை,” என பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாக மின்னம்பலம் செய்தியில் வெளியாகி இருக்கிறது. விடுதலை நாளிதழில், உயிருடன் இருப்பவருக்கு சிலை வைப்பது தவறில்லை என்றே வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை சர்வகலாசாலை வைஸ் சான்ஸ்லர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என பலருக்கும் உயிருடன் இருக்கும் போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் தன் பிறந்தநாள், சிலை திறப்பு, படத்திறப்பு போன்றவற்றை இயக்கத்தின் பிரச்சார கருவியாக பயன்படுத்தினார். அண்ணாவிற்கும் அவர் வாழ்ந்த காலத்தில் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன என்கிறார்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
திக–திமுகவினரின்சமீபத்தையசரித்திரஉரிமைகோரிக்கைகள்சரிபார்க்கவேண்டும்: மேற்காணும் வாதங்கள், அவ்வாதங்களுக்கான ஆதாரங்கள், அவர்களுடைது தான். விடுதலையில் வந்த-வரும் செய்திகளை சரிபார்க்க, வேறொரு ஆவணம் அல்லது மூலத்தை வைத்து பரிசோதிக்க முயற்சிகளை செய்வது கிடையாது. ஒருதலைப் பட்சமாகவே, இத்தகைய வாத-விவாதங்கள், செய்திகளை வெளியிடுதல், ஏன் புத்தகங்கள் எழுதுவது, ஆராய்ச்சி செய்வது என்று நடந்து வருகின்றன. ஒரு சிலரே, ஈரோடு, பவானி, திருச்சி, கடலூர் என்று சென்று, அங்கிருக்கும் 60-90 வயதான முதியவர்களிடம் பேசி, விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவற்றில், இவர்களின் கூற்று, எந்த அளவுக்கு ஒருதலைப் பட்சமாக இருக்கிறது, ஏன் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் தான், ஈவேரா பிள்ளையார் உடைப்பு, ஜின்னாவுடனான சகவாசம், ஆங்கிலேயரிடம் சரண்டர் ஆனது, உனெஸ்கோ விருது போன்றவை எடுத்தும் காட்டி வருகின்றன.
அண்ணாசாலையில்கருணாநிதிசிலைநிச்சயம்அமைக்கப்படும்எனகூறினார்: ஸ்டாலின், கருணாநிதியில் மகன், முதலமைச்சர் இவ்வாறு கூறியப் பிறகு, யார் எதிர்க்கப் போகிறார்கள், எதிர்க்க முடியும். எந்த நீதிபதியும் மாறாக, தீர்ப்பும் கொடுக்க முடியாது. முதலமைச்சர் தீர்மானமாக, உறுதியாக சொல்லியாகி விட்டது, “அண்ணாசாலையில்கருணாநிதிசிலைநிச்சயம்அமைக்கப்படும்.” எனவே, இனி, வீரமணி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, சோனியா காந்தி போன்றோரை வரவழைத்து, சிலைத் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப் படும். மற்ற எதிர்கட்சி தலைவர்களும் இருப்பார்கள். கடற்கரையில், கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறும். அதிமுக-பாஜக எதிர்ப்பு முழுமையாக வெளிப்படும்.
சிலைஉடைத்தநாத்திக–இந்துவிரோதிகளுக்குசிலைவைத்தல்: ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டது, நிறைய தமிழக மக்களுக்கு, ஏன் பெரியார்/ஈவேரா பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கேத் தெரியாது. ஈவேரா தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டதற்கு நியாயம் கற்பிக்கும் வாதங்கள் எல்லாமே, அவர்களிடத்திலிருந்து தான் வந்துள்ளன. ஆனால், மற்றவர்கள் மறுத்துள்ளது, மறைக்கப் படுகிறது. சிலை வைத்து, கொடிக்கம்பம் நட்டு இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது, கம்யூனிஸ்டுகளுக்கு திராவிடக் கட்சிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் கிடையாது, அவ்வாறு யாரும் நினைத்தும் பார்க்க முடியாது, ஏனெனில், அது அமங்கலமாகக் கருதப் பட்டு வருகிறது. எனவே, 1972ல் ஈவேராவுக்கு கடலூரில் மற்றும் 1975ல் கருணாநிதிக்கு மவுண்ட் ரோடில் சிலைகள் வைத்து, விழா கொண்டாடியது, நிச்சயமாக, பகுத்தறிவுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனோதத்துவ ரீதியில் நோக்கும் போதும் ஒவ்வாதது, முரண்பாடானது.
சிலைஉருவாக்கும்தன்மை (Iconogenesis) மற்றும்சிலைகளைஉடைக்கும்வன்மம் (Iconoclasm): சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm) இரண்டையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நாட்டில் துலுக்கர் பெரும்பாலாக அதனை மெய்ப்பித்துள்ளனர். பிறகு போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய அடிப்படைவாத கிருத்துவர்களும் பால இடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சிலையுடைப்பு-கோவில் இடிப்பு வேலைகளை செய்துள்ளனர். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ வாதிகள், நாத்திகத்துடன் நடத்திக் காட்டிய சிலையுடைப்புகள், ஆபாச ஊர்வலங்கள் அவர்களது, கொடிய-குரூர-அசிங்கமான-ஆபாசமான மனப் பாங்குகளைத் தான் எடுத்துக் காட்டியுள்ளன. மறுபடியும் அவற்றை உயிர்ப்பித்து, சிலைகளை வைத்து, கொண்டாடும் பட்சத்தில், இக்காலத்திலும் அதே வன்மத்துடன், கொடிய சிந்தனைகளுடன், திய-முரண்பாடுகளுடன், வாழ்ந்து வருகிறாற்கள் என்பது புலப் படுத்துகிறது. இவர்களால், சமூகத்திற்கு என்றுமே ஆபத்துதான். தாலிபான், ஐசிஸ், போன்ற தீவிரவாதிகளுக்கும், இந்த திராவிடத்துவ அடிப்படை-தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஈவேராகருணாநிதிக்குசிலைவைக்கவிரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார்[1]. அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்[2]. அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்[3]. அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்[4]. அதாவது, உயிருடன் இருக்கும் போது, சிலை வைக்கக் கூடாது என்று அவருக்குச் சொல்லப் பட்டதால் மறுத்தார்[5].
1973, ஈவேராவுக்குசிலைவைத்தபோது, மறுபடியும்கருணாநிதிசிலைபேச்சுஎழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்[6].
சிலைவிவகாரத்தில்திமுக–அதிமுகமோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.
1975ல்வைக்கப்பட்டகருணாநிதிசிலை 1987ல்தகர்க்கப்பட்டது: 01-09-2021 அன்று, தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தஞ்சாவூர் திமுக உறுப்பினர் நீலமேகம், மவுண்ட் ரோடில் இருந்த கருணாநிதி சிலை பற்றி பேசியது, செய்தியாக வந்துள்ளது[7]. 1971 ஆம் ஆண்டு சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்தார்[8]. அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை, சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டதாகவும் நீலமேகம் குறிப்பிட்டார்[9]. அதன் பின்னர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கருணாநிதி சிலையை சேதப்படுத்தியதாகவும், அதே இடத்தில் மீண்டும் கருணாநிதி சிலை வைக்க, கருணாநிதி வேண்டாம் என தடுத்துவிட்டதாக கூறினார்[10]. அப்போது ‘சின்ன தம்பி என் நெஞ்சில்தான் குத்தினான். முதுகில் குத்தவில்லை’ என்று கருணாநிதி கூறினார்[11]. எனவே பெரியார் நினைத்ததை மணியம்மை செய்து காட்டியதின் அடிப்படையில் மீண்டும் அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையரரசின் சார்பில் நிறுவ வேண்டுமென நீலமேகம் கேட்டுக்கொண்டார்[12].
[5] ஜோதிடர்களிடம் தயாளு அம்மாள் விசாரித்ததும், அதனால் மறுத்ததும் சிலருக்கேத் தெரிந்த விசயமாக இருந்தது. இப்பொழுது துர்கா கோவிலுக்குச் செல்வது எல்லாம், ஊடகங்களில் வருவது போல, அப்பொழுது, ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவது இல்லை.
[6] நாத்திகம், பகுத்தறிவு என்ற கொள்கைகள் கொண்ட கருணாநிதி, வீரமையிடன் ஏன் மறுத்தார் என்பதையும், “இனியும்சாக்குப்போக்குசொல்லமுடியாது………இதற்குமறுப்புகூறக்கூடாது,” என்பதிலிருந்தும், பின்னணியை அறிந்து கொள்ளலாம்.
[9] நியூஸ்.18.தமிழ், அண்ணாசாலையில்கருணாநிதிசிலைஅமைக்கப்படும் – முதல்வர்மு.க.ஸ்டாலின்உறுதி, Published by: Karthick S, First published:September 01, 2021, 17:07 IST.
கருணாநிதிசிலைதிறப்பு – சிலைவைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல்எல்லாமேதிராவிடகலாச்சாரம், பண்பாடு, நாகரிகம்தான்! [1]
பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!
1968ல்இரண்டாவதுஉலகத்தமிழ்மாநாடுநடந்த்த்தும், சிலைகள்வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.
எண்
திறந்துவைக்கப்பட்டதேதி
சிலை
விழாத்தலைவர்
திறந்துவைத்தவர்
1
02-01-1968
திருவள்ளுவர்
இஆ. நெடுஞ்செழியன்
கி.ஆ.பெ. விசுவநாதன்
2
02-01-1968
அவ்வையார்
சத்தியவாணி முத்து
எஸ்.எஸ். வாசன்
3
02-01-1968
கம்பர்
ஏ. கோவிந்தசாமி
மீ. பக்தவட்சலம்
4
02-01-1968
கண்ணகி
5
02-01-1968
சுப்பிரமணிய பாரதி
மாதவன்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6
02-01-1968
வீர்மாமுனிவர்
சாதிக் பாஷா
அருளப்பா
7
02-01-1968
கி.யூ.போப்
சி.பா. ஆதித்தனார்
பிஷப் லெஸ்லி நியூபிகின்
8
02-01-1968
பாரதிதாசன்
மா.முத்துசாமி
மு. வரராசனார்
9
02-01-1968
வி.ஓ.சிதம்பரம்
10
07-11-1971
இளங்கோ அடிகள்
இரா. நெடுஞ்செழியன்
ம.பொ.சிவஞானம்
கண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.
கருணாநிதிக்கு 1975ல்வைத்தசிலை 1987ல்இடிக்கப்பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.
உயிருடன்இருந்தபோதுவைக்கப்பட்டசிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.
ஈவேராகருணாநிதிக்குசிலைவைக்கவிரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.
வேதபிரகாஷ்
16-12-2018.
[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”
Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST
[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”
[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.