பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள் – நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [2]
- இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism) கொள்கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்”, கிறித்துவர்களின் ‘‘பைபிள்”, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்”, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்”, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா”, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்” நூல் – இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ – அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்ற அமைப்பு தலையாட்டுமா?
- கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்!: முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல். ‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற – தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில், ‘The Murder of the Mahatma’ – ‘மகாத்மாவின் கொலை’ என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி – விற்பனையாகி – இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்! எவரே மறுப்பர்? பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்! கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்! ‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை – தர்மம் ஆகும்” என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது). ‘‘…தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்….” – இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!
‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே”: ‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே” என்பதில் கடமை என்பது ஜாதி – வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்! திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் – ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது? தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி! இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!! பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது. ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்! தமிழக அரசும், முதலமைச்சரும் – மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்! ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.
2017லும் இதே கருத்தை வெளியிட்டது[1]: சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் – காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான். இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு – கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்[2].
கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும். திமிருடன், இவ்வாறு ஒருமையில் பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். மனத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருந்தால் ஒழிய, இவ்வாறு பேச்சு வந்திருக்காது. பிறகு, இத்தகைய ஆட்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?
கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம், இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்! கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை! எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ்ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”. முதலில் வாங்கிப் படித்தார்களா, இல்லை, கண்டுகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே தெரிந்த பொய்களை, திரட்டி புத்தகம் போட்டால், யாரும் படிக்க மாட்டார்கள், அதன், தரம் தெரிந்தவர், ஒதுக்கத்தான் செய்வார்கள். பிறகு, அதனைப் பற்றி தம்படாம் அடித்துக் கொள்வதில் என்ன பலனும் இல்லை.
© வேதபிரகாஷ்
29-07-2020
[1] தினபூமி, பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வீரமணி, செவ்வாய்க்கிழமை, 23 மே 2017.
[2] http://www.thinaboomi.com/2017/05/23/72353.html?page=5
[3] வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.
குறிச்சொற்கள்: ஆரிய மாயை, ஆரியக் கலாச்சாரம், ஆரியன், ஆரியர், இந்து விரோதத் தமிழன், இந்து விரோதி, இந்து-விரோத நாத்திகம், இந்துவிரோதி, கண்ணன், கி.வீரமணி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், கீதை, கீதையின் மறுபக்கம், கொலைகார நூல், சட்டமீறல், திராவிடம், திராவிடர், திராவிடர் கழகம், திரிபு விளக்கம்,, நாத்திகத் தமிழன், நாத்திகம், பகவத் கீதை, பகவத்கீதை, போலி நாத்திகம், மகா பாரத யுத்தம், மகாபாரதம், யுத்தம், வீரமணி
9:36 முப இல் ஓகஸ்ட் 2, 2020 |
Great. Keep up the good work
On Wed, 29 Jul 2020 at 12:49 PM, திராவிடநாத்திகம் wrote:
> vedaprakash posted: “பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம்,
> இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள் – நடவடிக்கை எடுக்க வேண்டியது
> அவசியம்! [2] இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism)
> கொள்கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்ப”
>