ஆரிய–திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – அண்ணா–எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமே – ஜெயலலிதாவுக்கு முன்பும்–பின்னும் (5)
”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற ‘துவஜா ரோகணம்‘ செய்யத் தொடங்கிவிட்டனர்[1]: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்[2].
கண்ணீர் துளிகளும், கடல்நீர் துளிகளும்: “கடல்நீர் துளிகள் கடலாகாது, கடலை விட்டுச் சென்ற அவை கடல் என்று தம்மை அறிவித்துக் கொள்ள முடியாது”, என்று நெடுஞ்செழியன் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை குறிப்பிட்டார். ஆகஸ்ட்.21, 2000 அன்று வி.ஆர்.நெடுஞ்செழியனின் புத்தகங்களை வெளியிடும் போது, ஜெயலலிதா அதனைச் சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா உயிருடன் இருக்கும் போது, அவரை சாடியவர்கள், மறைமுகமாக எதிர்த்தவர்கள் இன்று அண்ணாவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், என்று மறைமுகமாக விமர்சித்தார்[3]. கே. வீரமணி பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 1948ல் பெரியார், திமுகவை “கண்ணீர் துளிகள்” என்று குறிப்பிட்டது தெரிந்ததே. 50 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா, அதிமுகவை விட்டு விலகியவர்களை “கடற்நீர் துளிகள்” என்று குறிப்பிட்டார்[4].
சமூக நீதி வீராங்கனை: 1998ல் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டபோது, வீரமணி விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து செப்டம்பர் 2001ல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறினார்[5]. இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்தீர்ப்பை ஏற்று தனது பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்துள்ளார். இதைபாராட்டுகிறேன். தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். மேலும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியுள்ளதன் மூலம் சமூக நீதியை காப்பதில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். புதிய முதல்வர் பன்னீர் செல்வம் பீடு நடை போட்டு செயல்பட வாழ்த்துகிறேன்”, என்றுகூறியுள்ளார் அவர்[6].
பெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
ஜெயலலிதாவும், கரண் தாபரும்: ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகள் தெரிந்ததால், ஜெயலலிதாவுக்கு தேசியத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசும் வசதியும் இருந்தது. கரண் டாபருடன் நடந்த பேட்டி திகைக்க வைத்தது, ஜெயலலிதாவின் பேச்சுத் திறமை, கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை, தாபரையே அதிர வைத்த ஆளுமை முதலியன படித்தவர்களையே சிந்திக்க வைத்தது. எதிரிகள் கூட பாராட்ட ஆரம்பித்தனர். பலமொழிகளில் நடித்த அனுபவத்தை ஜெயலலிதா அரசியலில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். அந்நிலையில், ஜெயலலிதா உட்கார்ந்த இடத்தில் சசிகலா உட்காருவது என்பது எப்ப்டி பட்டது என்பது சொல்ல வேண்டிய் அவசியம் இல்லை. இருவரும் பெண்கள் தான், இருப்பினும் வித்தியாசங்கள் பலப்பல உள்ளன.
ஜெயலலிதாவை சதாய்த்த திராவிடத் தலைவர்கள்: திராவிடத் தலைவர்களின் ஆபாச வசைகளினால் தூற்றப்பட்ட போது, மக்கள் உள்ளுக்குள்ளே கொதித்தனர். ஊழல் என்பது, திராவிடத்துவ அரசியலோடுப் பின்னிப்பிணைந்ததாலும், எல்லோருக்கும் அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததாலும், ஊழல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டபோது, அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கருணாநிதி மற்றும் சுப்ரமணியன்ஸ்வாமி, அவரை சதாய்த்து, கஷ்டப்படுத்துவதாகவே மக்கள் நினைத்தனர். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, “திரௌபதி துகிலுரித்த நிகழ்ச்சி” போன்றநிலை, மக்களை அதிகமாகவே பாதித்தது. நிச்சயமாக திமுகவினர் “கௌரவர்களாகி”, கருணாநிதி, “துச்சாதனன்” ஆகி, தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. “எனக்கும் மூன்று துணைவியர் இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி எனக்கும் தெரியும்”, என்றெல்லாம் கருணாநிதி வசனம் பேசினாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. “முரசொலியில்” கருணாநிதியின் தூஷணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட “பாப்பாத்தி” என்றெல்லாம் ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது, நிச்சயமாக தமிழகப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை.
சுப்ரமணியன்சுவாமி, ஜெயலலிதாவை “திராவிடத் தலைவியாக” மாற்றியது: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்மென்று சுவரொட்டிகளை ஒட்டியதை நினைவு கொள்ள வேண்டும். கருணாநிதி, “மறுபடியும் ஆரிய அம்மையார் பதவிக்கு வந்துவிடுவார்” என்றெல்லாம் எச்சரிக்கை ஓலமிட்டது ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்” போன்ற கூக்குரல்களை எல்லாம் மீறித்தான், தமிழகத்தை தமிழர்-அல்லாதவர்கள் ஆட்டிப் படைத்தார்கள், ஆண்டார்கள் என்று, தனித்தமிழ்த்துவ, தமிழ்வெறித்துவப் பிரிவினைவாதிகள் பேசியும், எழுதியும் வந்த நிலை. ஆனால், “எல்லோரும் திராவிடர்கள்” என்பதை, ஆந்திரா தனி மாநிலம் ஆகியபோதும், கேரளா ஒப்புக் கொள்ளாத போதும், கர்நாடகா காவிரி விசயத்திலும் தோலுரித்துக் காட்டியது. அந்நிலையில், பிராமணரான, தமிழரல்லாத ஜெயலலிதா, முற்றிலும் திராவிடத்துவப் படுத்தப் பட்ட காரியத்திற்கு, இன்னொரு பிராமணரான, சுப்ரமணியன்சுவாமி காரணமானார். அவர் போட்ட வழக்குகள், ஜெயலிதாவைத் தனிமைப் படுத்தி, “திராவிடத் தலைவி”யாக்கியது!
ஊழல்–காரணி ஜெயலலிதாவை பாதிக்காதது: ஊழலில் திளைத்த திமுக 1970களிலேயே வழக்குகளில் சிக்கிக் கொண்டது. கருணாநிதி, “ஊழலின் மறு உருவம்” போன்று சித்தரிக்கப் பட்டார். “இந்திரா-கருணாநிதி” கூட்டு அவ்வாறே முரண்பாடாகக் கருதப் பட்டது. “சோனியா-கருணாநிதி” கூட்டோ பாதாளத்தில் தள்ளி விட்டது. இரண்டு தீமைகள் இருக்கும் போது, பெரியது எடு, சிறியது எது அல்லது, எதனால் அதிக அளவு பாதிப்பில்லை என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும், ஜெயலலிதா தனித்து நின்றார். “தமிழகத்தை இனி ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது”, என்று ரஜினிகாந்த சொன்னது, நாத்திகரான கருணாநிதிக்கு, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
© வேதபிரகாஷ்
15-01-2017
[1] தமிழ்.ஒன்.இந்தியா, பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் ! By: Karthikeyan, Updated: Thursday, December 8, 2016, 22:45 [IST]
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-allegation-on-bjp-269339.html
[3] The Hindu, Jayalalitha move to appease partymen, Tuesday, August 22, 2000.
[4] Addressing partymen after releasing two books authored by former chairman, V.R. Nedunchezhiyan, Ms. Jayalalitha said, “none of those who hold the organisation as greater than themselves would be let down”. Quoting Nedunchezhiyan, she said those who had left the party were like droplets outside the ocean. “Once outside the ocean, the droplets cannot claim to be the ocean,” she said. While the AIADMK had faith in the people, its opponents believed in conspiracy. “The day is not far off when we will usher in MGR rule again.” Ms. Jayalalitha made a veiled attack on the ruling party saying those who had hurt Anna while he was alive were now claiming to be his followers.
http://www.thehindu.com/2000/08/22/stories/04222233.htm
[5] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக நீதி காத்த ஜெ.-வீரமணி புகழாரம், Published: Sunday, September 23, 2001, 5:30 [IST].
[6] http://tamil.oneindia.com/news/2001/09/23/veeramani.html
குறிச்சொற்கள்: அண்ணா, அண்ணாதுரை, அதிமுக, ஆரிய மாயை, ஆரியன், ஆரியம், ஆரியர், சசிகலா, ஜெயராமன், ஜெயலலிதா, திக, திமுக, திராவிட எழுத்தாளர்கள், திராவிட சித்தாந்திகள், திராவிட பேச்சாளர்கள், திராவிடம், திராவிடர், திராவிடர் கழகம், தீபா, நடராஜன், வீரமணி
11:46 முப இல் திசெம்பர் 8, 2018 |
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை எழுதியது-
”தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.
வயது 72! ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!
பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினம், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.
இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.
ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.
அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.
ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!
பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.
ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினம் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.
ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.
கல்கத்தா அருகேயுள்ள மைமன்சிங் என்ற ஊரில், 72 வயதுள்ள பார்ப்பனக் கிழவனொருவன் இளமங்கை யொருத்தியை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தான்.
பொன் அவிர் மேனியளைக் கிழவன், தன் பிண உடல் காட்டி எங்ஙனம் மணத்துக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும்! வாலிபம் இல்லை அவனுக்கு. ஆனால் பணம் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர் பணத்தைக் கண்டனர். கிழவனின் பெண்டாகப் போயினும், கை நிறையப் பொருள் இருக்குமல்லவா! மணத்துக்கு ஒப்பினர். சகல ஏற்பாடுகளும் நடைபெற்றன.
அந்த ஊரில் இந்தக் கிழவரின் கூடாத் திருமணத்தைத் தடுக்க வேண்டிப் பலரும் சென்று பலப்பல கூறினர்; கிழவர் கேட்டாரில்லை. திருமண நாள் குறித்துவிட்டார். மணப்பந்தல் அமைத்துவிட்டார். மங்கல ஸ்நானம் செய்தார். பட்டுடுத்திப் பணிபூண்டு, பரிமளம் பூசிப் பார்ப்பனக் கிழவர் பரிதாபத்துக்குரிய பாவையை மணமுடித்துக் கொள்ளப் பக்குவமானார்!
மைமன் சிங் ஊர்வாசிகள் கண்டனர். இந்த அக்ரமத்தை எப்படியேனும் தடுத்தே தீர வேண்டும் என உறுதி கொண்டனர். மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா! எனவே ஊரில் உறுதி கொண்டவர்கள் உள்ளே நுழைந்தனர். மணக்கோலத்திலிருந்த பெண்ணைத் தூக்கிச் சென்றனர்.
இந்தத் திவ்வியமான திடுக்கிடும் செயல்புரிந்ததில் மூஸ்லீம்களும் இந்துக்களும் ஒன்றுபட்டே உழைத்தனர்.
கிழவர் கல்யாண மண்டபம் வந்தார். காலி இடத்தைத் தான் கண்டார். கடுகடுத்தார். முகம் சுளித்தார். கா, கூவெனக் கூவினார்.
இடையே அந்த இளமங்கையைத் தக்கவனொருவனுக்கு ஊராரே மணஞ்செய்து வைத்தனர்.
கண்டார் கிழவர் காரியம் மிஞ்சி விட்டதை. காரிகை போனால் போகட்டும். கைக்கு ஏதேனும் பொருளாவது வரட்டும் என்று கருதி, தனக்கு நேரிட்ட அவமானத்துக்கு, நஷ்ட ஈடாகப் பணம் கேட்டார்.
இந்தக் கூடாமணத்தைத் தடுக்க குணசீலர்கள், தமக்குள்ளாகவே பணமும் வசூலித்து விருந்தும் நடத்தினர்.
பாராட்டுகிறோம்.
பெண்ணாசைப் பித்துக்கொண்டு அலைந்து அந்தப் பார்ப்பனக்கிழவன் பணப்பேராசை தீர்ந்ததும் போதுமென்று இருந்துவிட்டான். பாவை தக்கனொருவனை மணந்தாள். ”தாத்தா” கட்ட இருந்த தாலியைத் தவிர்த்த, அந்த மைமன்சிங்வாசிகளை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.
ஆனால் மைமன்சிங்கில் தடுக்கப்பட்டது போன்ற மணங்களை எத்தனை எத்தனையோ தடுக்கப்படாமல் நடந்தேறித்தான் வருகின்றன! தடுப்பாரில்லையே! அறிவு வளரவில்லையே!
ஏன் இத்தகைய கூடாமணங்களைக் கண்காணித்துத் தடுத்துச் சர்க்கார் முன்வரக்கூடாது என்று கேட்கிறோம். எத்தனை முறை ஊரில் உறுதி கொண்டவர்களால் தடுக்க முடியும்? இத்தகைய மணங்கள் நடக்கவொட்டாமல், நாகரிக சர்க்கார் மாதர் வாழ்வு கெடும் விதத்தில் நடைபெறும் இத்தகைய மூடத்தனத்தை தடுக்க, ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் பிரபலஸ்தர்கள், பகுத்தறிவாளர்கள் கொண்ட கமிட்டிகளை சர்க்கார் நிறுவி, இவ்விதமான கூடா மணங்கள் நடைபெற ஒட்டாது தடுக்க அக்கமிட்டிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். குடித்துக் கெடுவதை, சூதாடிக் கெடுவதை, விபசாரம் செய்து கெடுவதை, தடுக்க சர்க்கார் சட்டம் செய்து சமுதாயக் கோளாறுகளை நீக்குவது போலவே, இவ்விதமான மணவினைகள் மூலம் மங்கையர் வாழ்வு மிதித்துத் துவைக்கப்படுவதையும் தடுக்கச் சட்டமியற்ற வேண்டும்.
துருக்கியில் கலியாணம் நடப்பதென்றால் மணமகனும், மணமகளும் நோய் ஏதுமின்றி இருக்கின்றனர் என முதலில் டாக்டர் சர்ட்டிபிக்கேட் வாங்கி சர்க்காருக்கு அனுப்ப வேண்டும்.
இந்தூர் சமஸ்தானத்தில் வயதில் அதிக வித்தியாசமுள்ள ஆண் மணந்துகொள்ளக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சில சமஸ்தானங்களில் இத்தகைய சட்டமும் இருக்கிறது.
பம்பாய் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ. அம்மையாரொருவர் 45 வயதுக்கு மேற்பட்ட ஆடவன் 18 வயதுக்குக் குறைவான பாவையை மணப்பதைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டுமென்றம், சிந்து மாகாண சட்டசபையில் பேராசிரியர் கன்ஷாயம், பெண்ணின் வயதுக்கு மேல் 20 வயது அதிகமாக உள்ள ஆடவன் பெண்ணை மணக்கக் கூடாது என்றும் பேசி சட்டங்கள் இயற்ற முற்பட்டனர்.
இத்தகைய சட்டத்தின் அவசியத்தைத்தான் மைமன் சிங் மணவினை எடுத்துக்காட்டுகிறது.
சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?
(திராவிட நாடு 10.07-49)
1:41 முப இல் திசெம்பர் 11, 2018 |
திராவிடர் கழக வரலாற்று பக்கங்கள்
By Kathir WebDesk – 17th September 2018
ஈ.வெ.ராமசாமி மணியம்மையை மணம் முடிப்பதில் அப்போதைய திராவிடர் கழக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. திருமண ஏற்பாட்டை கைவிடக்கோரும் தீர்மானம் திராவிடர் கழக நிர்வாகிகளால் 1949 ஜூலை 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1949 ஜூலை 9-ஆம் தேதியே ஈ.வெ.ராமசாமி – மணியம்மை திருமணம் சென்னையில் ஈ.வெ.ரா-வின் நண்பர் நாயகம் வீட்டில் பதிவாளர் வரவழைக்கப்பட்டு, ரகசியமாக நடந்தேறிவிட்டது.
இந்த செய்தி, திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேறியபின் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதிர்ச்சியும் ஆயாசமும் அடைந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அண்ணா ஆறுதல் கூறி, இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என ஊக்குவித்தார். ஈ.வெ.ரா-வின் முடிவை ஏற்காதவர்கள் எத்தனை பேர் என்று கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
தலைவர்(ஈ.வெ.ரா) தமது முடிவை மாற்றிக் கொள்ளாதவரை திராவிடர் கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்று முன்னரே தீர்மானிக்கப் பட்டிருந்ததால் கட்சிப்பணிகள் யாவும் நின்றுபோய் கட்சியே ஸ்தம்பித்து விட்டது.
ஈ.வெ.ரா இதனால் சினமடைந்து தமது விடுதலை நாளிதழில் அனுதினமும் அண்ணாவையும் அவரை ஆதரிப்பவர்களையும் பலவாறு தூற்றத் தொடங்கினார். அவர்கள் மீது பலவாறான பழிகளை சுமத்தவும் தொடங்கினார்.
1949 ஜூலை 13-ஆம் தேதி விடுதலை நாளிதழில் ஈ.வெ.ராமசாமி எனக் கையொப்பமிட்டு திருமண எண்ணத் தோற்றத்துக்குக் காரணமும் அவசர முடிவும் என்ற தலைப்பில் திடுக்கிட வைக்கும் அறிக்கையொன்று வெளியாகியது. அதில், தம்மைக் கொல்வதற்கு யாரோ சதி செய்து வருவதாக ஈ.வெ.ரா குறிப்பிட்டிருந்தார். சதி செய்யும் நபர் அண்ணா தான் என்று படிப்பவர்கள் யூகித்துக் கொள்ள இயல்வதுபோல மறைமுகமான அடையாளங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அதேபோல் சம்பத்தை குறித்தும் அவர் கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பது போலத் தகவல்கள் காணப்பட்டன.
தம்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் அண்ணா. அவருக்காக வழக்கறிஞர் ஜகநாதனும் ஈ.வெ.ரா சார்பில் வழக்கறிஞர் கைலாசமும் நீதிமன்றத்தில் வழக்காடினார்கள். நீதிமன்றத்துக்கு ஈ.வெ.ரா., அண்ணா இருவரும் வந்திருந்தனர்.
ஈ.வெ.ரா-வின் வழக்கறிஞர் எடுத்த எடுப்பிலேயே தமது கட்சிக்காரர் அண்ணாவை மனதில் கொண்டு அந்தக் கட்டுரையை எழுதவில்லை எனக் கூறினார். எனவே அண்ணா வழக்கைத் தொடர விரும்பவில்லை. அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி உங்கள் கட்சிக்காரர் என்ன கருதுகிறார் என்று கேட்டார். அண்ணாவிடம் கலந்து பேசிய வழக்கறிஞர ஜகநாதன், கட்டுரையில் குறிப்பிட்டது எனது கட்சிக்காரரைப் பற்றி அல்ல என்று பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும் பட்சத்தில் வழக்கைத் தொடர விருப்பமில்லை எனக் கூறினார். அதன் பயனாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஈ.வெ.ரா – மணியம்மை ஆகிய இருவர் மீதுமே சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். வயதை உத்தேதித்து, ஈ.வெ.ரா-வுக்கு நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணியம்மை வந்தாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது ஈ.வெ.ரா – மணியம்மை, இருவருமே வருத்தம் தெரிவித்தனர். எணவே அந்த வழக்கு சம்பத் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
பிற்காலத்தில் ஈ.வெ.ரா-வின் பழிச்செற்களை மறுப்பதற்காகவே “மாலைமணி” என்ற பத்திரிக்கை அண்ணாவல் தொடங்கப்பட்டது எனது வரலாறு.
Inputs from Book – “தி.மு.க உருவானது ஏன்?” – ஆசிரியர் – மலர்மன்னன்.
http://www.kathirnews.com/2018/09/17/evr-apologised-in-court/