செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)
நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது [1]. “சீமானின் நாம் தமிழர் கட்சியில்” பண்பாட்டு மீட்புக்காக “வீரத் தமிழர் முன்னணி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அவரது முரண்பாடு[2] மற்றும் ரகசிய திட்டத்தைக் காட்டுகிறது. கிருத்துவராக இருந்து கொண்டு, கிருத்துவர்களோடு சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக இவர் செயல்பட்ட விவகாரங்கள் ஏராளமாக உள்ளன. செபாஸ்டியன் சீமானின் கிருத்துவப் பின்னணி முதலிய விவரங்களை இங்கே பார்க்கவும்[3]. பிறகு, இலங்கைப் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தினார். பிரபாகரன் இறப்பிற்குப் பிறகு, ராஜபக்ஷேவின் தோல்விக்குப் பிறகு, இவரது சித்தாந்தம் புழுத்துப் போய், ஏற்பார் இல்லாமல் போய் விட்டது. மேலும், “தமிழ் தேசியம்” பேசிவந்த, பிரிவினைவாதிகளின் பலமும் குறைந்து விட்டது. இவர் சினிமாகாரர் என்பதனால், பணத்தை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், உட்பூசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இவ்வேளையில், தமிழர்களை ஏமாற்ற “கலாச்சாரம்” என்ற உணர்ச்சிப்பூர்வமான விசயத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.
பண்பாட்டு புரட்சி, இறையோன் முருகன், கிருபானந்த வாரியார், என்ற பட்டியலில் பெரியாரைக் காணோம்: “வீரத் தமிழர் முன்னணி”யின் தொடக்க விழா பழனியில் நடைபெற உள்ளது என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை[4] என்று இவ்வாறுள்ளது: “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி.. பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகிவிட்டோம். நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5].
பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்: தெய்வநாயகம் பாணியில் இப்படி ஆரம்பித்திருப்பது கிருத்துவ திட்டத்தை வெலிப்படுத்துகிறது. “பெரும்புகழ் இறையோன் முருகன்,” என்றபோது ஜான் சாமுவேலை நினைவு படுத்துகிறது. “தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டு,” எனும்போது, அடையாளங்களை குழப்பப் பார்க்கும் போக்கு, “எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தி”, எனும்போது, ஜாதித்துவமும், “தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்க”, எனும்போது, இவரது போலித்தனமும் வெலிப்படுகின்றன. இத்தனை நாட்களாக இவர் எப்படி “தமிழ்ப் பண்பாட்டை மீட்”டிருக்கிறார், “காக்க”, என்ன செய்திருக்கிறார், என்பது இவரது வசைமொழிகள், தூஷ்ணங்கள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்திய விளைவா?: நாம் தமிழர் கட்சியை 2010-ல் இயக்குநர் சீமான் தொடங்கினார். இந்த கட்சியை, தமிழ்த் தேசிய, ஈழப்போராட்ட ஆதரவு அரசியல் இயக்கமாக நடத்தினார். சமீபத்தில், இந்த கட்சியில் சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படப் போவதாகவும், கட்சியில் இருந்து சீமானை நீக்கப்போவதாகவும்[6] அறிவித்தனர்[7]. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடு ஜெயராஜ் மற்றும் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்[8]. நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர்[9]. அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்த்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை.
புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார்[10]: மாறாக தமிழர் நலனுக்காக போராடிய இவர்களை தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதற்காக தான் தமிழர் பிரச்சினையில் நாங்கள் வீரியத்துடன் செயல்பட நாம் தமிழர் கட்சியில் தனித்து செயல்படுவது என்ற முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களுடன் எட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். நாங்கள் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்போம். ஆனால் தனித்து செயல்பட உள்ளோம். இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆகியும் எந்த பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் கட்சியில் எந்த உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடையாது. சீமானுக்கே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த நிலை தொடர்வதை நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டி அதன் மூலம் தான் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அறிவிக்க முடியும். சீமானால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. தற்பொழுது வரை சீமான் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தான் உள்ளார். ஆனால் வேலுப்பிள்ளை பிராபகரனை தலைவராக ஏற்றுகொண்ட ஒரு இயக்கம் இப்படி செயல்படுவதை நாங்கள் பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்”, என்றார் அவர்.
திடீரென்று பழனி முருகன் மீது பிறந்த பக்தியா, பித்தா, வெறியா?: பழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரதமிழர் முன்னணி என்ற அமைப்பு தொடக்க விழா நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். முன்னதாக கட்சியினர் பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி சென்றனர். திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி வாகனங்கள் சென்றன[11]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மலைக்கோவிலில் குவிந்தனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மலைக்கோயிலில் சீமானை தடுத்து நிறுத்த காத்திருந்தனர்[12]. அப்போது போலீசார் மலைக்கோவில் வாசலில் சீமான் மற்றும் தொண்டர்களை தடுத்து கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி வாங்கவில்லை என்று தெரிவித்தனர்[13]. .இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை: முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது[14]:– தமிழகத்தில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, இலக்கிய பண்பாட்டு பாசறை போன்றவைகளும் இந்து அமைப்புகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் பண்டைய தமிழர்களின் மரபு, வீரம் உள்ளிட்டவைகளை வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் நாம் நம் முன்னோர்களான ஆதி தமிழர்களின் வாழ்வு முறையை மறந்து போகும் நிலை உள்ளது. எனவே தமிழர்களின் மரபை அழிவில் இருந்து மீட்கும் ஒரு அமைப்பாகவே வீரதமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி தமிழர் தந்த முப்பாட்டன் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள பழனியில் இந்த அமைப்பை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்[15]. பழனியில் தற்போது வீரதமிழர் முன்னணி என்ற புது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒரு இயக்கமாக செயல்படும்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் …..?: கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் திருவள்ளுவருடைய நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள், அதன்படி வாழ விருப்ப படுபவர்களுக்காக வீரதமிழர் முன்னணி இயக்கத்தை ஆரம்பத்துள்ளோம். வீரதமிழர் முன்னணி இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்கும். 2016–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம். இலங்கை தமிழர்கள் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசு முடிவு கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என தமிழகஅரசு முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்த கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கு வதற்காக இந்த புதிய இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது[16].இதையடுத்து வீரதமிழர் முன்னணி அமைப்பு சார்பில் கொள்கை விளக்க பேரணி நடந்தது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி பழனி தேரடிவீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[17].
© வேதபிரகாஷ்
09-02-2015
[1] http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
[2] http://www.daytamil.com/2014/01/tamil_3808.html
[3]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86/
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-launch-veerath-thamizhar-munnani-220469.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானின் நாம் தமிழர்கட்சியில் பண்பாட்டு மீட்புக்காக “வீரத்தமிழர் முன்னணி” – நாளை உதயம்!!, Posted by: Mathi, Published: Friday, February 6, 2015, 14:17 [IST]
[6] https://www.facebook.com/pathivumedia/posts/563479750454837
[7] தி இந்து, இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்: நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியா?, Published: February 8, 2015 10:55 ISTUpdated: February 8, 2015 10:55 IST
[8] ஒன்.இந்தியா.தமிழ், நாம் தமிழர் கட்சியில் பிளவு?…. சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக ஒரு பிரிவு அறிவிப்பு, Posted by: Sutha
Updated: Wednesday, January 7, 2015, 19:38 [IST]
[9] http://www.yarl.com/forum3/index.php?/topic/151729-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%813/
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamil-splits-218540.html
[11] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1178637
[13] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.
[14] http://www.maalaimalar.com/2015/02/08131115/police-refuse-permission-to-se.html
[15] தினத்தந்தி, இலங்கை தமிழர்கள் பிரச்சினை: தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது சீமான் பேட்டி, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 08, 2015
[16]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6870989.ece?homepage=true
[17] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf
குறிச்சொற்கள்: அய்யாநாதன், ஆரியர், இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இஸ்லாம், கருணாநிதி, குஷ்பு, சீமான், செச்யூலரிஸம், செபாஸ்டியன் சீமான், தமிழ், தாலி, திராவிட அமைப்புகள், திராவிட சித்தாந்திகள், திராவிடத் தமிழன், நாம் தமிழர், பழனி, போலி நாத்திகம், முருகன், விபூதி
மறுமொழியொன்றை இடுங்கள்