சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு!

சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு
மார்ச் 03,2010,11:00  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

Top world news stories and headlines detail

மேலும் படங்கள் >> சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.

32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம்  சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின்  சின்னத்திரை  தொடரிலும் நடித்தவர்.

என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. “இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார்.  “பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்’ என்று விஜயகுமார் கொந்தளித்தார். “நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார்.  நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.

நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? “சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?

சினிமாக்காரர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்: இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.

ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.

Advertisement

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

5 பதில்கள் to “சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு!”

 1. vedaprakash Says:

  திடீரென்று இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன:

  இது விடயத்தில் முக்கிய அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. அந்த அரசியற் புள்ளிக்கும், நித்தியானந்தருக்கும் ஏற்பட்ட சொத்துப் பிணக்கு ஒன்றில் எழுந்த மோதல் காரணமாக, விலைக்கு வாங்கப்பட்ட நித்தியானந்தரின் சீடர்கள் மூலமாகவே இந்த ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும், எதிரணித் தொலைக்காட்சி ஒன்றுக்கே இந்த ஒளிப்பதிவு முதலில் கிடைத்ததாகவும், இந்து மக்களின் ஒட்டுவங்கியைக் கருத்தில் கொண்டு அது ஜாகா வாங்கிவிட, ஆளும் கட்சித் தொலைக்காட்சியும், அதே காரணத்துக்காகப் பின்வாங்கிவிட, சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாகவும் அறிவருகிறது.

 2. vedaprakash Says:

  அரசியற்புள்ளி Vs நித்தியானந்தா, அகப்பட்டுக் கொண்ட ரஞ்சிதா, காசு பார்க்க விழையும் ஊடகங்கள் !
  Written by editor
  Wednesday, 03 March 2010 19:44
  http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/5635-nithiyanantharanchitha

  நித்தியானந்தாவின் சுய முகம், சண் தொலைக்காட்சித் செய்தி வழியாகத் தெரிந்த போதே, இதற்குப் பின்னால் ஒரு அரசியல் புள்ளி தொடர்புபட்டிருக்கலாம் என ஊகந் தெரிவித்திருந்தோம். இதவொன்றும் சாமியாரை நல்லவராக காண்பிப்பதற்கோ, அல்லது இந்தச் செய்தியின் போக்கை திசை திருப்பவோ சொல்லப்பட்டது அல்ல.
  இந்தியாவில் ஹைடெக் சாமியார்கள் பலரின் வாழ்விடங்கள் களியாட்டக் கூடங்களாக மறைந்து கிடப்பதில் , அரசியல் புள்ளிகளுக்குக் கனிசமான பங்கு உண்டு. நீங்கள் ஒரு சில ஆயிரம் ரூபாய்களை வெளிப்படையாகத் தெரியுமாறு வைத்துக்கொண்டு, ஒரு பொது இடத்தில் நின்றாலே ஆயிரம் சந்தேகப் பார்வைகள் உங்கள் மேல்விழும். அதற்கு மேல் காவல்துறை உங்களை விசாரணையில் குதறி எடுக்கும்.

  இத்தகைய தமிழகத்தில் குடியிருக்கும் இந்தத் துறவிகளிடம் புளங்கும் பணத்தின் அளவு சில பல ஆயிரங்களா? எத்தனையோ கோடி ரூபாய்கள். அதுவே அவர்களை இத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட வைக்கிறது. இதுவெல்லாம் அரசியல் பலம் அற்ற ஒருவனால் செய்துவிட முடியுமா?. இந்தச் சாமியாரை வாழவைத்ததும் நாறடித்ததும் அரசியற் புள்ளிகளே என்பது இப்போது ஒரளவுக்கு உறுதிபடத் தெரியவருகிறது.

  கோடாம்பாக்கம் ஒவ்வோரு நிமிடமும் திக் திக் என்று திகிலோடு நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஹைடெக் சாமியார், நித்யாநந்தரிடம் நெருக்கமாக இருந்த கோலிவுட் விஜபி கும்பல் மிகப்பெரியது. அவரிடம் தியாணம் கற்று தீட்சை பெற்ற வகையில், அவரை சந்திக்கும் பொதெல்லாம் பெருமையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எப்போது வேண்டுமாணாலும், இண்டெர்நெட்டிலும், பத்திரிகைகளிலும் வெளிவரலாம் என்ற பயத்தில் பலர் கிலி பிடித்து கிடக்கிறார்கள்.

  காரணம் கொத்துக்கொத்தாக முன்றாவது கண்ணையுடைய பத்திரிகையிடம் ஏராளாமன புகைப்பட, வீடியோ ஆதாரங்களை கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த வீடியோ மூலம் நித்தியாநந்த ஸ்வாமிகளை ஒழித்துகட்ட முடிவு செய்த அவருக்கு நெருக்கமான முதன்மை சீடர்கள் சிலரே இதனைச் செய்திருக்கின்றார்கள். இந்த சீடர்களை விலைகொடுத்து வாங்கியது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஒருவர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  திருவண்ணமலையில் 1978- ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, அருணாசலம்-லோகநாயகி என்ற முதலியார் சமுதாய பெற்றொருக்குப் பிறந்த நித்யாநந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் பெரிய ராஜரிஷியாக வருவார் என்று பிறந்ததும் ஜோசியன் சொல்ல சிறுவயது முதலே அவரை ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு அடிக்கடி கூட்டிப்போய் ஆண்மீகத்தை ஊட்டியிருக்கிறார்கள். பிறகு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரகுபதி, குப்பமாள் என்ற இரண்டு யோகா ஆசிரியர்களிடம் விடப்பட்டு யோகாவும் ,குண்டலினியும் கத்துக்கொண்டாராம்.

  அவரது பண்ணிரெண்டு வய்யதில் திருவண்ணமலை கோவிலில் சக சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தபோது உண்ணாமுலை அம்மன் ஒளி ரூபமாக காட்சி தந்ததாக பெற்றோரிடம் சொல்ல அன்றுமுதலே கவணத்துகுரிய சிறுவனாக வளர ஆரம்பித்ிருக்கின்றார். திருவண்ணாமலையில்+2 முடித்து குடியாத்தம் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படித்திருக்கிறார். படிப்பு முடிந்ததும், வேலைக்கு செல்லாத இவர் தேர்ந்து கொண்ட வழிதான் ஆன்மீகம் என்கிறார்கள்.

  முதலில் ஈரோட்டில் ஆசிரமம் அமைத்த நித்தியாநந்தா அங்கே சில வருடங்களிலேயே நிலப்பிரச்சனை வந்ததால் பெங்களுருக்கு சென்று ஆசிரம்மம் அமைத்துக் கொண்டார். அங்கு ஆச்சிரமம் அமைத்த பிறகே இந்த அளவுக்கு இண்டெர்நேஷனல் சாமியாராக வளர்ந்திருக்கிறார். இதற்குக் காரணம், கர்நாடக அரசியல் தலைவர்கள். முதலமைச்சர் முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் வரை எல்லோரும், சாமியாரின் தீவிர பக்தர்கள்.

  இதற்கடுத்ததாக நித்தியானந்தாவின் பிரபலத்துக்குக் காரணமானவர்கள், கர்நாடகாவில் அதிகளிவல் நிறைந்திருக்கும் ஐ.டி. தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. இந்த இளைய தலைமுறையினர் மத்தியில் இவர் இலகுவாகசெ செல்வாக்குப் பெற, அவர்கள் இவரை ஹைடெக் சாமியராக உலகத்துக்கே அறிமுகம் செய்து வைத்தார்கள்.

  அளவுக்கதிமான சொத்துச்சேர ஆரம்பித்திருக்கிறது போட்டி. பெங்களூர் புறநகர் பகுதியில், பல ஏக்கர் நிலப்பரப்பில், நித்தியானந்தரின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. ஆச்சிரமம் என அழைக்கப்பட்டாலும், ஐந்து நட்சத்திர விடுதிக்கே உரியளவு வசதி வாய்ப்புக்கள் நிறைந்தது .இப்போது பெங்களூரில் இடங்களை தொடர்ந்து வாங்குவதில் அக்கறை காட்டி வந்திருக்கின்றார் சாமியார்.

  இநத்ச் சொத்து வாங்கும் போட்டியில்தான் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரோடு, பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தொலைபேசிவழியாக நேரடியாகவே நித்தியானந்தாவை முன்னாள் முதல்வர் மிரட்டியதாகவும் தகவல். இறுதியாக பெங்களூரில் ஒரு முக்கிய இடத்தை வாங்குவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில், நித்தியாநந்தர் ஜெயித்துவிட, கடுப்பான அந்த அரசியல் பிரபலம், நித்தியானந்தரின் பலகீனம் பாரத்து அடித்திருக்கிறது. நித்தியாநந்தருக்கு நெருக்கமான மூன்று சீடர்களை வளைத்து, அவர்களுக்குப் பெரும் விலைபேசியே இந்த வீடியோ கேண்டிலை நடத்தியிருக்கிறார்கள் .

  திட்டமிட்ட வகையில், மிகக் கவனமாக, நித்தியானந்தருக்கு நெருக்கமானவர்கள் எடுக்கபட்ட இந்த ஒளிப்பதிவை கர்நாடகாவில் வெளியிட, ஆளந்தரப்பு இடைஞ்சலாக அமைந்துவிடலாம் என்பதினாலேயே, இதனை தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியதாகத் தகவல் கிடைக்கிறது. கர்நாடக அரசியற்புள்ளியின் நோக்கம், நித்தியாநந்தரை, கர்நாடகத்தை விட்டு அகற்றுவது, சொத்துகளை முடக்குவது என்கிறார்கள். சொல்ல்லம்.

  இந்த ஆபாச வீடியோவை முதலில் தமிழக எதிர்க்ட்சித் தொலைக்கட்சி ஒன்றுக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சங்கராச்சாரியார் சமாச்சாரத்தால் சரிந்து போயிருக்கும் தங்கள் இந்துத்துவ ஒட்டு வங்கியை இது மேலும் சரித்துவிடும் என்ற பயத்தில் பம்மிக்கொண்டு இருந்துவிட, அடுத்த பக்கத்துக்குத் தாவி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சன்னுக்கும், பத்திரிகைகளில் நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், மற்றும் ஜூவி ஆகிய ஊடங்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

  இது இவ்வாறாக இருக்க , ரஞ்சிதா எப்படி நித்தியாநந்தரிடம் ஐக்கியமானர் என்று ஆச்சர்யப்படுகிறது கோடாம்பாக்கம். காரணம் பாரதிராஜாவின் அறிமுகங்களில் சோடைபோகாத ஒருவர்தான் இந்த ரஞ்சிதா. நாடோடித்தென்றல் படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தவர் பிறகு முன்னணி ஹீரோகளுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்தவர்.

  திறமையான ஹீரோயின்களில் ஒருவராக கோலிவுட்டில் அறியப்பட்ட ரஞ்சிதாவுக்கு நாளடைவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் ராணுவ மேஜரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானர். திருமண வாழ்கையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சின்னத் திரைக்கு மடை மாறினார் ரஞ்சிதா. அங்கேயும் ஒரு ரவுண்ட் வந்தார்.

  பிறகு சினிமாவையும் விட மனமில்லாமல் நடிகர் விஜயின் அம்மாவாக பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்தார். இந்த நிலையில்தான் நடிப்பை விட்டு இயக்குநராக முடிவு செய்து இயக்குனர் பூரி ஜெகன்நாத்திடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து வேலை பார்த்து வந்தாராம். இதற்குப் பிறகு ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து ஹிந்தி படம் இயக்க முயற்சி மேற்க்கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. அந்த முயற்சி டிராப் ஆனதால் தமிழில் படம் இயக்க முயர்ச்சி மேற்க்கொண்ட போதுதான் நித்யாநந்தரிடம் நெருங்கியிருக்கிறார்.

  ஏற்கனவே அவரது டிவோட்டியாக இருந்த ரஞ்சிதா படம் இயக்கவும், டி.வி தயாரிப்பு நிறுவனம் தொடங்கவும் அவரிடம் அருள்வாக்கு கேட்ட போதுதான் அவர்கள் உறவு நெருக்கம் அதிகரித்திருக்கிறது. ரஞ்சிதா இயக்கும் படத்துக்கு சாமியார் ஃபைனான்சும் பண்ணினார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கிறது. நித்தியாநந்தர் செய்த நிதி உதவியால் ஈர்க்கப்பட்டே அவருடன் லிவிங் டுகதர் அளவுக்கு ரஞ்சிதா நெருக்கமானார் என்று அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  பெண்ணாக, நடிகையாக, ரஞ்சிதாவுக்கு அவலத்தை இந்தச் சமூகம் அளித்திருக்கிறது என்பது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் தான் துறவியென நம்பியவர் ஒரு போலி என அறிந்து கொண்ட போதும், அதை நம்பும் மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் சாமியாரிடமிருந்த கிடைத்த பணத்துக்காக மெளனமாக இருந்தது ரஞ்சிதாவின் தவறாயினும், அவரை அவ்வாறு உருவாக்கியவர்கள் யாரென்று கேள்வி எழும்போது, பதிலாக வரக் கூடியவர்கள் பட்டியலும் நீளமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.

  காரணம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நித்தியாந்தரின் தொடரை வெளியிட்டு வந்த குமுதம் இந்தச் செய்தியால் இடிந்துபோயிருக்கிறது எனப் பலரும் நினைத்திருக்க, ‘காவியின் கருப்பு வாழ்க்கை’ கட்டுரைக்கு விளம்பரம் கொடுக்கிறது. எக்ஸ்குளோசிவ் வீடியோவுக்கு பதிவு செய்ய மடல் அனுப்பி, வாசகர்களுக்கு உண்மை சொல்லப் புறப்பட்டுள்ளது.

  சன் டிவி இந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டாலும் கூட, ஒரு ஏரோடிக் டிவி மாதிரி நடந்து கொண்டுள்ளது எனப் பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. திருவள்ளுவர் நாளில், தமிழகமுதல்வரிடமிருந்து பெரியார் விருதுபெற்றவர் ஆசிரியராக இருக்கும், நக்கீரன் இதழ், இதழியல் தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு தமிழ்மக்கள் சிந்தனையில் பாலியல் வன்முறையை காட்சி வழியாகவும், வளர்த்தெடுக்க தனது இணையத்தளத்தில் வெளியிட்டு, முழு வீடியோவையும் பார்க்க உடனே சந்தா செலுத்துங்கள் என விளம்பரம் செய்துள்ளது.

  இப்போதைக்குத் தலைமறைவாகியுள்ள, சாமியாரின் பரவலான அரசியல் செல்வாக்கு, அவரை அனைத்துப் பாவங்களிலிருந்தும் மீட்டுவிடலாம். அப்படி அவர் மீண்டு வரும்போது, இதே ஊடகங்கள் கொண்டாடவும் கூடும். ஆனால் ரஞ்சிதா..? ஆம்; நான் நித்தியானந்தாவை நேசித்தேன் நெருக்கமாயிருந்தேன், உனக்கென்ன வந்தது ? என ரஞ்சிதா கேட்டால், அதற்கு ஊடகங்களிடமும் பதிலில்லை, யாரிடமும் பதிலி்ல்லை.

 3. Kuppusamy Says:

  இப்பொழுது நடப்பது, ஊடகக்காரர்கள் மற்றும் சினிமாக்காரர்கள் சண்டைபோல இருக்கிறது.

  அதற்கு, இத்தகைய தொழிற்நுட்பங்கள், விபச்சார நடிகைகள், டிவி தொலைக்காட்சிகள் எல்லாம் சாமியார்களின் மீது திருப்புவிட்டால், அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

  இப்பொழுது – 1. கல்கி சாமியார் ஏற்கெனெவே கல்யாணம் ஆனவர். அதனால் செக்ஸுக்கு பதிலாக, நில அபகரிப்பு-மோசடி, என்று கேஸ் போடுவதாகத் தெரிகிறது.

  2. இந்த நித்யானந்தா – இளமையாக இருப்பதாக் ரஞ்சிதாவை வைத்து மடக்கிவிட்டார்கள் போல. போதா குறைக்கு சந்தனக் கட்டை, புலித்தோல், மான்தோல்…………..என்றெல்லாம் முயல்கின்றனர்.

  இத்தகைய தொழிற்நுபத்தை எல்லோரும் உபயோகிக்க ஆரம்பித்தால், எல்லா தலைவர்களுடைய மனைவி-துணைவி-வைப்பாட்டி-சல்லாபங்களையெல்லாம் ஊரறிய, உலகறியா போட்டுக் காட்டலாம்.

  ஆகவே, இவர்கள் எல்லாம் ஏதோ ஒழுங்கு போல பேசுவது, அந்த குஷ்பு கற்ப்பைப் பற்றி பேசுவது போல இருக்கிறது.

 4. John Chandrasekaran Says:

  என்ன சார் படுக்கையையும் காணோம், டெதையும் காணோம், பிறகு என்னா, இந்தியா முழுவதும் காட்டினோம் என்றல் என்ன்ன அர்ர்ட்த்தம்?

  நக்கீரன் சைட்லே போன்ன்கோ, வீடியோவையே பார்க்கலாம்ம்.

  ஹரித்வாரிலுருந்து நித்யானந்தாவே, இந்த வீடியோவைத்ட்தான்ன் பார்த்துக ன்கொண்டிருக்கிறாராம்!

 5. vedaprakash Says:

  Ranjitha visited US with godman
  Chandan Nandy Bangalore, April 30,2010 DHNS
  http://www.deccanherald.com/content/66859/ranjitha-visited-us-godman.html

  Tamil actress Ranjitha, secretly filmed in a sex romp with self-styled godman Nithyananda in December 2009, had last year accompanied him to the United States where some ashramites were told by him that she was ”like his mother.”

  Ranjitha’s advocate Prashant Mendiratta, who issued a statement on Thursday claiming that his client was not the woman featured in the secretly filmed video in a compromising position with Nithyananda, on Friday avoided replying to Deccan Herald’s question on whether the Tamil actress visited the United States along with the godman last year.

  It is also learnt that Ranjitha visited Sri Lanka thrice the same year, before she went to the US.

  When Deccan Herald asked whether Ranjitha had spoken with Nithyananda over telephone in the last 50 days, Mendiratta first said he would “call back” but replied via email to say: “I am sure you understand how shattering the entire allegations and the follow up of the said video has caused to my client and her family.”

  “As indicated in the press release, my client does not wish to add more to it at this time. I request you to respect her wishes as these are difficult times for her. We appreciate and thank you for your understanding and support and hope for your continued support.”

  Deccan Herald’s sources in the United States — all former devotees — insisted over phone that Ranjitha accompanied Nithyananda on the US tour that took place between August and October last year. Several former devotees said videos taken of the self-styled godman’s ‘Kalapataru Darshan’ in several American cities clearly show that the Tamil actress was alongside Nithyananda.

  “She was with Nithyananda in Columbus (Ohio), Los Angeles, Seattle, Oklahoma, Dallas, Houston and San Jose, besides New York where she even visited a relative,” a number of former devotees claimed. “At the Columbus temple, she even walked hand-in-hand with Nithyananda,” one lady quipped, pointing out that “the Nithyananda Dhyanapeetam’s travel records would prove she was in the US”.

  At least three former Los Angeles-based devotees Deccan Herald spoke to over phone quoted Nithyananda having said that while Ranjitha was travelling with the swami on the Yogam tour he told ashramites that he was preparing her to be one of the acharyas and so he was spending more time with her and he appreciated all the ashramites for giving her “more space.”

  “He also told some devotees in San Jose that Ranjitha was like his mother,” recalled the devotees, adding that two young San Jose-based couples suddenly quit the ashram in 2007 and that all ashramites were directed not to have any further communication with them.

  Nithyananda sent to jail

  Arrested godman Nithyananda will spend the next 12 days in the company of undertrials and convicted criminals after being remanded to judicial custody by a Ramanagara court near here on Friday. The chief judicial magistrate court passed the remand order when Nithyananda was produced before it following eight days of interrogation by the State CID sleuths who subjected him to questioning on several aspects, including his relationship with Tamil actress Ranjitha, and his alleged sexual activities with several ashramites.

  Nithyananda’s associate Gopal Sheelum Reddy alias Bhaktananda was earlier remanded to judicial custody.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: