மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!

மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!

விடுதலை – 09-02-2010, ப.8

http://viduthalai.periyar.org.in/20100209/news13.htmlசிவராத்திரிக்காக ஆரியர்கள் புனைந்த கதைகள்: சிவராத்திரிக்காக ஆரியர்கள் புனைந்த கதைகள் மிக அற்பமான கருத்தை உடையவையே ஆகும். இதிலிருந்தே அக்கால ஆரியர்களின் புத்தியின் போக்குத் திறத்தை ஒருவாறு அறியலாம். சிவராத்திரி கதை, ஆரியர்களின் புராணங்களில் உள்ளபடியும், பண்டிகை, உற்சவம், விரதங்களுக்காக என்று பார்ப்பனர்கள் தொகுத்த ஓர் ஆதாரமான புத்தகத்திலிருந்தும் இது தொகுக்கப்படுவதாகும். அதாவது, ஒரு பார்ப்பன வாலிபன் பஞ்சமா பாதக_- அக்கிரமங்கள் பல செய்து கொண்டிருந்தான். அதனால் அவன் நாட்டை விட்டு விரட்டப்பட்டான். இந்த நிலையில் ஒரு நாள் அவன் பட்டினியோடு காலை முதல் இரவுவரை அலைந்து திரிந்து கொண்டி-ருந்தான். இரவு அவன் ஒரு சிவன் கோயிலை அடைந்து கர்ப்ப கிரகத்திற்குள் சென்று பார்த்தான். அப்போது கோயில் பூசாரி சிவன் சிலைக்குமுன் பிரசாத வகைகளை வைத்துவிட்டு எங்கோ சென்றி-ருந்தான். பிரசாதங்களைக் கண்டதும் அந்த வாலிபன் அவற்றைக் கவர்ந்து சென்று உண்ண எண்ணினான். அப்போது அந்தச் சிலைக்குப் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு மங்கலாக இருந்ததால் பூசைக்கு வைக்கப்பட்டிருந்த பலகாரங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. எனவே அவன் விளக்கைச் சிறிது தூண்டிவிட்டு அதிக வெளிச்சம் ஏற்படும்படிச் செய்தான். அப்போது அங்கு வந்த பூசாரி இந்த வாலிபன் பிரசாதங்களைத் திருடுவது கண்டு சீற்றமடைந்து அந்த வாலிபனை வெட்டிக் கொன்றுவிட்டான்.

“பாரதிதேவி” இக்கதையை 1953ல் சொல்லியதாம்! அன்றைய நாள் சிவனுக்கு இரவு நாளாகும். அன்று பகல் முழுவதும் அந்த வாலிபன் பட்டினியாக இருந்தது சிவராத்திரி விரதம் இருந்தது போலாகிறதாலும், மற்றும் சிலையின் முன் வைத்திருந்த விளக்கைத் தூண்டிவிட்டு, அதிக ஒளியுடன் பிரகாசிக்கச் செய்தது போலாகிறதாலும், அந்த வாலிபனுக்குச் சிவன் மோட்சத்தை அருளி-னான். ஆதலால் அந்த வாலிபனைப் போல், பகலில் பட்டினி கிடந்து இரவில் கண்விழித்து அதிகாலையில் உணவு கொண்டால் எவ்வளவு அயோக்கியனுக்கும் மோட்சமளிக்கும் என்பதாக சிவராத்திரி விரத நாள் கொண்டாடப்படுகிறதாம்.    (பாரததேவி 8.2.1953)

பக்தர்களே, நீங்கள் எந்த பஞ்சமா பாதகத்தைத் செய்துள்ளீர்கள்? இதுதான் மகா சிவராத்திரியாம். இந்தக் கதையை நம்பினால், இதை நம்பி மகாசிவராத்திரியைக் கொண்டாடினால் மனிதனுக்கு ஒழுக்கம் வளருமா?  பஞ்சமாபாதகம் செய்தவனாம். அவனும் சிவனுக்குத் திட்டமிட்ட வகையில பக்தியின் அடிப்படையில்கூட பூஜை செய்யவில்லை. அத்தகைய கயவனுக்கு மோட்சமாம்!  அந்தப் பாதகன் சிவனுக்குத்தான் இவ்வளவும் செய்தான் என்று இட்டுக் கட்டி திணிக்கப்பட்டுள் ளது. எப்படியாக இருந்தாலும் சிவனைப் பூஜை செய்ய வேண்டும் என்ற வறட்டுத் தனம்தான் இதில் தொக்கி நிற்கிறது. மகாசிவராத்திரி கொண்டாடும் பக்தர்களே, நீங்கள் எந்த பஞ்சமா பாதகத்தைத் செய்துள்ளீர்கள்? ஒரு கணம் சிந்திப்பீர்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , ,

5 பதில்கள் to “மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!”

 1. Kuppusamy Says:

  உலக சைவ மாநாடு நடத்திய மடாதிபதிகளுக்கும், உலகத்தின் பல நாடுகளினின்று வந்த ஆய்வாளர்கள், முனைவர்கள் மற்றவர்கள் இத்தகைய திராவிட போலித்தனத்தை எதிர்துக் கேட்கவேண்டும்.

  ஆனால், உள்ள மடாதிபதிகளுக்கு ஆட்சியாளர்களுன் பின்னேச் செல்வதற்கே நேரமில்லை.

  போதாகுறைக்கு, குன்றக்குடி போன்ற அடிவருடி மடங்களுக்கு எந்த வெட்கம், மானம்….எதுவும் இல்லாது போன்று, அத்தகைய இந்து / சைவ விரோதிகளுக்கே விருதுகள் கொடுத்து மகிழ்கின்றன.

  ஆறுமுக நாவலர் போன்ற வீரமுள்ள இந்ந்துக்கள் இருந்த பூமியில், இத்தகைய அடிமைகள் இருப்பது கேவலம், மிகக் கேவலம்.

  இப்படி சைவத்தைத் தூஷிக்கும் இந்த “திராவிட”புல்லர்களுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டியது, ஒவ்வொரு சைவ இந்துக்கும் உள்ள கடமையாகிறது. அப்படி வாய்ப்புக் கிடைக்கும்போதும், அதை பயன் படுத்தா விட்டால், அவன் நிச்சயமாக மிகப் பெரிய துரோகியே ஆவான்.

 2. Brahmallahchrist Says:

  I do not understand how these valueless, principleless and nuisancical people allow such blasphemy to be printed and circulated.

  Ironically, few days back, they celebrate World Saiva Conference also!

  And yesterday, they honour the religious renegade with honours.

  What sort believers have been these dravidian guys?

 3. John Chandrasekaran Says:

  இனி எந்த ராத்திரி பாற்றியும் கவலை இல்லை.

  அதற்கெனவே, ஒரு சாமியார் இருக்கிறர்,கோயம்புத்தூரில்.

  அவர் தான் ஜக்கி, நம்ப கலைஞ்சரோட நண்பர் கூட.

  அவரிடத்திலே கேட்டாலே சொல்லிவிடுவாரே, செவராத்திரியைப் பற்றி.

  இந்தாளுக்கு என்ன தெரியும்?

 4. இராசேந்திரன் Says:

  புராண கதைகள் எல்லாம் பாமர மக்களுக்கு புரிய வைக்கவும், நினைவில் வைத்திருக்கும் பொருட்டு எழுதப்பட்டவை. இறைவன் அடி முடி காண முடியாத வண்ணம் எங்கும் பரந்தவன் என்பதை விளக்க சிவனின் அடியை காண விஷ்ணுவும், பிரம்மாவும் முயற்சித்து தோல்வி அடைவதாக கதை உண்டு. வாராக உருவமும், தாழம் பூ சமாச்சாரமும் சுவைக்காக இட்டு கட்டப்பவை. இது போல ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு கருத்துண்டு. அறிவிலிகள் மற்றும் பன்னாடைகள் குப்பையை பிடித்து கொள்வதில் வியப்பில்லை. நடராஜர் தத்துவம் மேலை நாட்டு அறிஞர்களை கூட கவரும். நாயுருவிகளை அல்ல.

 5. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறி Says:

  […] [5] https://dravidianatheism2.wordpress.com/2010/02/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: