திருக்குறள் பேரவை சார்பில் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் !

திருக்குறள் பேரவை சார்பில் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் !

திருவள்ளுவரை இருட்டில் அனுப்பியவர்களுக்கு “பேரொளி” பட்டம்!: உலக திருக்குறள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட திருக்குறள் பேரவை, தற்போது உலக திருக்குறள் பேரவையாக வளர்ந்துள்ளது.
கருணாநிதி திருவள்ளுவரை எப்படி அவமதித்தார் என்பதை கிருத்துவர்கள் கூறுவார்களே?: திருக்குறளுக்கு எழுத்துப்பணி, சொற்பணி, செயல்வடிவம் அளித்தவர்கள் உண்டு. எழுத்து, சொல், செயல் என்று ஒருங்கிணைத்து திருக்குறள் பணியாற்றியவர், பணியாற்றுபவர் நமது தமிழக முதல்வர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல.

திருவள்ளுவரை இழிவு படுத்தி சிலையெடுப்பதால் என்ன புகழ்?: திருவள்ளுவருக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. காரணம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமாரியில் திருவள்ளுவருக்கு திருவருவச்சிலை, பெங்களுரில் 18 ஆண்டுகளாக முடக்கப்ட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது,1330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பொற்கிழி விருது, குறளோவியம், திரு வள்ளுவர் ஆண்டை தமிழ்புத்தாண்டாக அறிவித்தது போன்ற செய்லகள் மூலம் திருக்குறள் மீது கருணாநிதிக்கு உள்ள உள்ளத்துஈடுபாட்டை காணலாம்.

சாதனைக்கு பரிசு என்றால், எற்படுத்திய வேதனைகளுக்கு என்ன செய்வது?: இதன் மூலம் திருக்குறள் பணியில் வாழ்நாள் சாதனையாளராக கருணாநிதி விளங்கி வருகின்றார். எனவே, இந்த பேரவை மூலம் தமிழக முதல்வருக்கு வரும் 10 ம் தேதி சென்னையில் திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது என்றார்.

கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு திருவள்ளுவர் இழிவு படுத்தப்பட்டார்: 1970களிலிருந்தே கருணாநிதி, திருவள்ளுவரை இழிவுபடுத்தும், திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிருத்துவக் கூட்டத்துடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். “சந்தேகிக்கும்” மற்றும் “சந்தேகப்படும்” தாமஸ் திருவள்ளுவரை சந்தித்தான், அவருக்கு பைபிள் சொல்லிக் கொடுத்தான், பைபிள் படித்துதான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார். பிறகு அதிலிருந்துதான் சைவ சித்தாந்தம் வளர்ந்தது. வைணவமும், சைவமும் வளர்ந்தன, என்றெல்லாம் பேத்தித் திரியும் கூட்டத்திற்கு துணை போனார். அது மட்டுமா, அத்தகைய போலி ஆராய்ச்சியாளர், கள்ள-ஆவணத் தயாரிப்பு கோஷ்டி, மோசடிக் கூட்டத்திற்கு ஆதரவாக, தாமஸ் திரைப்படத்தையும் ஆரம்பித்து வைத்தது கருணாநிதிதான்!

இந்த கேவலங்களை, இழிவுகளை, அவதூறுகளை எந்தத் தமிழனும் தட்டிக் கேட்கவில்லை!

தமிழ் புலவர்கள், கவிக்கள், கவிக்கோக்கள், கவியரசுகள், முனைவர்கள், பேராசிரியர்கள்……………..எவரும் கவலைப்படவில்லை.

ஆனால், “உலக திருக்குறள் பேரவை” என்ற பெயரில் கருணாநிதிக்கு “திருக்குறள் பேரொளி” பட்டம் வழங்கப் போகிறார்களாம்!

என்னே தமிழர்களின் அலங்கோலம்?

சுயமரியாதை பேசும் தமிழனுக்கு இது உரைக்கவில்லையா?

Advertisements

குறிச்சொற்கள்: , , ,

6 பதில்கள் to “திருக்குறள் பேரவை சார்பில் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் !”

 1. devapriyaji Says:

  http://devapriyaji.wordpress.com/2010/02/10/karunanithi-gets-thiruvalluvar-award/

  SANTHOME CHURCH FUNDED A Fradulant Research-and its first book was released in 1967 called திருவள்ளுவர் கிறித்தவரா?- RELEASED BY DMK Education Minister attended by all leading church leaders and Karunanidhi had given foreward to this book- few excerpts.

  வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். திருவள்ளுவர் கிறித்தவரா? ;பக்௧31

  M.Karunanithi who gave a foreword to the book

  கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

 2. vedaprakash Says:

  எனக்கே மறந்து விட்டது, இதைப்பற்றி:

  http://vedaprakash.indiainteracts.in/2008/11/24/karunanidhi-gets-back-from-cbci-the-thomas-myth-miracle/

  அந்த தளத்தவர், நமது உழைப்பை வீணாக்கிவிட்டனர்.

  ஞாபகப்படுத்தி, எடுத்துக் காட்டியதற்கு நன்றி:

  http://devapriyaji.wordpress.com/2010/02/10/karunanithi-gets-thiruvalluvar-award/

  எனக்கென்னவோ, தமிழர்கள் இதையெல்லாம் அறிந்து உய்வார்களா, அல்லது, ………………..
  இத்தகைய விளம்பர மயக்கத்தில் ஆழ்ந்து,
  மடாதிபதிகளின் மோசடிகளில் தேய்ந்து,
  திராவிடத்தில் வீழ்ந்து, மாய்ந்துவிடுவரோ …………….?

 3. Kuppusamy Says:

  என்னத்தைச் சொல்ல?

  முன்பு பதிவு செய்தபோதே குறிப்பிட்டேன்.

  இப்படிப்பட்ட துரோக மடாதிபதிகள் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல்.

 4. Brahmallahchrist Says:

  I do not understand as to how tamilians bear with him entertaining his nonsense?

  though, they talk in terms off self-respect and all, I do not think that they honour such virtues in their actual lives.

 5. vedaprakash Says:

  “திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்” என்ற கட்டுரையை இங்கேப் பார்க்கவும்:

  http://rationalisterrorism.wordpress.com/2010/02/11/திருக்குறளை-எதிர்க்கும்/

 6. John Chandrasekaran Says:

  நாங்க ப்பெல்லொருமே நித்யானந்த ஜோருலே இருக்கிறோம்.

  இந்நேரத்திலே, இருள், ஒளி எல்லாம் தெவையில்லையே.

  இரண்டும் மாற்ற்றி, மாற்றீ க்காட்டினால், ஜோராக இருக்கும்.

  எங்களுக்கு இந்த ஒளிதான் பவேண்டும், ராதிரிக்கு ஒள்ளி வேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: