தைபூசம், பெரியார் மற்றும் பகுத்தறிவு!

தைபூசம் (விடுதலை 01-02-2010)

ஆதாரம்: குடிஅரசு, 19.1.1936

கோயில்களில் தைபூசம் என்பதுபற்றி ஏடுகளில் பிர-மாதமாக செய்திகள் வெளி-யிடப்படுகின்றன. அதிலும் பழனியில் தைபூசம் என்-றால் அதற்குத் தனி மவு-சாம். பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரள்-வார்கள்.

தை பூசத்தன்று காவடி எடுப்பதுதான் பிரசித்தம். காவடிகளில் பல வகை உண்டு; பால் காவடி, இள-நீர் காவடி, புஷ்பக் காவடி, கரும்புக் காவடி என்று எடுப்பார்களாம்.

அவரவர்களும் அன்-றாட சாப்பாட்டுக்கே காவடி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியா-வில் 77 சதவிகித மக்-களின் நாள் வருமானம் ரூ.20 தானாம். இந்த யோக்கியதையில் கோயில்-களுக்குக் காவடிகள் எடுப்-பதில் மட்டும் குறைச்சல் இல்லை.

பழனிக்குக் காவடி எடுத்துக்கொண்டு போனால் கொன்ற பாம்பு, அறுத்துச் சமைத்த கோழி, சமைக்கப்பட்ட மீன் ஆகி-யவை உயிர் பெற்று விடு-கின்றன என்றெல்லாம்கூட கொட்டி அளப்பது உண்டு.

தந்தை பெரியார் வாழ்-வில் ஒரு சுவையான சம்-பவம் உண்டு.

நீதிக்கட்சியின் முதல-மைச்சராய் இருந்தாரே முனுசாமி நாயுடு அவர், சி.எஸ். இரத்தினசபாபதி முத-லி-யார், தந்தை பெரியார் ஆகியோர் பழனிக்குச் சென்றார்கள். பெரியார் அடி-வாரத்தில் இருந்து கொண்-டார்; மற்றவர்கள் மலைக்-குச் சென்றார்கள்.

இந்தச் சமயத்தில், அடி-வாரத்தில் ஒரு விபூதிக் கடைக்காரன் இரண்டு சேவல்களை தன் கடை-முன் கட்டி, அதன்மீது மஞ்-சள், குங்குமம் தெளித்து, வெற்றிலை பாக்கை முன்-னால் வைத்து ஒரு உண்-டி-யலும் வைத்திருந்தான். ஒரு கூட்டம் பய பக்தி-யாக சேவலைக் கும்-பிட்டு, உண்டியலில் காசு-களையும் போட்டுச் சென்-றது.

இதுகுறித்து அந்தக் கடைக்காரனிடம் பெரியார் விசாரித்தபோது,

இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று கூறினான்; அதாவது அறுத்-துச் சமைத்து காவடியில் கட்டிக் கொண்டு வந்த சேவல்கள் இவை கடவுள் அரு-ளால் இந்தச் சேவல், கோழிகள் உயிர் பெற்று-விட்டன என்று விளக்கி-னான்.

அந்த நேரத்தில் மேலே மலைக்குச் சென்ற பெரி-யாரின் அந்த இரு நண்-பர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்-களைக் கூப்பிட்டு கடைக்-காரன் சொன்ன தகவலை விளக்கிக் கேலி செய்தார் பெரியார்.

அவர்கள் இருவரும் சிரித்துவிட்டு, இப்படிப்-பட்ட ஆட்கள் உங்கள் பிரச்-சாரத்துக்கு அனுகூலம் செய்து விடுகிறார்கள் என்று கூறி, நாங்கள் எல்லாம் பக்தர்கள்தான் என்-றாலும், இதுபோன்ற-வற்றை நம்பமாட்டோம் என்று சொன்னார்களாம்.

(ஆதாரம்: குடிஅரசு, 19.1.1936)

இது எப்படியிருக்கு?

– மயிலாடன்

விமர்சனம்:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பொருட்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன / ஏற்றுமதியாகின்றன. வெளிநாடுகளினின்று இங்கு வரும்போது அதை வாங்கி வருகின்றனர். அமெரிக்காவில் வாங்கினேன் என்று கொடுக்கிறார்கள்!

ராமகிருஷ்ணன் இந்தியாவில் இருந்தபோது கண்டுகொள்ளவில்லை. இப்பொழுதோ, இந்தியர் / தமிழர் என்றேல்லாம் மேலே-மேலே விழுகின்றனர்.

மழை வரும் என்றபோது, வருவதில்லை. வராது என்றால் வருகிறது!

விலைவாசி குறையும் என்கிறர்கள், ஆனால், உயர்ந்து கொண்டே இருக்கிறது!!

பனி உருகல், கடலேற்றம்……………………பற்றி ஏதோதோ சொன்னார்கள், ஆனல் இப்பொழுது அவையெல்லாம் அப்படியில்லை என்கிறார்கள்!

கொசுக்களை வைத்து கொசுக்களின் வியாதிகளைக் கொல்லுவோம் என்று தினமும் கோடிக்கணக்காக மரபணு மாற்றம் செய்யபட்ட கொசுக்களை உற்பத்தி செய்து புழகத்தில் விடுகிறார்கள். ஆனால், அதனால், கொசுக்கள் தானே அதிகமாகிறது? இதற்கு பகுத்தறிவோ, விஞ்ஞானமோ என்ன சொல்லப்போகிறது?
செய்வதைச் சொல்லுவோம், சொன்னதைச் செய்வோம் என்றார்கள். ஆனால், இப்பொழுது, சொல்வதும் இல்லை, செய்வதும் இல்லை.
Advertisements

குறிச்சொற்கள்: , ,

3 பதில்கள் to “தைபூசம், பெரியார் மற்றும் பகுத்தறிவு!”

 1. vedaprakash Says:

  * மலேசியாவில் தைப்பூசம் :17 லட்சம் பேர் தரிசனம்
  பிப்ரவரி 01,2010,18:15 IST
  கோலாலம்பூர் : மலேசியாவில் பதுகுகையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை யொட்டி 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மலேசிய நாட்டின் ஜனத் தொகையில் ஏழு சதவீதம் பேர் இந்தியர்கள். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். கோலாலம்பூர் அருகே உள்ள பதுகுகையில், சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டு தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த விழா, ஒரு வார காலம் கொண்டாடப்பட்டது. இந்த கோவிலிலிருந்து, மகாமாரியம்மன் கோவிலுக்கு வெள்ளித் தேர் புறப்படும். இந்த நிகழ்ச்சியோடு, தைப்பூச திருவிழா நிறைவு பெறும். இந்த ஆண்டு தைப்பூச விழாவில், 17 லட்சம் பேர் கலந்து கொண்டதாக, மாரியம்மன் தேவஸ்தான செயற்குழு தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.இந்த திருவிழாவையொட்டி ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைத்தும், நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 2. vedaprakash Says:

  பழநி தைப்பூச திருவிழா : 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
  பிப்ரவரி 04,2010,00:00 IST

  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=21544

  பழநி : பழநியில் தைப்பூச திருவிழாவின் போது, 20 லட்சம் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்துள்ளனர். விழா முடிந்தும் பக்தர்கள் வருகை நீடிக்கிறது. ஜன., 24ல் துவங்கிய தைப்பூச திருவிழா கடந்த செவ்வாயன்று தெப்பத்தேருடன் முடிந்தது. கடந்த 10 நாட்களில், 20 லட்சம் பக்தர்கள், பழநியில் சுவாமி தரிசனம் செய்ததாக போலீசார் கணக்கிட்டுள்ளனர். விழா முடிந்தும், பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
  பாதுகாப்பு குறைவு: பஸ் ஸ்டாண்ட், திருஆவினன்குடி, மலைக் கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடுகின்றனர். ஆனால், திருவிழா இல்லாத நாட்களில் தரப்படும் போலீஸ் பாதுகாப்பு மட்டுமே தரப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நெரிசலில் சிரமம் அடைகின்றனர். திருட்டு பயமும் உள்ளது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தருவது அவசியம்.

 3. John Chandrasekaran Says:

  என்னா சார், இப்படி ஒரே போரச்டிக்கிறீரே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: