கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?

கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?

© வேதபிரகாஷ்

குறிப்பு: இங்கு குறிப்பிடும் பல விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்தவையே. ஆகையால் அடிக்குறிப்புகள் அதிகமாகத் தரப்படவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன.

ஜனவரி 14, 15, 16 மற்றும் 17, 2010 தமிழர்களை ஆட்டும் விதம்: இந்த தடவை, இத்தேதிகள் தமிழர்களை ஆட்டியது, வாட்டியது எனலாம். பொங்கல் தமிழர்களுக்கு கசப்பாகவே இருந்தது, ஏனெனில் விலைவாசி! நேற்று “M” போட்டு, பஸ் கட்டணத்தை வேறு ஏற்றிவிட்டார்கள்! போதாகுறைக்கு எல்லாமே “சொகுசு” வண்டிகள்தாம்! மக்கள் நிறையவே சாபம் இட்டுள்ளார்கள்! சோவின் மீட்டிங் வேறு! அசிங்கங்கள் அதிகமாகவே உள்ளன.

ஜனவரி 14 (வியாழன்) – தை அமாவாசை – பொங்கல் – கருணாநிதியின் தமிழ் புத்தாண்டு! சோ மீட்டிங்!

ஜனவரி 15 (வெள்ளி) – திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் – திருவள்ளுவர் ஆண்டு 2040 – சூரிய கிரகணம்!

ஜனவரி 16 (சனி) – உழவர் திருநாள்

ஜனவரி 17 (ஞாயிறு) – எம்ஜியார் பிறந்த நாள்

இப்படி நாளுக்கு நாள் பிறந்தநாள் தமிழ்நாட்டில்!

கருணாநிதியும் ஜெயலலிதாவும்: இரு தமிழக அரசியல் தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்வதில் தமிழக மக்களுக்கும், குடிமக்களுக்கும் எந்தவிதத்திலும் நன்மையோ, லாபமோ இல்லை. அரிசி, பருப்பு விலை குறையப்போவதில்லை. காய்கறி, பால் விலை குறையப்போவதில்லை. இருவருமே குழாயடி சண்டைப்போட்டுக் கொண்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை! ஆனால், ஜெயலலிதா சாக்கு வைத்துக் கொண்டு கருணாநிதி மற்றும் திமுகவினரைச் சேர்ந்தவர்கள் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவது, அவமதிப்பது, ஜாதி துவேஷத்தை வளர்ப்பது, தூண்டிவிடுவது முதலிய காரியங்கள் ஏன் செய்யப்படுகின்றன என்பதை அந்த பொறுப்புள்ள வயதான மனிதர்[1] விளக்கியே ஆகவேண்டும். மற்றவர்களும் சிந்திக்கவேண்டும்.

ஊழலில் இருவருமே தலைசிறந்தவர்கள்: ஊழலில் இருவருமே சளைத்தவர்கள் இல்லை, ஏனெனில் பாழாகிப் போவது தமிழ்நாட்டு மக்கள்தான். கோடிகளில் கொழுக்கும் இவர்களால் மக்களுக்கு என்ன பயனும் இல்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகள் (ஸ்பெக்ட்ரம்) சம்பாதித்தார்களே, அதனால் தமிழ்நாட்டிற்கு, இந்தியாவிற்கு என்ன லாபம்? இதில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் ஜாதிகள் ஒன்றும் செய்வதில்லை. பிராமணன், சூத்திரன் பார்த்து விலைகள் குறைவதில்லை. எப்பொழுதுமே பிரச்சினைகளில் சாவது எல்லோரும்தான் – எல்லா தமிழ்நாட்டு மாநில மக்கள்தாம். ஆகவே, கேள்விகள்-பதில்கள்[2] என்று வரும்போது ஏன் அத்தகைய நாகரிகம் இல்லாத,  பிராமணர்களுக்கு எதிரான வார்த்தைகள், வசைவுகள், தூஷணங்கள் வரவேண்டும்?

தினமலர், தினமணி தாக்கப்படுவது: ஊடகங்கள், குறிப்பாக இணைத்தளங்கள் மூலமாக திமுக-திக, எல்.டி.டி.ஈ ஆதரவாளர்கள் தேவையில்லாமல் பிராமண துவேஷம் பாரட்டுகின்றனர். ஏதோ இந்த இரண்டு பத்திரிக்கைகள்தாம் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டு, இந்திய, ஏன் உலக அரசியல், பொருளாதாரம் எல்லாவற்றையும் மாற்றப்போகிறது, இவைகள்தாம் மிகவும் பலமுள்ள பத்திரிக்கைகள் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. சமீபத்தை நிகழ்ச்சிகள் இதைக் காட்டுகின்றன. வைத்தியநாத ஐயரும், கிருஷ்ணமூர்த்தி ஐயரும் பயந்து விட்டார்கள் என்றே தெரிறது. நன்றாக மிரட்டிவிட்டார்கள் போலும், இருவரும் (இரண்டு பத்திரிக்கைகளும்) வரிந்து கட்டிக்கொண்டு கருவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள்[3]. ஒருவேளை ஐராவதம் மஹாதேவன்[4] “வைத்து”க்கு சொல்லியிருக்கலாம். கிருஷ்ணமூர்த்திக்கு, முன்பு தனது மகன் மாட்டிக் கொண்டது நினைவு படுத்தி இருக்கலாம். போதாகுறைக்கு “புவனேஸ்வரி” பிரச்சினை வேறு! எது எப்படியாகிலும், மறுபடியும் கருணாநிதியால் பிராமண துவேஷம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.

“இந்துராம்” – “மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு” இழிவுபடுத்தப்படுவது: பிராமணர்களுக்கே “ஹிந்து”வைப் பிடிக்காது என்பதுதான் உண்மை. ஆப்படியிருக்கும்போது, அடிக்கொரு தடவை, பார்ப்பன இந்துராம் என்று துவேஷிப்பது ஜாதி அடிப்படையில்தான் உள்ளதே தவிர, சித்தாந்த ரீதியில் கூட இல்லை. அதாவது, ராம் ஒரு மார்க்ஸீயவாதி, கம்யூனிஸ்டுக்களின் நண்பன்………………..என்பதெல்லாம் தெரிந்த விஷயமே. இப்பொழுதைய சந்துரு, நீதிபதி சந்துரு, எப்படி நீதிபதியானார் என்றால், ராம்-கருணாநிதி பந்தம் ஒருபுறம், ராம்-சந்துரு காம்ரேட்-இணைப்பு மறுபுறம்! ராமும்-கருணாநிதியும் திருமண உறவினால் சம்பந்திகள் முறை வேறு! ஆகவே, ராமைத் திட்டுகிறோம் என்று, பிராமணர்களைத் திட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? உதாரணத்திற்கு சிதம்பரத்தை விமர்சிக்கும்போது, “செட்டியார்” என்று சொல்லி விமர்சிப்பது இல்லையே? இதே மாதிரி மற்றவர்களை முதலியார், பிள்ளை, ரெட்டி என்றெல்லாம் சாதிப்பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லையே? பிறகென்ன “பார்ப்பன ராம்”, “இந்து-ராம்” என்ற கூச்சல்கள்? புலிகள் ஆதரவாளர்கள் வேறு இதில் சேர்ந்து கொள்கிறர்கள் [வால் போஸ்டர்கள் ஒட்டுவது, மீட்டிங் போடுவது……….].

ராமும், கருணாநிதியும் உறவினர்கள்தாம் (பிராமண-சூத்திர பந்தம்): திமுக ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கம் மூலம் “தி ஹிந்துவை” ஆட்டிப் படைத்துள்ளது. “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” என்று கருணாநிதி சொல்லி மிரட்டுவது, ராமஜெயத்திற்கு மட்டுமல்ல, 40-50 வருடங்களாக இந்து பத்திரிக்கையில் வேலை செய்த / செய்யும் கிழங்களுக்கும் நன்றாகவேத் தெரியும். பல நேரங்களில் ஜெயலலிதாவிற்கு எதிராக செய்திகள் வெளியிடுவது, முதலிய காரியங்களைச் செய்துள்ளது. ராமின் மச்சினி தயாநிதி மாறனின் மனைவி. பிரியா என்ற ஐய்யங்கார் ரங்கராஜனின் மகள்[5]. அதாவது பிராமணப் பெண் சூத்திரனின் மனைவி! இதே கதைதான், தம்பி கலாநிதி விஷயத்திலும்[6], ஏனெனில் அவரது மனைவி – காவேரியும் ஒரு பார்ப்பனச்சிதான்! முரசொலி மாறனின் பிராமண சம்பந்தம் அலாதியானது. அதை அவர்கள் பிள்ளைகளும் பின்பற்றுவது நன்றாகவே தெரிகின்றது. கனிமொழி விவாகரத்தாகி, சோகமாக, மனம் உடைந்திருந்த வேலையில், கொஞ்சம் மனம் “ரிலாக்ஸாக” இருக்க, இந்து பத்திரிக்கை அலவலகத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அத்தகைய பிராமண-சூத்திர பந்தம் பிணைந்திருக்கும் போது, ஏன் கரு துவேஷம் கொண்டு இந்த வயதில் அலைகிறார்?

“சோ”வை அவதூறு பேசுவது: சோ அரசியல் ரீதியில் திராவிடக் கழகங்களின் முரண்பாடுகளை, பிறழ்ச்சிகளை, பித்தலாட்டங்களை, மாய்மாலங்களை எடுத்துக் காட்டுகின்றார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரை வசை பாடுகின்றனர். அறிவுபூர்வமாக அவர் எழுதுவதை அறிவுபூர்வமாக ஆதாரங்களுடன் மறுப்பதைவிடுத்து “பார்ப்பன்”, ஐயர், அவாள், இவாள் என்று பாட்டை ஆரம்பித்து விடுகின்றனர். நேரிடையாக மோதாமல், திக-திமுக-மற்ற உதிரிகளைத் தூண்டிவிட்டு கலாட்டா செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள், சகிக்காதவர்கள், இவ்வாறு எம்ஜியார் சொன்னார் என்று பிராமணர்களை ஏன் திட்டவேண்டும்?

இன்று எம்ஜியாரைக் குறிப்பிட்டு ஜெயலலிதாவை தூஷிக்கும் கருணாநிதி எம்ஜியாரின் விரோதிதானே? குறிப்பாக, எம்ஜியார் பிறந்ததினம் (17-01-2010) என்பதை மனத்தில் வத்துக் கொண்டு, இவ்வளவு துவேஷத்தைத் தூண்டி விடுகிறாரே, இவரென்ன எம்ஜியாரின் நலவிரும்பியா, அரசியல் நண்பரா, கூட்டுப்பங்குதாரரா இல்லையே? கூத்தாடி, ………………………..மளையாளி என்றெல்லாம் தூஷித்தது ஞாபகத்தில் உள்ளதே………………………பிறகென்ன, எம்ஜியார் பெயர் சொல்லி ஜெயலலிதாவை திட்டுவது? எம்ஜியார் ஜெயலலிதாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டுள்ளது உண்மையென்றால், அதே விமர்சனம் கருணாநிதிக்கும் பொருந்துமே? அதுமட்டுமா, கருணநிதியைப் பற்றியே அவரது அரசியல் நண்பர்கள், விமர்சகர்கள், விரோதிகள் பல நேரங்களில், பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் எல்லொருக்கும் தெரியுமே. அவர் சொன்னார்-இவர் சொன்னார் என்று யாரும் அவ்வாறு தூஷண வேலைகளில் ஈடுபடவில்லையே?

கருணாநிதியின் லீலைகள் தமிழக மக்களுக்குத் தெரியாதா? திருக்குவலை கருணாநிதியைப் பற்றி தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். மனிதர் வயதாகி விட்டார், சொன்னால் நன்றாகயிருக்காது, என்பதால் கண்ணியத்தோடு நிறைய கிழங்கள் அமைதி காக்கின்றன. அவர்கள் எல்லாம் உண்மை சொல்ல ஆரம்பித்தால் நாறிவிடுமே? முன்பு எப்படி போட்டிப்போட்டர்கள், “வால் போஸ்டர்கள்” ஒட்டினார்கள் என்ற உண்மைகளை வெளியிட்டால், தண்டவாளம், வண்டவாளம் ஆகிவிடுமே? நடுராத்திரி, தொடர்ந்து அடுத்தநாள் காலை இரண்டு மணிவரை பேசிய பேச்சுகளை நினைவு படித்தினால்…………….., தமிழகப் பெண்கள் கூசி, கூனி …………….குனிவார்களே? அவர்கள்தாம் இப்பொழுது சட்டசபையில் பேசுகிறார்கள், இல்லை, சொன்னதாகப் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. இவற்றையெல்லாம் பொன்னேடுகளில்[7] வைரத்தால் பொதித்து வைக்கலாமா?

எல்லோருக்கும், எல்லாமே தெரியும், ஆதலால் அவதூறு பேசவேண்டும் என்ற போக்குத் தேவையில்லை: இருமனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டால், கண்ணியமாக, நாகரிகமாக அவ்வாறு முடியும் என்றால், கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்யட்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் சகதியை அள்ளிவீசுவோம் என்றாலும் தனியாக செய்து கொள்ளட்டும், ஆனால் ஊடகங்கள் வழியில் பாரபட்சமான முறையில் செய்யவேண்டாம். இன்றைய இளைஞர்கள் பார்த்து-படித்து-கேட்டுக் கொண்டிருக்கிறர்கள், நிச்சயமாக அவர்கள் உண்மை என்ன என்று அலச ஆரம்பித்து விடுவார்கள், உண்மை என்ன என்று ஆராய்ச்சி செய்து எடுத்து விடுவார்கள். அப்பொழுது, நிச்சயமாக நன்றாகயிருக்காது.

சாவியும், சேகரும்: முன்பு சாவி – எஸ். விஸ்வநாதன் (பத்திரிக்கையாளர், தயாரிப்பாளர்) என்னசெய்து கொண்டிருந்தாரோ, அந்த வேலையைத்தான் எஸ். வி. சேகர் செய்து கொண்டிருக்கிறார் போல இருக்கிறது. உண்மையென்னவென்றால் கருணாநிதியின் பிராமண துவேஷம் சொல்லமாளாது, அது எல்லாவறையும் விட மிகப்பெரிய வெறி. என்னத்தான் படித்தவர்களாக இருக்கட்டும், வெளியே சிரித்தாலும், இரு பொருள் தொணிக்க பேசினாலும், மனத்தில்  மட்டும் கருவிக் கொண்டே இருப்பார். இது தஞ்சாவூர்காரர்களுக்குத் தான் தெரியும். மூப்பனாருக்கு நன்றகவே தெரியும்! சமீபத்தில் ஒரு தஞ்சாவூர் பிராமணருக்கு பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்தபோது கூட அத்தகைய பேச்சு வந்தது. “பாப்பான் பேரில இருக்கிறத பாப்பனுக்கேக் கொடுத்தால் போயிற்று”, என்று கடைசியாக முடிவு எடுத்தாற்போல இருக்கிறது[8]. சாவியிடம் கருணாநிதி, “ஒரு நல்ல பிராமண பெண்ணை பாருங்கள், பார்த்து முடித்துவிடுவோம்”, என்றபோது, சாவி அவ்வாறேப் பார்த்துக் கொடுத்தார்[9]. இப்படி செய்யும் கருணாநிதி, வேறு நேரத்தில் கேவலப்படுத்துவது ஏன்?

கருணாநிதி நல்ல பேச்சாளர் என்று நன்றாகவே தெரியும்: மத்திய அரசு தணிக்கை அறிக்கைகள், கருணாநிதி, நிதியை கருணையுடன், வேறு செலவினங்களுக்குத் திருப்பிவிட்டாரா அல்லது முதன்மந்திரியாக, பொறுப்பாக செலவிட்டாரா, கணக்கிட்டாரா என்பதெல்லாம் தாராளமாக செய்யலாம். எதிர்கட்சித் தலைவர் / தலைவி கெட்டால், தகுந்தமுறையில் பதில் சொல்லிவிட்டுபோகலாம். அதைவிடுத்து, கேலிபேசுவது, கிண்டலடிப்பது, அவதூறு பேசுவது……………………என்ற முறையில்தான் பதில் வரவேண்டிய தேவையில்லை. சட்டசபையில், நாகரிகமாக பேசமுடியவில்லை என்றல் அது, அங்குள்ளவர்களுக்கு மட்டும் அவமானம், அசிங்கம் இல்லை, அவர்களை அங்கு உட்காரவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கே கேவலம். இங்கு திமுக-அதிமுகவோ, பிராணன்-சூத்திரன் என்றோ யாரும் பார்க்கப் போவதில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளை, ஏற்படுத்திக் கொடுக்கிறர்கள். அதில் அவர் தாராளமாகவே பேசிவருகிறார். அங்கும் பார்ப்பனர்கள் என்று சொல்லிக்கொள்ளும் / கொல்லும் வாலி, கமலஹாசன் முதலியோர்கள் உள்ளார்கள். அவர் அவ்வாறாகவே பேசி-மகிழ்ந்து-திளைக்கட்டும். ஆனால், இந்த ரீதியில் இறங்கவேண்டாம்!

நாங்கள் பார்ப்பனீயத்திற்கு எதிரி, ஆனால் பார்ப்பனர்களுக்கு எதிரியல்ல!: கருணாநிதி, இதுபோன்ற புருடாக்களை / பொய்களை அடிக்கடி அள்ளிவீசுவது உண்டு. “ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கும்” ரீதியில் இப்படி பேசும் பேச்சுகளுக்கு அர்ததமே இல்லை. சரித்திர ஆதாரம் இல்லாத “ஆரிய-திராவிட” இனவெறி சித்தாந்தம் பேசிக் கொண்டு, ஆட்சி செய்யும் கட்சியாளர்கள் உலகத்திலேயே இந்தியாவில்தான் உள்ளார்கள் என்பது உண்மை. உலகத்திலேயே இனவெறி கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, தினமும் அத்தகைய இனவெறி பிடித்து பேசியலையும் கூட்டம் இங்குதான் உள்ளது. பிராமணர்கள் “ஆரியர்கள்”,  நாங்கள் “திராவிடர்கள்” என்று பேசிக் கொண்டு துவேஷம் பேசும் கூட்டம் இங்குதான் உள்ளது. இத்தகைய வெறியாளர்களை யாரும் கண்டிக்காமல் இருப்பது ஆச்சரிம்தான்! அதனால்தான் “பேராசிரியர்” என்று சொல்லியலையும் அன்பழகன் பொன்றோரும், இன்றும் அத்தகைய சித்தாந்தங்களைப் பேசியலைகின்றனர்!

பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது. ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம். அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம். ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக்  கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?

© வேதபிரகாஷ்

17-01-2010


[1] ‘சூது வாது வஞ்சகம் அம்மு-எம்ஜிஆர்’ Created On 16-Jan-10 04:54:12 PM

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10992&action_type=viewnews

http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=3927

[2] In his so-called Question-answer Report (dated 18-04-2008), he has responded as follows: பூணூல் இல்லாததுதான் காரணம்! கலைஞர் விளக்கம்

கேள்வி: அந்நாள் அமெரிக்க அதிபர் நிக்சன், அண்டை மாநிலத்து முதல்வர் ஹெக்டே இருவர் மீதும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாகக் கிளம்பிய குற்றச்சாட்டு காரணமாகத்தானே பதவியை ராஜினாமா செய்தார்கள் – ஆனால் அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர்; இங்கே தமிழகத்தில் இரு அதிகாரிகளுக்கிடையே தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்காக முதல மைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன?

கலைஞர்: என் செய்வது, இந்த முதலமைச்சருக்கு முப்பரி நூல் கிடையாதே! இவர் கடவுளின் முகத்தில் பிறந்த சாதியில் பிறந்தவர் அல்லவே – காலில் பிறந்த சாதியில் பிறந்தவரா யிற்றே! அதனால்தான் இந்த முதல்வர் தலைமையில் இந்த ஆட்சியில் அன்றாடம் நடைபெறுகிற அற்புத சாதனைகளை ஒரு சாரார் மூடி மறைத்துவிட்டு; வேண்டுமென்றே திட்ட மிட்டு சில விஷமச் செய்திகளைப் பரப்பி அந்த நெருப்பில் குளிர் காய முனைகிறார்கள். என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித் தாலும்; விகடன் கேலி செய்கிறார்! – சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்து நடிகை, காஞ்சனமாலையின் பேச்சையே டேப் செய்து போட்டுக் காட்டி மிரட்டிய பணிய வைத்த பரம்பரையினர் அல்லவா?

[3] அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை : தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல், ஜனவரி 16,2010

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16168

தினகரன் விளக்கமாகக் குறிப்பிட்டபோது, தினமலர் சொன்னது, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி, என்ன சொன்னார் என்பதை, 1989ம் ஆண்டு, “மக்கள் குரல்’ இதழின் ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி எழுதியுள்ளதை படித்தால் தெரியும்.இவ்வாறு முதல்வர்  தெரிவித்துள்ளார்”. அவ்வளவே!

[4] இந்த ஐயருக்கு வந்ததுதான் “பவிஸு”. கருணாநிதி, பட்டம் மேல் பட்டம் கொடுத்து அமுக்கிவிடுகிறார். அவரும் இடத்திற்கேற்றபடி மாற்றி-மாற்றி பேசுகிறார். செந்தமிழ் மாநாடு முடிந்ததும் கழட்டிவிடபடுவார்போலும்!

[5] 1994ல் இவர்கள்  திருமணம் நடந்தது! இவர்கள் அதாவது ஐய்யங்கார்வாளும், சூத்திரவாளும் எப்படி சம்பந்தி ஆனார்கள், என்றதெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன!

[6] 1991ல் ஒரு நண்பரின் இல்லத்தில் இருவரையும் சந்திக்க வைத்து கல்யாணம் செய்து வைத்தனராம்!

[7] சோனியா விஷயத்தில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும். அவரது மாமியார் இந்திரா காந்தி மற்றும் அவரைக் கொலை செய்த வழக்கு முதலியவற்றையும் ஞாபகப் படுத்திகொள்ளவும்!

[8] ஆனால் நாகநாதன், ஜகதீஸன் முதலியோர் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் கருணாநிதி ஒப்புக்க்கொண்டார்!

[9] குமுதத்தில் இதைப் பற்றிய விவரங்கள் வெளிவந்தன. இதைப் பற்றி நான் எழுதி இணைத் தளத்தில் – குறிப்பாக www.indiainteracts.com ல் பதித்தவை காணாமல் போகின்றன.

http://tamilbrahmins.wordpress.com/category/karunanidhi/

http://tamilbrahmins.wordpress.com/2008/04/23/karunanidhi-varnashrama-dharma-and-brahmanism/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

2 பதில்கள் to “கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?”

  1. வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷண Says:

    […] [6]https://dravidianatheism2.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%… […]

  2. வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷண Says:

    […] [6]https://dravidianatheism2.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: