தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை!

தமிழர்களுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை : சங்கமம் துவக்க விழாவில் கருணாநிதி பேச்சு
ஜனவரி 11,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16075

Latest indian and world political news information

மத்தியில் நாட்டுப்புறம்: சென்னை : “”தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா, நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்தது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி  பேசியதாவது: சென்னை தீவுத்திடல் நிரம்பி வழியும் அளவிற்கு சென்னை சங்கமம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் துவங்கப்பட்டு, மாநகரத்தின் வீதிகளில் எல்லாம் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் நாட்டுப்புறம் என்று ஒன்று  இருக்கிறது. அதற்கென்று நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இசைத் துறையில் பாடல்கள் என்றெல்லாம் இருக்கின்றனவே; அவற்றை மக்களோடு பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு இந்த சங்கமம், தமிழ் மையத்தின் சார்பில் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது.

சங்கமத்தில் சந்தேகம் ஏற்பட்டது: இதைத் தொடங்கியவர்களும், தொடங்கி வைத்த நானும் எதிர்பாராத அளவிற்கு இந்த சங்கம் நிகழ்ச்சி வெற்றி முரசு கொட்டி வருகிறது.  இம்மேடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், எல்லாரும் வியந்து போற்றுகின்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக அரிய பல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நிலையில் இங்கே நடத்திக் காட்டப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியல் இடம் பெற்ற சில காட்சிகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகம் ஏற்பட்ட அடுத்த வினாடியில், அந்த சந்தேகத்தை நீக்குகின்ற காட்சிகள் இந்த அரங்கத்திலே வந்தன. சொல்லப்போனால் சங்கமம் என்பதனுடைய நோக்கம், “பிறப்பொக்கும்’ என்பதை நாட்டிலே பரவச் செய்திடல் வேண்டும். சமுதாயத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பது தான்.
பிறப்பு ஒக்கும், பிறப்பொக்கும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்’:  இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்த போது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. கோவையில் நடக்கவுள்ள செம்மொழித் தமிழ் மாநாட்டில், “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்னும் கருத்தாக்கத்தை ஒட்டியே சென்னை சங்கமம் நிகழ்ச்சி, “பிறப்பொக்கும்’ என்ற வார்த்தை, பிறப்பு ஒக்கும் என்ற இரண்டு சொற்களைக் கொண்ட இந்த வார்த்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகக் கோவையில் இருந்து எடுக்கப்பட்டது. நாம் பிரிந்து கிடக்கக்கூடாது; நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் நம் தமிழ் மொழியால் ஒன்று சேர வேண்டும். நாம் நம்முடைய தமிழைக் காப்பாற்ற வேண்டும். நம்முடைய மொழி உணர்வை தொடர்ந்து இங்கே நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற இத்தனை வாசகங்களும் பொருந்தியாக சங்கமம் கலை விழாவிலே, “பிறப்பொக்கும்’ என்ற சுருக்கமான சொற்றொடரை அமைத்துள்ளனர்.

2,500 கலைஞர்கள்! தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை. சென்னை சங்கமம் நிகழ்ச்சி, சென்னை மாநகரில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் செயலை பாராட்டுகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார். விழா நடன நிகழ்ச்சிகளை பிரசன்னா ராமசாமி சைலஜா குழுவினர் வடிவமைத்திருந்தனர். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கனிமொழி எம்.பி., தமிழக சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு,  தமிழ் மையத்தைச் சேர்ந்த ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் வரும் 16ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் 2,500 கலைஞர்கள் மூலம் 4,700 நிகழ்ச்சிகள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி நிறைவு விழா, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடக்கிறது.

இதென்ன புதிய “கன்டிஷன்” போடுகிறார்?
தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை
தமிழன் இருக்கிறானோ இல்லையோ தமிழ் இருக்கிறது!
இவர்களுடைய அடிவருடிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இவரையே தமிழ், முத்தமிழ், தமிழின் உயிரே, உயிரின் நிலையே, …………………………என்றெல்லாம் பேசியதை ஞாபகம் காட்டுகிறாரா?

தமிழ் நெறி என்று இவர் சொல்வது என்ன என்று தெரியவில்லை!
எது தமிழ்நெறி?
கருணாநிதி காட்டுவதா?
கனிமொழி காட்டுவதா?
ஜகத் காஸ்பர் காட்டுவதா?
கலைஞர் காட்டுவதா?
தமிழர்களுக்கு வீழ்ச்சி என்று ஏன் இவர் கவலைப் படவேண்டும்?
தமிழ் வாழும்
தமிழர்கள் வாழ்வார்கள்
அதற்கு இந்த போலிகள் தேவையில்லை.

இன்றைய தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளே இவரால் தான் உருவாக்கப் பட்டுள்ளது!

3 பதில்கள் to “தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை!”

 1. vedaprakash Says:

  தமிழ் உள்ளவரை தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை
  சென்னை சங்கமம் தொடக்க விழாவில் முதலமைச்சர் கலைஞர் பேச்சு
  http://viduthalai.periyar.org.in/20100111/news07.html

  சென்னை, ஜன.11, 2009 (விடுதலை)-_ தமிழ் உள்ளவரை, தமிழ்நெறி உள்ளவரை தமிழர்-களுக்கு வீழ்ச்சி இல்லை வீழ்ச்சி இல்லை என்று முதல்-அமைச்சர் கலைஞர் கூறினார். சென்னை சங்க-மம் கலைவிழாவின் தொடக்க-விழா சென்னை தீவுத்திடலில் நேற்று இரவு நடந்தது. இந்நிகழ்ச்-சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். விழாவை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கலைஞர் பேசியதாவது:-

  தீவுத்திடல் நிரம்பி வழிகின்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சி நடை-பெற்று இதிலே எங்களு-டைய கருத்துகளை எடுத்துச்சொல்லுகின்ற கட்டத்திலே நிகழ்ச்சியின் தொடர்ச்சி அமைந்தி-ருக்கிறது. இதைத் தொடங்-கியவர்களும் தொடங்கி வைத்த நானும் எதிர்பா-ராத அளவுக்கு இந்த சங்கமம் நிகழ்ச்சி வெற்றி முரசு கொட்டி வருகிறது.
  அதிலும், இன்றைக்கு நடைபெற்ற இந்த கலை-நிகழ்ச்சி நான் வியந்து போற்றுகின்ற அளவுக்கு-பாராட்டுகின்ற அள-வுக்கு அவ்வளவு அருமையாக, அரிய பல கருத்துகளை எடுத்துக்கூறுகிற நிலை-யில் இங்கே நடத்திக் காட்-டப்பட்டு இருக்கிறது. சங்கமம் என்பதன் நோக்-கம் பிறப்பொக்கும் என்-பதை நாட்டிலே பரவச் செய்திடல் வேண்டும். சமுதாயத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பது-தான்.
  பிறப்பொக்கும் என்-கிற இந்த வார்த்தைக் கோவை பிறப்பு ஒக்கும் என்ற இந்த இரண்டு சொற்களைக் கொண்ட இந்த வார்த்தை பிறப்-பொக்-கும் எல்லா உயிர்க்-கும் என்ற வாசகக்-கோவை-யிலேயிருந்து எடுக்கப்-பட்டது.

  பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்: நாம் நடத்த விருக்-கின்ற நாம் என்று சொல்லுகிறேன் நான் என்று சொல்லவில்லை, நாம் விரைவில் நடத்த இருக்கிற செம்மொழி மாநாட்டிற்காக முதல்-முதலாக குறியிடப்பட்ட அந்த வாசகம்தான் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதாகும். கடந்த 2-வது உலகத் தமிழ் மாநாடு சென்னை-யிலே நம்முடைய அருமை தலைவர் அண்ணா முன்னின்று நடத்திய அந்த மாநாட்டிற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது லட்சிய வாசகமாக அமைந்தது.

  இப்போது அவ்வளவு சொன்னால் போதாது இன்னும் சொல்ல வேண்-டும் என்ற நிலையிலே-தான். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அந்த வாசகத்தை நம்மு-டைய சின்னத்திலே இன்-றைக்கு பொதித்திருக்கி-றோம். இவ்வளவு கூட சொல்ல வேண்டிய-தில்லை. பிறப்பொக்கும் என்று சொன்னால் போதாது என்று நம்-முடைய சங்கமம் குழு-வினர்-பிறப்பொக்கும் என்கின்ற அந்த வார்த்-தையை மாத்திரம் வைத்து அந்த வார்த்தைகளின் வடிவமாக இந்த காட்சி அமைப்பை எல்லாம் இங்கு காட்டியிருக்கி-றார்கள்.
  நாம் பிரிந்து கிடக்க கூடாது. நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் நம்மு-டைய தமிழ் மொழியால் ஒன்று சேர வேண்டும். நாம் நமது தமிழை காப்-பாற்ற வேண்டும். நம்-முடைய மொழி உணர்வை தொடர்ந்து இங்கே நிலை-நாட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற இத்-தனை வாசகங்களும் பொருந்தியதாக சங்கமம் கலைவிழாவிலே பிறப்-பொக்கும் என்ற அந்த சுருக்கமான சொற்-றொ-டரை அமைத்து இருக்கி-றார்கள். அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிகள் நடந்-தன. பிறப்பொக்கும் என்பது பிராமண, சத்தி-ரிய, வைசிய, சூத்திர என்-றெல்லாம் நால்வகை வர்ணங்கள் பிரிக்கப்பட்டு பறையர் என்றும், பள்ளர் என்றும், புலையர் என்-றும், நாவிதர் என்றும், அருந்-ததியர் என்றும் முடி திருத்துவோர் என்றும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்-படுத்தி அவர்களுக்கு எல்லாம் இருந்த உயர்வை-சமநிலையை அகற்றி படுபாதாளத்திலே தள்-ளிய பயங்கர சூழ்ச்சியிலே இருந்து தமிழர்களை மீட்க தமிழ் சமுதாயத்தை மீட்க எழுந்ததுதான் யுகப்புரட்சி போல தமிழ்-நாட்டிலே பெரியார் நடத்-திய புரட்சி, ஜாதி, சமயத்தை ஒழித்த புரட்சி-அந்த புரட்சியை அடிப்-படை-யாக வைத்துதான் இந்த நடன நிகழ்ச்சி, பாடல்-நிகழ்ச்சி, கற்பனை நிகழ்ச்சி, நாட்டுப்புற நிகழ்ச்சி ஏற்பாடு செய்-யப்பட்டு என்னுடைய அருமை மகள் கவிஞர் கனிமொழி எம்.பி.யால் நம்முடைய வர்ணனை புலி நண்பர் ஜெகத் கஸ்பரால் தம்பி சுரேஷ் ராஜனுடைய முயற்சியால் மற்றுமுள்ள நடிகர்கள், கலைஞர்கள் அத்தனை பேருடைய கூட்டு முயற்சி-யால் இந்த அற்புதமான நிகழ்ச்சியை நாமெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கி-றார்கள்.

  இந்த வாய்ப்பு சென்னை மாநகரத்திற்கு மாத்திர-மல்ல பல நகரங்களுக்கும், பல ஊர்களுக்கும் வழங்-கப்பட இருக்கிறது என்-பதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நான் அவர்களுடைய இந்த செயலைப் பாராட்-டுகிறேன், புகழ்கிறேன், தமிழ் உள்ளளவும் தமிழர்-கள் உள்ளளவும் தமிழ்-நெறி உள்ளளவும் தமிழர்-களுக்கு வீழ்ச்சி இல்லை, வீழ்ச்சி இல்லை. இவ்வாறு முதல்-அமைச்சர் கலைஞர் கூறினார்.

  கனிமொழி எம்.பி: சென்னை சங்கமம் கலைவிழா தொடக்க
  வி-ழாவில் ஒருங்கிணைப்-பாளர் கவிஞர் கனி-மொழி எம்.பி. பேசிய-தாவது:-
  சென்னை சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடை-பெற முதல்-அமைச்சர் கலைஞர் ஊன்றுகோலாக விளங்குகிறார். இந்த கலைவிழா, சென்னையில் 4-வது ஆண்டாக நடக்-கிறது. தமிழ்நாட்டில் மறக்கும் நிலையில் இருந்த பல கிராமிய கலைகளை உயிர்ப்பித்து அந்த கலை-யில் ஆர்வம் உள்ளவர்-களை மீண்டும் உயிர்ப்-பிக்கும் நிகழ்ச்சியாக இந்த கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
  சரித்திரங்களை வென்-ற-வர்-கள், வெற்றி மகுடம் சூடியவர்கள் மட்டும் மக்களுக்கு தெரிந்தால் போதாது. சாமானிய மக்களிடம் வாழ்ந்து வரும் நாட்டுப்புற கலை-களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே இந்த கலைவிழாவின் நோக்கம் ஆகும்.
  இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

  பொய்க்கால் குதிரை: 7 பேர் கொண்ட பொய்க்கால் குதிரை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் பல கலைஞர்கள் மேளதாளம் இசைத்தனர். ஒரு குழுவினர் பாட்டும் பாடினார்கள். அதையடுத்து, கலைஞர்களின் தப்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. பின்னர் முரசு கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  அதைத்தொடர்ந்து பிறப்பொக்கும் நிகழ்ச்சியில் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. பின்னர் காளியாட்டம் நடந்தது. அதன்பின்னர் கூத்து, கரகாட்டம் ஆகியன நடைபெற்றன. இறுதியில், யாவரும் ஓர் குலம், மனிதரில் வேற்றுமை இல்லை என்ற அளவில் நவீன கொற்றவையாக நடிகை ஷோபனா தோன்றினார்.

  கண்கொள்ளா காட்சி: செம்மொழிக்கு ஏற்றமே எம் தமிழருக்கு ஏற்றமே சாதியற்ற தமிழ் நாங்கள் என்று சந்தம் பாடுவோம் என்ற பாடலுடன் கலைநிகழ்ச்சி முடிவடைந்தது. மொத்தத்தில் ஒரேநேரத்தில் 300 கலைஞர்கள் மேடையில் தோன்றி நடனமாடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கிராமிய கலைகளை சென்னை நகரவாசிகள் குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் மிகவும் ரசித்துப் பார்த்தனர்.
  விழாவில், பிறப்பொக்கும் நிகழ்ச்சியை இயக்கிய பிரசன்ன ராமசாமி, ஒத்துழைப்பு கொடுத்த ஷைலஜா, கொற்றவை நடனம் ஆடிய நடிகை ஷோபனா, அரங்கம் அமைத்துக்கொடுத்த தோட்டாதாரணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பி.எம்.சிவக்குமார், ஜெகத் பிரைட் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் கலைஞர் நினைவுப்பரிசு வழங்கினார்.

 2. குப்புசாமி Says:

  தமிழர் புத்தாண்டை மாற்றியதில், எங்கு தமிழ் நெறி காணப்பட்டது?

  • vedaprakash Says:

   அது துக்ளக்கின் அரசியலைப் போன்றது.

   இந்தியாவில் எப்படி, சரித்த்ரத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கு கருணாநிதி ஒரு உதாரணம்.

   இப்படி, ஆளவந்தவர்கள் தமதிச்சைக்கேற்றாவாறு மாற்ரியதால்தான், இந்திய வரலாற்றில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன!

   இருப்பினும், மக்கள் ஏற்றூக்கொள்ளாத நிலையில், இத்தகைய துகளக் வேலைகள் தானகவே அழிந்துவிடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: