இலங்கை சபாநாயகர் / கார் / வேன் மீது செருப்பு வீச்சு!

இலங்கை சபாநாயகர் மீது செருப்பு வீசுகிறோம் என்று கோவிலுள் செருப்புகள் வீசிய காட்சி தொலைகாட்சியில் நன்றாகவே தெரிந்தது!

தமிழகத்தில் இலங்கை சபாநாயகர் மீது செருப்பு வீச்சு

தட்ஸ்தமிழ் – ‎16 மணிநேரம் முன்பு‎
சீர்காழி: இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் லோகு பண்டாரா மீது மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செருப்பு வீசிப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை நாடாளுமன்ற தலைவர் கார் மீது செருப்பு வீச்சு: 11 பேர் கைது

தினமணி – ‎5 மணிநேரம் முன்பு‎
சீர்காழி, ஜன. 9: நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலுக்கு சனிக்கிழமை வந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் டபிள்யூ.ஜெ.எம். லொக்கு பண்டாரவின் கார் மீது செருப்பு

இலங்கை சபாநாயகர்வேன் மீது செருப்பு வீச்சு

தினமலர் – ‎4 மணிநேரம் முன்பு‎
மயிலாடுதுறை:வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை பார்லிமென்ட் சபாநாயகரின் வேன் மீது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் செருப்புகளை வீசி,

இலங்கை சபாநாயகர் கார் மீது செருப்பு வீச்சு: மயிலாடுதுறை அருகே பரபரப்பு
[ சனிக்கிழமை, 09 சனவரி 2010, 12:44.18 PM GMT +05:30 ]
மயிலாடுதுறை அருகே இலங்கை சாபநாயகர் லொக்கு பண்டார அவர்கள் சென்ற கார் மீது சிலர் செருப்புகளை வீசியதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை சபாநாயகர் லொக்கு பண்டார, மயிலாடுதுறை,  வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி கும்பிட வந்தார். அப்போது அவரது கார் மீது சிலர் செருப்புகளை வீசியுள்ளனர். இதில் சாபாநாயகர் மகன் மீது பலத்த அடி விழுந்தது.

இதையடுத்து சபாநாயகர் மற்றும் அவரது மனைவி காரை விட்டு இறங்கவில்லை. சாமி தரிசனம் செய்யாமல் அவர்களை மதிமுக விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்னொரு செய்தி இப்படி:

பின்னர் காரில் அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கார் வந்ததும் கார் மீது செருப்பை வீசி எறிந்தனர். அந்த செருப்பு கார் மீது பட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல் துறையினர் இலங்கை சபாநாயகரின் கார் அங்கிருந்து பாதுகாப்புடன் செல்ல உதவினர். அதன் பின்னர் செருப்பு வீச்சு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர்

ஆகவே, உண்மையிலேயே இலங்கையின் மீதான எதிர்ப்பை அவ்வாறு தெரிவித்தார்களா அல்லது இந்த சாக்கை வைத்துக் கொண்டு , தமக்கேயுரித்தான நாத்திகவீரத்துடன் அவ்வஆறு செய்தார்களா?

Advertisements

3 பதில்கள் to “இலங்கை சபாநாயகர் / கார் / வேன் மீது செருப்பு வீச்சு!”

 1. குப்புசாமி Says:

  இலங்கையினுடையது எதுவாக இருந்தாலும் எதிர்ப்பது என்றால்……………………..?

  • vedaprakash Says:

   குருவிகளின் போக்குவரத்து அதிகமாகிவிட்டது என்பது செய்தி!

   அக்குருவிகள் எல்லாம், தமிழ் குருவிகளா, தமிழ் பேசும் குருவிகளா, திராவிட குருவிகளா, இந்து குருவிகளா அல்லது உருது பேசும் குருவிகளா, ஆரிய குருவிகளா, முஸ்லிம் குருவிகளா……….என்றெல்லாம் பார்ப்பார்களா?

   அவர்கள் கொண்டுவரும் பொருட்களை ஏற்பார்களா மாட்டார்களா?

 2. vedaprakash Says:

  இலங்கைக்கு பறக்கும் தமிழ் ‘குருவிகள்’ அதிகரிப்பு
  ஜனவரி 10,2010,00:00 IST

  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6227&ncat=&archive=1&showfrom=1/10/2010

  இலங்கையில் கெடுபிடிகள் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து அங்கு, “குருவியாக’ செல்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது.

  இலங்கையில் ராணுவம் – விடுதலைப்புலிகள் இடையே, நடந்த போர் கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. அங்கு புலிகள் அமைப்பினர் இல்லாத நிலையில், வெளிநாட்டு பயணிகள் மத்தியில் இருந்த, போர் பீதியும் முற்றிலும் குறைந்துள்ளது. இதை பயன்படுத்தி, சுற்றுலா பயணிகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க அந் நாட்டு அரசு பாதுகாப்பு கெடுபிடிகளை, அதிரடியாக தளர்த்தியுள் ளது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும், தீவிர சோதனைக்கு பிறகே வெளிநாட்டு பயணிகளும், அந்நாட்டு மக்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற இடங்களில் வெளிநாட்டு பயணிகள் சுதந்திர பறவைகள் போல், சுற்றித்திரிந்து எழில் சூழ்ந்த இலங்கை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை ரசித்துச் செல்கின்றனர். பாதுகாப்பு கெடுபிடிகள் குறைந்துள்ளதை பயன்படுத்தி, இலங்கை வழியாக போதைப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றை கடத்தும் தொழிலும் தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, தமிழகம் – இலங்கை இடையேயான கடத்தல் தொடர்புகள், சமீப காலமாக அதிகரித்துள்ளன.

  சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, வேலையில்லாத இளைஞர்கள் கடத்தல் பொருட்களை கொண்டு வரும், “குருவி’யாக பயன்படுத்தப்படுகின்றனர். இதற்காக தனி, “நெட் வொர்க்கு’கள் ரகசியமாக இயங்கி வருகின்றன. ஒருவர் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சென்று திரும்பி வர, 6,000 முதல் 7,000 ரூபாய் வரை விமான டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், சில டிராவல் ஏஜன்டுகள் அடிக்கடி சென்றுவரும் குருவிகளுக்கு, 4,000 முதல் 5,000 ரூபாய்க்குள் அவற்றை ஏற்பாடு செய்து தருகின்றனர். இதன்மூலம் குருவிகள் இலங்கை சென்று வர பாதுகாப்பு கெடுபிடியின்றி, “விசா’ பெறுகின்றனர். அங்கு சுற்றுலா பயணிகளுக்கு உடனுக்குடன் “விசா’ வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து கொழும்பு செல்ல, ஒரு மணிநேரம் மட்டுமே ஆவதால், குருவிகள் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு கடத் தல் பொருட்களுடன் அன்றே புறப்பட்டு தமிழகம் வந்தடைகின்றனர்.

  மலேசியா, சிங்கப்பூர் உள் ளிட்ட நாடுகளில் இருந்து, கடத் தல் பொருட்கள் எடுத்து வருவதால், அங்கிருந்து வருபவர்களிடம் அதிக சோதனைகள் செய்யப்படுகின்றன. மேலும், அங்கு செல்பவர்களுக்கு, “விசா’ கிடைக்க, இரு நாட்களுக்கு மேல் ஆகின்றது. அதனால், அந்நாடுகளில் இருந்து, இலங்கைக்கு கடத்தல் பொருட்களை எடுத்து வந்து அவற்றை தமிழகத்திற்கு கடத்துவது மிக சுலபமாக இருப்பதால், தற்போது கடத்தல் சூடு பிடித்துள்ளது. கடத்தல் பொருட்களுடன் வரும் குருவிகள், வெளிநாட்டு மதுபானங்கள், விலை உயர்ந்த ஆடைகளையும் எடுத்து வருகின்றனர். ஒரு முறை இலங்கை சென்றுவரும் குருவிக்கு 5,000 ரூபாய் சம்பளமும், விமானப்பயணம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா அனுபவமும் கிடைக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், இலங்கையில் மீண்டும் பாதுகாப்பு கெடுபிடி அதிகரித்து, மிகச்சிறந்த சுற்றுலா தளத்திற்கு செல்லும் வாய்ப்புகள் பலருக்கு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கையை சுதந்திரமாக ரசிக்க கிடைத்துள்ள வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமானால், தமிழ்நாட்டு, “குருவிகள்’ படையெடுப்பை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: