மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-2

மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-2

சு. அறிவுக்கரசு

http://viduthalai.periyar.org.in/20100105/news06.html

(கிறிஸ்டோபர் ஹிட்சின்சின் நூலில் 35 ஆம் கட்டுரை இது) கிறிஸ்துவ மதத்தின் தத்துங்கள் உண்மைகள் என்று கொஞ்சம் கூட நம்பத்தக்கவையாக இல்லை எனத் தெரிந்த பின்பும் கண்களை மூடிக் கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம் அல்லவா? பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆதி மனி-தர்கள் உலகம் தட்டையென்றும், சொர்க்கம் மேலே உள்ளது என்றும், இந்த உலகத்தை மிகவும் பேராசை கொண்ட சண்டைக்கார தெய்வம் உண்டாக்கி இயக்கி வருகிறதென்றும், அது சொல்கிறபடி நடந்து கொள்ளா-விட்டால் தண்டிக்கும் என்றும் உளறி-யிருப்பவற்றின் அடிப்படையில் ஒருவர் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது அடிப்படையான தவறு அல்லவா?

கடவுளுக்கு விடை தருதல் (கி திணீக்ஷீமீஷ்மீறீறீ ஷீ நிஷீபீ) எனும் நூலில் குறிப்பிட்டுள்ள கேள்விகளில் சில மீண்டும் தரப்படுகின்றன. இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் (எகிப்து நாட்டின்) கெய்-ரோவில் பிறந்திருந்தால் 84 கோடி மக்-களைப் போலவே நீங்களும் முசுலி-மாக இருந்து அல்லாவைத் தவிர வேபறு கடவுள் இல்லை. முகமது அவரின் தூதர் என்று கூறிக் கொண்டிருப்பீர்களா, இல்லையா?

நீங்கள் (இந்தியாவின்) கல்கத்-தாவில் பிறந்திருப்பீர்களேயானால், 65 கோடி இந்துக்களில் ஒருவராக, வேதங்களையும், உபநிஷத்துகளையும் புனிதமாகப் போற்றி, எதிர்காலத்தில் நிர்-வாண நிலையை அடையும் எண்ணத்-தில் இருந்திருப்பீர்களா, இல்லையா?

நீங்கள் ஜெருசலத்தில் பிறந்தி-ருந்தால், 130 லட்சம் யூதர்களில் ஒருவராக, யேவாதான் கடவுள் என்றும் டோரா – தான் கடவுளின் வாக்கு என்-றும் சொல்லிக் கொண்டிருப்பீர்களா, இல்லையா?

நீங்களே (சீனாவில்) பீகிங்கில் பிறந்திருப்பீர்களேயானால் கோடிக்-கணக்கானவர்களைப் போல, புத்தர் அல்லது கன்பூஷியஸ், அல்லது லாவோட்சே ஆகியோர்களின் போதனைகளை ஏற்று அதனைப் பின் பற்றி வாழ்ந்திருப்பீர்கள்,அல்லவா?

உங்கள் பெற்றோர்கள் கிறித்து-வர்-கள் என்பதால்தானே நீங்களும் கிறித்துவராக இருக்கிறீர்கள்? (எழு-தியவர் தம் நாட்டில் உள்ள மதத்-தவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.)

கடவுள் அன்பானவர் என்றால் – ஏன் அவர் பூகம்பம், வறட்சி, வெள்-ளம், சூறைச் சுழற்காற்று போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை உற்பத்தி செய்து ஆயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வோர் ஆண்டும் சாகடிக்கப்பட அனுமதிக்-கிறார்?

சர்வசக்தி வாய்ந்த அன்பு மய-மான கடவுள் என்றால் – அவர் ஏன் மூளை அழற்சி, பெரு மூளை முடக்கு நோய், மூளைப் புற்று, குட்டம், அல்-ஜிமர்ஸ் போன்ற பல கொடும் நோய்-களை லட்சக்கணக்கான மக்களுக்குப் பீடிக்கச் செய்து ஆண், பெண், குழந்-தைகள் என்று அமைதியான மக்-களைச் சாகடிக்க வேண்டும்?

வானுலகத்தில் வாழும் அன்பே உருவான கடவுள், ஏன் மதக் கருத்து-களை ஒப்புக் கொள்ள மறுக்கிற மனி-தர்-களைத் தண்டித்துத் தள்ளுவற்-கா-கவே நரகத்தைப் படைக்க வேண்டும்? அப்படி நரகத்தில் தள்ளி கடைசிவரை ஏன் கொடுமைப்படுத்த வேண்டும்?

பைபிள் மீது நம்பிக்கை வைத்-திருக்கும் கிறித்துவ மதத்தில் ஏன் நூற்-றுக்கணக்கான பிரிவுகள்? தனித்-தனி-யான மக்கள் கூட்டம் ஏன்? மற்ற-வரின் நம்பிக்கை பொய்யானது என ஒருவர்க்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதேன்?

கிறித்துவர்கள் எல்லாரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறார்கள் எனும்போது, மதப் பிரிவு சம்பந்தமான வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரோடு ஒருவர் கூட்டுறவு கொள்ளாமல் இருப்பது ஏன்?

கடவுள் அன்புமயமான தந்தை என்றால் – தன் குழந்தைகளின் பிரார்த்தனைகளை நிறைவேற்றாதது ஏன்?

தொடங்கிய காலத்திலிருந்து பல கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை உயிரினங்கள் அடைந்துள்-ளன என்று அறிவியல் அறிஞர்கள் நிரூபித்திருக்கும் நிலையில், இந்த உலகமும் உயிர்களும் ஆறே நாள்களில் படைக்கப்பட்டன எனும் பைபிள் கருத்தை எப்படி நம்ப முடியும்?

ஆதிமனிதனை கர்த்தர் மண்ணைப் பிசைந்து உண்டாக்கினார் என்றும் அவனது விலா எலும்பில் இருந்து பெண்ணைப் படைத்தார் என்றும் கூறப்படுவதை அறிவுள்ள மனிதர்கள் ஏற்க முடியுமா?

தன் மகனை உலகில் ஒரு மனி-தனாக நடமாடச் செய்வதற்காகவே உலகைப் படைத்த கடவுள் ஒரு பாலஸ்தீனப் பெண்ணைத் தாமே பிள்ளைத் தாய்ச்சியாக்கினார் என்பதை நம்ப முடியுமா?

கடவுள் பொறாமை பிடித்-தவர் என்று பைபிள் கூறுகிறது. அந்தக் கடவுள்தான, எங்கும் நிறைந்த, எல்-லாம் வல்ல, எல்லா ஆற்றலும் படைத்-தவராக நிரந்தரமானவராக இருந்து எல்லாவற்றையும் படைத்தவர் என்ற நிலையில் இருக்கும்போது அவர் யாரைக் கண்டு பொறாமைப் பட-வேண்டும்.

உலகில் பல கோடி மக்கள் பட்டினியாலும் துன்பத்தாலும் துய-ருறும் போது, கிறித்துவர்கள் ஏன் தேவாலயங்களுக்காகவும் மடால-யங்களுக்காகவும் பெருந்தொகை-களைச் செலவிட்டு, ஏழை எளியவர்-களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பது ஏன்?

வறண்டநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள், மழை இல்லாத காரணத்தால் பட்டினியால் சாகும் நிலை இருக்கும்போது, சர்வ சக்தி படைத்த கடவுள் ஏன் மழை-யைக் கூடத் தராமல், அவர்களைச் சாகடிக்கிறது?

மனித குலம் முழுமைக்குமான தந்தை எனப்படும் கடவுள், ஏன் தனக்கு என தெரிந்தெடுக்கப்பட்ட மக்-களை (சிலீஷீமீஸீ றிமீஷீஜீறீமீ) பொறுக்கி எடுத்து மற்றவர்களை விட அவர்-களுக்கு மட்டும் சலுகை காட்டுவது ஏன்?

திருமண உறவைத் தாண்டி கள்ள உறவு (கிபீறீமீக்ஷீஹ்) வைக்கக்கூடாது எனக் கண்டிக்கும் கடவுள், 700 மனைவி-களையும் 300 வைப்பாட்டிகளையும் வைத்-திருந்த மன்னரை ஆசீர்வதித்து மேலும் வளமாக வாழ்வதற்கு ஏன் அனுமதித்தார்?

கிறித்துவ தேவாலயங்களில் பணி புரிபவர்கள் முழுவதும் ஆண்களாக மட்டுமே இருந்து கொண்டு, பெண்-களைப் பாதிரியாக, பிஷப் ஆக, ஆர்ச் பிஷப் ஆக, கர்டினல் ஆக, போப் ஆக வருவதற்கு ஏன் அனுமதிப்பதில்லை?

ஏசு தன்னைப் பின்பற்றுபவர்-களி-டம் கடைசிக் காலத்தில் உலகம் முழுவதும் சென்று பைபிளில் கூறப்-படும் வேதக் கருத்தை எல்லா உயிர்களிடத்தும் எடுத்துச் செல்லுங்கள்; நான் எப்போதும் உங்களுடனே இருப்பேன் எனக் கூறி-னாராம். அதன் பின்னும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றைய தேதிவரை, கோடிக்கணக்கான மக்கள் கிறித்துவ வேதத்தைக் கேட்காமலேயே இருக்கிறார்களே ஏன்? எப்படி?

(கிறித்துவக் கொள்கைகளைப் பின்பற்றாமல் இந்து, இசுலாமிய, பவுத்த, பார்சி, சீக்கிய, யூத மதங்களைப் பின்-பற்றிடும் கோடானுகோடி மக்கள் இருப்பது ஏன்?)

(கட்டுரையாளர் சார்லஸ் டெம்-பிள்டன் 86 ஆண்டுகள் வாழ்ந்து 2001 இல் மறைந்தவர். உலகத்தில் பிரபலமான கிறித்துவ மதப் பிரச்சாரகரான (அண்மையில் பெங்களூரு வந்துபோன) பில்லி கிரகாம் என்பாரின் நண்பர். (மறைந்த டி.ஜி.எஸ்.தினகரன், நம் தமிழர் தலைவரின் நண்பர் என்பது நினைவு கூரத்தக்கது).

மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!    சு. அறிவுக்கரசு   விடுதலை 07-02-2010, ப.2

http://viduthalai.periyar.org.in/20100206/news09.html

நேற்றைய தொடர்ச்சி…

சைத்தான்தான், யுத்தங்கள், பஞ்சங்-கள், நோய்கள், பேரழிவுகள் போன்ற-வற்றிற்குக் காரணமாம். அப்பேர்ப்பட்ட சைத்தானை ஏன் கடவுள் கொல்ல-வில்லை? முடியாதோ? இதற்கு விடை யாரும் கூறவில்லை.

தன்னை வணங்குவதற்காக மனி-தனைப் படைத்த அல்லா – தன்னைத் தவிர வேறு எவரையும் தன்னால் படைக்-கப்பட்ட மனிதன் வணங்கக்-கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ள அல்லா, -மனிதனை வணங்குமாறு ஏன் சைத்தானைக் கேட்டுக் கொண்டது?

நெருப்பிலிருந்து படைக்கப்பட்ட சைத்தான், யாரால் படைக்கப்பட்டது? அல்லாதான் படைத்தது என்றால், ஏன் படைத்தது? மனிதர்களையும் மற்ற உயிர்களையும் கொடுமைப்படுத்தும் சைத்தானையும் அல்லாதான் படைத்தது என்றால் – அது எப்படி அளவற்ற அரு-ளா-ளனும், நிகரற்ற அன்புடையோனும் என்ற அடைமொழிக்குப் பொருத்த-மானது?

பூமியிலோ அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும்_- அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹீல் மஹ்பூள்) ஏட்டில் இல்லாமல் இல்லை; நிச்சயமாக அது அல்லாவுக்கு மிக எளிதானதேயாகும் என்று குர்ஆன் அத்தியாயம் 57 வசனம் 22 இல் உள்ளது. இயற்கை இடர்ப்பாடுகள் (பூகம்பம், சுனாமி, எரிமலை) மனிதருக்கு ஏற்படும் விபத்துகள் போன்றவை எல்லாமே அல்லா முன்னதாக எழுதிய ஏட்டில் உள்ளவாறே நடக்கின்றன என்றால் – இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான கடவுள் எப்படி அருளாளன்? நிகரற்ற அன்புடையவன்?

சைத்தான் செய்கிறான் என்று கூறி-விட்டுப் பிறகு நான் எழுதி வைத்த-படியே நடக்கிறது எனக் கூறுவது முரண்பாடு அல்லவா? கடுகடுப்பான முன்கோபம் கொண்ட சர்வாதிகாரியை எப்படி அருளாளன், அன்பாளன் எனக் கூறலாம்?

கடவுள் மண்ணைத் தன் கைகளால் பிசைந்து, அந்தக் களிமண் கட்டியை இரு துண்டங்களாக்கி, ஒரு துண்டை நரகத்தில் போட்டு இரு நெருப்பா-கட்டும் என்றதாம்; மற்றொரு துண்டை சொர்க்கத்தில் போட்டு அங்கே இருக்-குமாறு செய்ததாம். ஆக, கடவுளுக்குக் கைகள் உண்டு என எழுதப்பட்டுள்-ளது. உருவம் இல்லாத கடவுள் என்று எப்படிக் கூறப்படுகிறது?

எல்லா ஆலயங்களிலும், மதங்-களும் கடவுளிடமிருந்து சிறப்பான தூது வந்தது என்றும், இவருடன் பேசி-யது என்றும் கூறப்படுகிறது. யூதர்-களுக்கு மோசே. கிறித்துவர்களுக்கு யேசு. துருக்கியர்களுக்கு முகம்மது. எல்லாருக்கும் ஒரே மாதிரியாகக் கட-வுளின் வழி கிடையாது. ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு நூலைத் தூக்கிப்பிடித்து, இது கடவுளே அருளியது, அதனுடைய சொற்கள் அடங்கியது என்கின்றன. மோசேயு-டன் நேருக்கு நேர் கடவுள் பேசியது என்கிறார்கள். கர்த்தரின் உள்ளுணர்-வால் அதன் வார்த்தைகள் அறியப்-பட்டதாக கிறித்துவர்கள் கூறுகிறார்கள். சொர்க்கத்தில் இருந்து வந்த (தேவ) தூதன் மூலமாகக் கிடைத்த அல்லா-வின் வார்த்தைகள் குர்ஆன் என்-கிறார்கள். இவை ஒவ்வொன்றும் மற்றவற்றைக் குறைகூறி நம்ப மறுக்கின்றன. நான் அவை அனைத் தையும் நம்ப மறுக்கின்றேன் என்-றார் தாமஸ் பெய்ன். (Thomas Paine – The Age of Reason)

அறிவு யுகம் (Age of Reason) எனப்படும் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெய்ன் தம் நூலில் கீழ்க்-காணும் வாதத்தை முன் வைக்கிறார்…. ஒருவருக்கு ஒரு செய்தி கடவுளால் தெரிவிக்கப்பட்டது என்று வாதத்திற்-காக வைத்துக் கொண்டாலும், அந்த நபருக்கு மட்டுமே அருளப்பட்டது என்று ஆகும்; மற்றவர்களுக்கு அருளப்பட்டது என ஆகாது. இரண்டாம் நபருக்கு அவர் சொல்லி, இரண்டாம் நபர் வேறு ஒருவருக்குச் சொல்லி, மூன்றாம் நபர் நான்காம் நபருக்கு என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போனால், முதல் நபருக்கு மட்டுமே அது அருளப்பட்டது என்றும் மற்றவர்களுக்கு அது செவிவழிச் செய்தி என்றுதான் ஆகும். எனவே அவர்கள் அதை நம்பவேண்டும் என்று கட்டாயமல்ல…

சொர்க்கத்தில் எழுதி வைக்கப்பட்டு தேவதூதர் ஒருவரால் (Angel) மக மதுக்குத் தெரிவிக்கப் பட்டதாகக் கூறப்படும் குர்ஆன் செவிவழிச் செய்தி என்ற வகையில் இரண்டாம் பட்ச செய்திதான். நான் எந்த தேவதூதனை யும் சந்திக்க வில்லை; ஆகையால் அதனை நம்பாமல் இருக்கும் உரிமை எனக்கு உண்டு.

இதை எப்படி மறுக்க முடியும்?

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் கடவுள், தனி நபருக்கு மட்டுமே (மோசே, யேசு, முகமது) காட்சி தந்துள்ளார்(?) உலகக் கோப்பை, கால்-பந்தாட்டப் போட்டி நடக்கும் மைதா-னத்தில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம் முன்பாக கடவுள் தோன்றலாமே! இந்தக் கேள்வியை பாட்ரிசியா க்ரோன் என்பார் எழுதிய கட்டுரை ஒன்றில் (TLS 21.1.1994) குறிப்பிட்டு எழுப்பியுள்ளார்.

மூன்று மதத்தவர்களும் இதற்கு மறுமொழி கூறலாமே!

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-2”

  1. குப்புசாமி Says:

    இது உண்மையில், தைரியமாக கிருத்துவர்களையே அல்லது முகமதியர்களையோ விமர்சனம் செய்வது அல்ல.

    வீரமணிக்கு அந்த அள்:அவிற்கு தைரியம் இல்லை.

    இது போலி நாத்திகத்தின், மற்றொரு வடிவம், அவ்வளவே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: