திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி: அன்பழகன் விளக்கம்!

திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் விளக்கம்

http://viduthalai.periyar.org.in/20100103/news01.htmlசென்னை, ஜன.3_ திராவிட பல்கலைக்கழக அனுமதி கேட்க சென்ற-வர்களிடம் திராவிட என்ற சொல்லை நீக்கு-மாறு அப்போதைய மத்திய அமைச்சர் ஜோஷி கேட்டார் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்துள்-ளார். ச.வே.சுப்பிரமணியன் எழுதிய 81 நூல்கள் வெளி-யீட்டு விழா சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் நூல்களை வெளியிட நல்லி குப்பு-சாமி பெற்றுக் கொண்-டார். பின்னர் அன்பழ-கன் பேசியதாவது:

திராவிட பல்கலைக்கழகம்: தமிழறிஞர் வ.அய்.சுப்பிர-மணியம் ஆந்திர மாநி-லம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அர-சின் ஒப்புதல் கேட்டு அப்போதைய கல்வி அமைச்சர் முரளி மனோ-கர் ஜோஷியை சந்தித்-தார். அனுமதி கொடுத்து விடுகிறேன். திராவிட என்ற பெயரை மட்டும் எடுத்துவிடுங்கள் என்று ஜோஷி கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணியம், தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற சொல்லை நீங்கள் நீக்கிவிட்டால், இந்த பல்கலைக்கழகத்தில் வரும் திராவிட என்-பதையும் நீக்கி விடுகி-றோம் என்று பதில-ளித்தார். ஜோஷி வாய-டைத்து போனார். தமிழ் செம்மொழி ஆனதை கேட்டு நெஞ்சடைத்து போயிருக்கும்.

நான்கு வர்ணம் இல்லை: உலக பொதுமறை தொல்காப்பியம் என்று ச.வே.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திருக்குறள்-தான் உலக பொதுமறை. தொல்காப்பியம் தமிழர்-களின் பெருமைக்குரியது. எழுத்து, சொல், ஆகிய-வற்றை வடமொழிக்கு தமிழே கடன் தந்தது.

வடமொழிக்கு எழுத்தே கிடையாது. அது இந்தோ _ அய்-ரோப்பிய எழுத்து என்கிறார்கள். ஆனால் அந்த வகை எழுத்து-களுடன் வடமொழி எழுத்து ஒத்துவர-வில்லை. தமிழுக்கு செம்-மொழி தகுதியை பெற்று தருவதில் முதலிடம் வகிப்பது தொல்காப்-பியம். தமிழனின் மரபு என்று பிரித்துக் காட்டி மாற்றாக வருவதையெல்-லாம் அன்னியம் என தவிர்த்து பாதுகாக்கவே தொல்காப்பியம் தோன்றி-யது. தொன்மையான இந்த நூலும் இடைத்-செருகலுக்கு ஆட்பட்டி-ருக்-கிறது, அதை மறுக்க முடியாது. வேற்று கலாச்-சார கருத்துகளும் அப்-படி இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலத்-தில் மேல் மக்கள் உண்டு, மேல் ஜாதி இல்லை. நான்கு வர்ணம் இல்லை, மனு ஸ்மிருதி இல்லை. குறிப்பிட்ட சமூகத்தின-ருக்கு திருமண உரிமை இல்லை. அவர்கள் இணைந்து மட்டும் வாழ-லாம் என்ற வைதீக கலாச்சார கருத்துகள் தொல்காப்பியத்தில் இடம்-பெற்றுள்ளன. இடைச் செருகல்களை களைந்து தனித் தமிழ் படைப்பாக தொல்காப்-பியத்தை ச.வே.சுப்பிர-மணியன் ஆக்கித்தர வேண்டும். ஆந்திர, கர்-நாடக பகுதிகளில் பழந்-தமிழனின் தொடர்ச்சி இல்லாதலால் அங்கு காப்பியங்கள் என்றாலே ராமாயணம், மகாபாரதம் என்றாகிவிட்டது. தமிழ் என்றால் பகை என்ற அளவுக்கு அது வளர்ந்து விட்டது. இவ்வாறு க. அன்-பழகன் பேசினார். ச.வே.சுப்பிரமணியன் ஏற்புரை ஆற்றினார். பதிப்பாளர் மீனாட்சி சோமசுந்தரம், சிலம்-பொலி செல்லப்பன், முன்-னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, அறவாணன் உள்பட பலர் பேசினர்.

—————————————————————————————————————————————

தொல்காப்பிய உரை இடைச்செருகல்களைக் களைய வேண்டும்: நிதி அமைச்சர் க. அன்பழகன்
First Published : 03 Jan 2010 03:08:44 AM IST

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE……….%A=177727&SectionID=97&MainSectionID=97&SEO=&SectionName=Chennai

சென்னை புத்தகக்காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகம் பதிப்பித்த 81 நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல்
சென்னை, ஜன.2: தொல்காப்பிய உரைகளில் காணப்படும் இடைச்செருகல்களைக் களைந்து புதிய உரையை எழுத தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என நிதி அமைச்சர் க. அன்பழகன் வலியுறுத்தினார்.சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகத்தில் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பித்த 81 நூல்கள் வெளியிடப்பட்டன.நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல் பிரதிகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.விழாவில் க. அன்பழகன் பேசியது:திருவனந்தபுரத்தில் ச.வே. சுப்பிரமணியன் ஆரம்பித்த திராவிட மொழியியல் ஆராய்ச்சி நிறுவனமே தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், ஆந்திரத்தில் திராவிட மொழியியல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக அமைந்தது.இலக்கியங்கள் அதிகமாக உள்ள மொழிக்கு மட்டுமே இலக்கண நூல் எழுத முடியும் என்ற அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியம் கி.மு. 500}ல் வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், அதற்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் செழுமையான இலக்கியங்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.இத்தகைய செழுமையான இலக்கியங்கள் உருவாக வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அதிக மக்களால் பேசப்பட்டிருக்க வேண்டும்.   அவ்வாறு பேசப்பட்டிருக்க வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழி உருவாகியிருக்க வேண்டும்.திருக்குறள் மட்டுமே உலக பொது நூலாக கருதப்படுகிறது. ஆனால், தொல்காப்பியம் தொடர்பான தனது நூல்களில் ச.வே.சுப்பிரமணியன் தொல்காப்பியத்தை உலகப் பொது நூல் என குறிப்பிட்டுள்ளார்.தொல்காப்பியரின் நோக்கம் மொழிக்கு இலக்கணம் வகுப்பது. திருக்குறளின் நோக்கம் மனித வாழ்வுக்கு இலக்கணம் வகுப்பது. எனவே, தொல்காப்பியம் தமிழின் தனி சிறப்புக்குரிய நூல் என்றே கருதப்படுகிறது.தொல்காப்பியத்துக்கு பல்வேறு காலங்களில் பல்வேறு அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஆனால், தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி- கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வர்ணாஸ்ரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையை தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என்றார் அன்பழகன்.ச.வே. சுப்பிரமணியன் பேசியது: நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் அந்த மொழியில் இலக்கண நூல் இல்லை. பெரும்பாலான மொழிகளுக்கு சம்ஸ்கிருதத்திலும், சில மொழிகளுக்கு ஆங்கிலத்திலும் இலக்கண நூல்கள் உள்ளன. சொந்த மொழியிலேயே இலக்கண நூல் பெற்ற சிறப்பு தமிழுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் செம்மொழியாக அறிவிக்க தொல்காப்பியமும் ஒரு சான்றாக உள்ளது.10 ஆயிரம் ஆண்டு இலக்கியங்கள் இருந்தால் மட்டுமே தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் எழுத முடியும். ஏராளமான இலக்கியங்களை ஒலைச்சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாக பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யர் தொல்காப்பியத்தை மட்டும் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார் என்றார் சு.வே. சுப்பிரமணியன்.தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ, மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், மெய்யப்பன் பதிப்பக உரிமையாளர் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
———————————————————————————————————————————————

தொல்காப்பியத்தை ஒருமுறையேனும் படித்தவர்களுக்குத்தான் தெரியும், எப்படி தொல்காப்பியம் மனுஸ்மிருதியைச் சார்ந்திருக்கிறது என்று. அதனால்தான் அன்பழகன் நாஜுக்காக அப்படி இடைச்செருகல்களைக் களைய வேண்டும் என்கிறார். அப்படி களைந்தால், தொல்காப்பியமே இருக்காது! 1950களிலேயே ஐக்கிய நாடுகள் சபை விஞ்ஞான ரீதியில் “இனங்கள்” (Races) என்பதில்லை என்று பிரகடனப் படுத்தி, அவ்வார்த்தையே (Race) உபயோகப்படுத்தக் கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. ரோமிலா தாபர் போன்ற மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்களும் அதனை ஏற்றுக் கொண்டு, ஆரியர், ஆரியர் படையெடுப்பு முதலியனவெல்லாம் சரித்திர ஆதாரமற்றவை என்று ஒப்புக் கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும், “திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு கலாட்டா செய்து வருபவர்கள் தாம், இன்னும் அந்த கருதுகோள்களைப் பிடித்துக் கொண்டு “ஆரிய-திராவிட இன”வாதங்களை இன்றும் பேசிவருகின்றனர். உண்மை சொல்லவேண்டுமென்றால் அவர்கள் தாம் ஹிட்லர் போலவே இனவெறியோடு ஒரு குறிப்பிட்ட இந்திய நாட்டு மக்களை கேவலமாக, ஆபாசமாக தூஷித்து வருகின்றனர். அதற்குதான் அவர்களுக்கு அந்த குப்பைத்தொட்டியில் போட்ட சித்தாந்தம் உதவுகிறது. வயதாகிவிட்டதால், பாவம் அன்பழகன் கூட இடத்திற்கு இடம் வேறு-வேறுவிதமாகப் பேசுகிறார்.  “உ.வே. சாமிநாதய்யர் தொல்காப்பியத்தை மட்டும் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார்”, என்கிறார் சு.வே. சுப்பிரமணியன். முன்பு திருக்குறளை தெய்வநாயகத்துடன் சேர்ந்து அவமதித்தவர் இவர், இன்று இவர் மற்றவரைப் பற்றிப் பேசுகிறார்.

Advertisements

ஒரு பதில் to “திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி: அன்பழகன் விளக்கம்!”

  1. குப்புசாமி Says:

    அன்பழனுக்கும் பித்து பிடித்துவிட்டது.

    இந்த தெலுங்அன் முன்னம், ஓரளவிற்கு நியாயமாக இருந்தான்.

    இப்பொழுது, தன்னுடைய நிலமை சரியில்லை, இனி சாகும்வரை தனக்கு வேறெந்த பதவியும் கிடைக்காது என்றெல்லாம் தெரிந்தவுடன், இப்படி உளர ஆரம்பித்து விட்டார் போலும்.

    தன்னுடைய மறுமகளைக் காப்பாற்ற ஒருவேளை இத்தகைய வேலைகளை செய்கிறார்போல இருக்கிறது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: