பிள்ளையார், ஜெயகாந்தன், நாத்திகம், தமிழர்களின் லட்சணம்!

பிள்ளை – யார்? [விடுதலை 02-01-2010, எழுதியது: மயிலாடன்]

http://viduthalai.periyar.org.in/20100102/news28.html

நான் நாத்திகன்; ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும்: சென்னை _ கண் மருத்-துவமனை இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் எழுத்தாளர் ஜெய-காந்தன் தெரிவித்த கருத்து _ இவ்வெழுத்தாளரின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள தடு-மாற்றத்தைத் தெ(ரி)ளி-விக்கிறது. எதிலும் வித்தியாசமான சிந்தனையாளர் என்ற மதிப்-பீட்டிலிருந்து விலகிப் போகும் விபரீதம் இதில் விவரமாகவே யிருக்கிறது. நான் நாத்திகன்; ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப் பேன்-இதுபக்தியல்ல என்று பேசியிருக்கிறார். பக்தர்களும் பரிகசிப்-பார்கள்; பகுத்தறிவாளர்-களும் ஏளனம் செய்வார்-கள். எதிலும் திட்டவட்டமான சிந்தனை இல்லாதவர்கள் இப்படிதான் ஆப்பதனை அசைத்துவிட்டு அபாயகர-மாகச் சிக்கிக் கொள்வார்கள். ஆத்திகம், நாத்திகம், பக்தி இவை எதிலும் தெளிவில்லா-தவர் என்பதைத் தெளி-வாகவே இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டாரே! நாத்திகன் என்றால் யார் என்ற சிந்தனையில் தெளி-வாக இருந்தால் பிள்ளை-யாரை எப்படி பிடிக்கும்? ஒருக்கால் சாணியை, களி-மண்ணைப் பிடித்து வைத்-துப் பிள்ளையார் என்று கூறி விடுவதால் பிடிக்கும் என்-கிறாரோ ஒரு வார்த்தை விளை-யாட்டுக்காக! (எழுத்-தாளர் அல்லவா!) நான் செய்யும் ஒவ்-வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன் என்கிறார். சரி, நினைத்தால் என்ன நடந்ததாம்? கண் மருத்துவ-மனை விழாவில் இப்படி பேசுவதற்கு முன்புகூட பிள்ளையாரை நினைத்துக் கொண்டுதான் இப்படிப் பேசி-யிருப்பாரோ! பிள்ளையாரை நினைத்துக் கொண்டு பேசி-னால் இப்படித்தான் தத்துப்-பித்தென்று திரிபுவாத நோய்க்கு ஆளாக நேரிடும் என்று எடுத்துக் கொள்ள-லாமா? இவர் எழுதும் எழுத்து-களுக்கெல்லாம் உரிமை கொண்டாடப் போகிறவர் பிள்ளையாரா_ தோழர் ஜெயகாந்தனா?

எந்தப் பிள்ளையாரை நினைத்துக் கொள்கிறார்? ஒரு பிள்ளையாரா – _ இரு பிள்ளையாரா? ஒரு நீண்ட பட்டியலே உண்டே! பார்வதி தேவியாரின் அழுக்கில் பிறந்த பிள்ளை-யாரா? சிவன் ஆண் யானை-யாகவும் பார்வதி பெண் யானையாகவும் மாறிக் கலவி செய்து ஈன்-றெடுத்த யானை முகப் பிள்ளையாரையா? சமுத்திர ஸ்நாதனம் செய்து கடலையே தம் தும்-பிக்கையால் குடித்து, அதன்பின் சிறுநீராகக் கழித்ததால் கடல்நீர் உப்பு-கரிக்கும் நிலைக்கு ஆனதாக உளறப்படும் புராணப் பிள்ளையாரையா? அம்மாவைப் போலவே தனக்கு மனைவி வேண்டும் என்ற கேட்ட வக்கிரப்புத்தி படைத்த ஆலமரத்தடி பிள்ளையாரா? எழுதவே கூச்சமாக இருக்கிறதே.. அந்த வல்லபை கணபதி-யையா? போயும் போயும் பிடித்-தாரே முருங்கைக் கொம்பை! தோழர் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்து-களுக்கு இருக்கும் கம்பீரத்தையும் ஆளுமையையும் விநாயக சதுர்த்தியன்று பிள்ளை-யாரைக் கடலில் கரைப்பது-போல ஆன்மீகக் கடலில் விழுந்து கரைத்துவிட வேண்டாம்! என்ன இருந்தாலும் தோழர் ஜெயகாந்தன் ஒரு தமிழர் ஆயிற்றே! – மயிலாடன்

விமர்சனம்: பிள்ளையரைப் பற்றி அவதூறு இல்லை அதற்கும் மேலே, தமிழில் ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று தெரியவில்லை, அதைத் தொடர்ந்து செய்துவந்து, “தமிழர் இனமானத்தலைவர்” என்றெல்லாம் குறிக்கொண்டு அலையும் இவர்களுக்கு தமிழர்களை கேவலப்படுத்துவதைத் தவிர வேறு வேலையே இல்லை போலும்.

சமீபத்தைய பகுத்தறிவு மாநாட்டிலேயே இவர்களது அறிவு, நாத்திகம் முதலியன வெளுத்துவிட்டது. ஹிந்தியில் பெரியார் தொடல் அதிர்ந்தபோது, கருப்புச்சட்டைகள் அதிர்ந்துபோய் விட்டனர். “இடம் மாறி உட்கர்ந்ததாக நடித்து” வேவு பார்த்தனர். ரகளைசெய்யவும் தீர்மானித்தனர். பாவம், மேடையிலே ஆங்கிலத்திலே பேசிக்கொண்டிருந்த ஒரு கருப்புச் சட்டை பெரும்பாடு பட்டு, இடையிடையே மைக்கிப் பிடிங்கி, தொந்தரவு செய்து, அந்த “இடம் மாறிகளை” இடம் மாற கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்!
பிள்ளையாரை ஜெயகாந்தனுக்குப் பிடிக்கும் அது அவருடைய நம்பிக்கை. திக, திமுக முதலிய போலி, நகலான, நாத்திகர்களுக்கு கடவுளின் பிள்ளையான ஏசுவைப் பிடிக்கிறது,  அல்லாவைப் பிடிக்கிறது. அப்பொழுது எந்த ம்ஆனம், ரோஷம், சூடு, சொரணையுள்ளத் தமிழனும் அதைக் கேட்பதில்லையே? எந்த மயிலாடன், மானாடன், நாயாடன், நரியாடன், பன்னியாடன்,………………..என்று பெயர்வைத்துக் கொண்டு அந்த ஏசுப்பிள்ளைகளையும், அல்லாப்பிச்சைகளையும் பற்றி இவ்வாறு எழுதவில்லையே?

இப்படி எந்த நாத்திகம் தமிழகத்தில் வேலை செய்கிறது என்று தெரியவில்லை! தமிழனுக்கு அந்த அளவிற்கு என்னவாகி விட்டது? கிருத்துவத்தில், இஸ்லாத்தில் ஏனிப்படியான பகுத்தறிவுகள் இல்லை என்று ஏன் ஆரய்ச்சி செய்யவில்லை? அங்கு பகுத்தறிவுடன் ஏன் நாத்திகம் வேலை செய்வதில்லை? இந்த நாத்திகம், பெரியார் நாத்திகம், வீரமணி நாத்திகம் ஏன் மற்ற பிள்ளைகள், பிள்ளைமார்கள், மாப்பிள்ளைகள், மப்பிள்ளைகள், முதலியவர் எப்படி பிறந்தன என்று கேட்பதில்லை!

ஒரு பதில் to “பிள்ளையார், ஜெயகாந்தன், நாத்திகம், தமிழர்களின் லட்சணம்!”

  1. குப்புசாமி Says:

    ஒன்று மட்டும் நிச்சயம்.

    இன்று யாராவது பிள்ளையாரை உடைப்பேன் என்று கிளம்பினால், அவர்களை மக்கள் நிச்சயம் உடைத்து விடுவார்கள்!

    இன்று தேவை, சைவர்கள் மற்றும் வைணவர்களுடைய ஒற்றுமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: