திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும்

பெரியார் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது: பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்கிறார் வீரமணியார்: திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன் பாராட்டு

http://viduthalai.periyar.org.in/20091229/news24.html

சென்னை, டிச. 29_ தந்தை பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்ப-வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியார் அவர்கள் என்று தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் தனது உரையில் குறிப்-பிட்டார். சென்னை பெரியார் திடலில் நேற்று (27.-12.-2009) இந்திய பகுத்தறி-வாளர் சங்கக் கூட்ட-மைப்-பின் மாநாடு நடை-பெற்றது. இம்மாநாட்டில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்-கள் எழுதிய God Delusion என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழியாக்கம் செய்து திராவிடர் கழகத்-தின் சார்பில் தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். இந்நூலின் முதல் படியி-னைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு திட்டக் குழுத் துணைத் தலைவர் பேரா-சிரியர் மு.நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பிற்போக்கான அமெரிக்க நாடு:  வளர்ந்த அமெரிக்க நாடு பிற்போக்குவாதிகள் நிறைந்த நாடு. அங்கு கடவுளை மதத்தை நம்பக் கூடியவர்கள் அதிகம் இருக்-கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அறிவியல் பணி-யைச் செய்து கொண்டி-ருக்கிறார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்த டார்வின் மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி. இருபதாம் நூற்-றாண்-டில் கடவுள் இல்லை என்று சொல்லி இடைய-றாமல் போராடியவர் தந்தை பெரியார். அவர் மதங்களை ஒழிக்கப் போராடினார். ஜாதி-களை ஒழிக்கப் போராடி-னார். மக்கள் சமத்துவ உரிமை பெறவேண்டும் என்பதற்காகப் போராடி-னார். அனைத்து ஜாதி-யினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காகப் போராடினார். இப்படிப்பட்ட நிலை-யில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்கள் எழுதிய ஆங்-கில நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளி-யிட்ட நமது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பெருமகனார் அவர்-களை-யும், இந்த நூலை தமி-ழில் மொழி பெயர்ப்ப-தற்கு உதவிய பேரா-சிரியப் பெருமக்களையும் பாராட்டுகிறேன். தந்தை பெரியார் வழியில் மிகச் சிறப்பாக ஆசிரியர் அவர்-கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.

பெரியார் வழியில் ஆசிரியர்: 1930, 1940ஆம் ஆண்டு-களில் உலக அறிவியல் அறிஞர்களின் நூல்களை எல்லாம் ஆங்கில மொழி-யில் இருந்து மொழி பெயர்த்து தமிழில் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அது மட்டுமல்ல. தந்தை பெரியார் அவர்-களுடைய கருத்துகளை திராவிடர் கழகத் தலை-வர் தமிழர் தலைவர் ஆசி-ரியர் அவர்கள் எல்லா ஊர்களிலும், எல்லா நகரங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கின்றார். நமது ஆசிரியரைப் பற்றிச் சொல்ல வேண்டு-மானால் தந்தை பெரி-யாரின் மறுவடிவமாக, தந்தை பெரியாரின் மறு ஆக்கமாகத் திகழ்கிறார் என்றால் அது மிகை-யா-காது. அந்த அளவுக்கு ஆசிரியர் வீரமணியார் அவர்களுடைய பணி பாராட்டத் தக்க அள-விலே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய பணியைப் போற்றுகிறேன். கடவுள் -_ ஒரு பொய் நம்பிக்கை என்ற இந்த நூலை ஆங்கிலத்தில் இரண்டு முறை படித்தேன்.

பெரியார் கருத்து உலகமெலாம்:  தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து-கள் இன்றைக்கு உலக-மெங்கும் பரவிக் கொண்-டிருக்கிறது. ஒரு காலத்-தில் பெரியாருடைய கருத்-துகளை இருட்டடிப்பு செய்து பார்த்தார்கள்.

கலைஞர் – வீரமணியார் சுறுசுறுப்பு: பெரியாருடைய கடவுள் இல்லை என்ற கருத்து இன்றைக்கு ரிச்சர்டு டாகின்ஸ் மூலம் வெளியே வருகிறது, பரவு-கிறது. பெரியாரைப் பின்-பற்றுகிறவர்கள் நீண்ட காலம் வாழுகிறார்கள். தந்தை பெரியாருடைய குருகுலத்தில் பயின்ற தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 86 வயதிலும் சுறுசுறுப்பாக பொதுமக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார். அதே போல நமது ஆசிரியர் அவர்களும் இந்த 77 வயதிலும் சுறு-சுறுப்பாக இருந்து கொண்டு பொதுப் பணிகளை ஆற்றி வருகிறார். பெரி-யாரின் பேரியக்கத்தை யாராலும் அழிக்க முடி-யாது. தேவநாதன் என்ற காஞ்சிபுர அர்ச்சகர் அவருடைய செயலா-லேயே கடவுள் இல்லை என்று காண்பித்து-விட்-டார்.

நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், நாத்திகர்: 2003ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அறி-ஞர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் ஒரு நாத்-திகர். அவர் ஒரு நாத்தி-கர் என்ற செய்தியே ஊட-கத் துறையால் மறைக்கப்-பட்டது. பிறகு நான் தேடித் தேடி அலைந்து அந்த ஆதாரத்தைக் கண்டுபிடித்தேன். அறிவி-யல் இதழ்களிலி-ருந்து ஆதார பூர்வமாக எடுத்-தேன், அவர் ஒரு நாத்தி-கர் என்ற செய்தியை. நோபல் பரிசு பெற்ற சந்-திரசேகர் சாகும் தறுவா-யில் இருந்த பொழுது அவரிடம் கடவுள் நம்-பிக்கையைப் பற்றிக் கேட்-டார்கள். ‘‘எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். நான் இளமை-யிலிருந்தே நாத்திகனாக வளர்ந்தேன். நான் இறப்-பைப் பற்றி கவலை கொள்-ளவில்லை’’ என்று தெளிவாகச் சொன்னார். 12 ஆம் நூற்றாண்-டின் இஸ்லாமிய கவிஞர் உமர் கயாம் ஒரு நாத்-திகர். கடவுளை நம்பாத-வர். சொர்க்கம், நரகம் என்று வேறெதுவும் இல்லை. இந்த பூமிதான் சொர்க்கமும் நரகமும் ஆகும் என்று பாடியவர் அவர்.

மா சே துங் சொன்னார்: மாசேதுங் சொல்-கிறார் ‘‘தொழிலாளிகள், விவசாயிகளின் மூளையை உறைய வைப்பதற்காக முதலாளிகள் மதம் என்ற மாத்திரையைப் பயன்படுத்தினார்கள்’’ என்று. தந்தை பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னார். அந்-தக் கருத்துகளைத்தான் இன்றைக்கு அறிவியல் அறிஞர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். நான் நாத்திகன் என்னுடைய சகோதரர் நரேந்திரன் ஒரு நாத்திகர்.

முரசொலி மாறன் சொன்னார்:  மறைந்த மத்திய அமைச்-சர் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க நான் டில்லி சென்றிருந்-தேன். அவர் உடல் நலம் இன்றி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த சமயம். நான், அண்-ணன் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க டெல்லியில் அவருடைய இல்லத்தில் அமர்ந்திருந்-தேன். மத்திய அமைச்ச-ரான அவரோ எங்கோ வெளியே சென்று விட்டு இல்லத்திற்குத் திரும்பி-னார். என்னைப் பார்த்த-வுடன் ‘‘நீங்கள் எவ்வளவு நேரமாகக் காத்திருக்-கி-றீர்கள்’’ என்று கேட்டார். ‘‘நான் அரைமணி நேர-மாகக் காத்திருக்கிறேன்’’ என்று செல்லிவிட்டு ‘‘நீங்-கள் எங்கே சென்று வரு-கிறீர்கள்’’ என்று கேட்-டேன். ‘‘ஒன்றுமில்லை. நான் உடல் நலம் தேறி வந்ததற்காக குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ண காந்த் என்னைப் பார்ப்பதற்காக வரு-கிறேன் என்று சொன்-னார். இல்லை நீங்கள் வர வேண்டாம் நான் வருகிறேன் என்று சொல்-லிவிட்டு அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்ததில்-தான் இந்த காலதாமதம்’’ என்றார். அது மட்டு-மல்ல குடியரசுத் துணைத் தலைவரே ஒரு மூட-நம்பிக்கையாளராக இருக்-கிறார் என்று சொல்லி-விட்டுச் சொன்னார். என்னை குடியரசு துணைத் தலைவர் கேட்டார். நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வந்திருக்கிறீர்-கள். நீங்கள் உயிர் பெற்-றது கடவுளால் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டார். உடனே நான் சொன்னேன். நான் உயிர் பெற்றது மருத்துவர்-களின் முயற்சியால், மனிதர்-களின் முயற்சியால். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சொன்னார். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த ஆசிரியர் அவர்-களுக்கும் நிகழ்ச்சி ஏற்-பாட்டாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரி-வித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரி-யர் மு.நாகநாதன் பேசினார்.

விமர்சனம்:

1. இந்த ஆட்சியில் அரசு அதிகாரத்தில் இருந்து கொண்டு, தமது தகுதியை மறந்து வாய்க்கு வந்தபடி பேசுவது “பேராசிரியர்கள்”, “கவிகோக்கள்”, “கவிஞர்கள்”, “கலைஞர்கள்”………….என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

2. முன்பே குறிப்பிட்டபடி, நடந்தது ஒரு “Rationalist” மாநாடேத் தவிர, “நாத்திக மாநாடு” அன்று. அதிலும், திராவிட வகைப் போலிப் பகுத்தறிவுவாதிகள் இல்லை. கூட்டமைப்பில் வந்துள்ள சிலர் உண்மையான ‘நாத்திகர்களும்” உள்ளார்கள். அதாவது அவர்கள் எல்லா கடவுளர்களையும் மறுப்பவர்கள். இந்த போலித் திராவிட நாத்திகர்களைப் போல இந்துமதத்தை மட்டும் எதிர்க்கவில்லை.

3. ஆகவே யார் நாத்திகர்கள் என்றி நாகநாதன் போய் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. முதலில் அவர்கள் தங்களது பெண்டாட்டிகள் – ஒன்று அல்லது ஒன்றிற்கு மேல்………….இருக்கும் மனைவி-துணைவியரை, மகள்கள், சகோதரிகள்………….. கோவிலுக்குச் செல்லாமல்…………….., பொட்டு வைக்காமல்…………., தாலியில்லாமல்……………, தலையில் பூ வைக்காமல்…………………………………., இருக்க பயிற்சி அளித்து மாற்றட்டும். பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்.

4. உமர் கய்யாம் நாத்திகர் என்றெல்லாம் பேசுவது சரியான பேத்தல். ஒருவேலை ஜகதீஸன் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். இப்படி பேராசியர் என்று ப்ட்டம் வைத்துக் கொண்டு ப்ய்களைக் கொட்டினால் உலகம் சிரிக்காதா? உமர் கய்யாம் ஒரு நாதிகன் என்றால் அவன் என்றோ கொலை செய்யப்பட்டிருப்பான்.

5. மேலும் அந்த இரு நாட்களிலிலும் உட்கார்ந்து மாநாட்டு பேச்சுகள், செயல்பாடுகள், முதலியவற்றை கவனித்தாலே தெரியும் உண்மை என்னவென்று.

6. பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அப்பொழுது தனது நண்பர் என்று கூறிக்கொள்ளும் நரேந்திரன் அடித்த கமென்ட் அவருக்குத் தெரியாது. கேட்டுத் தெரிந்து கொள்ளட்டடும்.

7. பெரியாரைப் பற்றியும் அவர்களுக்கு – அதாவது வட இந்தியாவிலிருந்து வந்துள்ள இந்தி பேசும் பகுத்தறிவு வாதிகளுக்கு ஒன்றும் தெரியவில்லை, அல்லது சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவகள் ஏதோ பெரியார் என்றால், காந்தி, புத்தர் என்பது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது போலிநாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு, வட இந்தியர்களுன் மீதான காழ்ப்பு முதலியன அவர்களுக்குத் தெரியவில்லை. அதைப் பற்றிக் கேட்டபோது, “அப்படியா?” என்று வேறு கேட்கிறார்கள்.

8. நமது திராவிட நண்பர்கள் அந்த நாத்திகர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியது நிறையவே உள்ளது. நாக்பூருக்குச் சென்று இரண்டு நாட்களும் உட்கார்ந்து கொண்டு உண்மையான பகுத்தறிவு, விஞ்ஞான சிந்தனை என்பதையெல்லாம் அறிந்து-புரிந்து கொண்டு டார்வினைப் பற்றியும், அமெரிக்காவின் பிற்போக்குத்தனத்தையும் பற்றி பேசினால் நன்றாக இருக்க்கும். இப்படி பேத்தி, உளறி, பொய்களைக் கொட்டவேண்டாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: