அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

விமர்சனம்:

ஹிந்தியில் பேசியதை அப்படியே மொழி பெயர்க்கப் படவில்லை.

முன்பே குறிப்பிட்டபடி –
* காரணங்களை அறியாமல் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற தன்மை (rationalism),
* ஏற்றுக்கொண்டுள்ள ஞானத்தை மறுத்தல் / எதையும் அறிய முடியாது என்று வாதித்தல் (agnosticism),
* சந்தேகித்தல்/நம்பிக்கையின்மை (skepticism),
* மதத்தில் நம்பிக்கையின்மை (non-belief in religious system),
* கடவுளை மறுத்தல் (atheism),
* விஞ்ஞான நம்பிக்கை (Scientific temper)
முதலியவற்றை குழப்பிப்பேசும் பல கோஷ்டிகள் இந்த கூட்டமைப்பில் உள்ளனர்.
ஆனால் திகவினரோ இந்து எதிர்ப்பாளர்கள் என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை.
பொது சிவில் சட்டத்தை அமூலாக்க வேண்டும் என்று தீர்மானத்தை (எண்.3) நிறைவேற்றியபோது, கருப்புச்சட்டைகள் திகைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: