இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து!

இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து: கலைஞர்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=23422

தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விடுக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி!

இயேசு பெருமான் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கிறித்தவ சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் சூன் திங்கள் 23 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரை 5 நாள்கள் கோவையில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், கிறித்தவ சமயத்தைப் பரப்பிடும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள் நினைவில் எழுகின்றன. அவ்வகையில், 1606இல் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, தமிழ்த் துறவியாக வாழ்ந்து,  தத்துவ போதகர்’ எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டு தொண்டாற்றி, தமிழ் உரைநடையைச் செப்பம் செய்த இராபர்ட் டி. நொபிலி!

அதே இத்தாலியிலிருந்து 1700இல் வந்து, கிறித்தவத் தொண்டுகளுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளாக, தேம்பாவணி, சதுரகராதி முதலிய நூல்கள் பல படைத்த வீரமாமுனிவர்! 1709இல் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்து, தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடம் நிறுவி, பொறையாறில் இந்தியாவிலேயே முதன் முதலாகக் காகித ஆலையையும் நிறுவி, தமிழ்   இலத்தீன் அகராதி, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான தமிழ் நூல்கள் பல கண்ட சீகன் பால்க் !

இங்கிலாந்து நாட்டிலிருந்து, 1839இல் தமிழகம் வந்து சமயப் பணிகளாற்றி, திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன், இங்கிலாந்து திரும்பிச் சென்ற பின் அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மேனாட்டினருக்குத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தி, தமிழ் மொழி மீது கொண்ட காதலால், நான் ஒரு தமிழ் மாணவன் எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யூ. போப்!

அயர்லாந்து நாட்டில் பிறந்து 1889 இல் தமிழகம் வந்து, நெல்லைச் சீமையில் தங்கி, “திருநெல்வேலி சரித்திரம் என்னும் ஆங்கில நூலுடன், திராவிட மொழிகளை ஆய்ந்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் அரிய நூலைப் படைத்துத் தமிழ்மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டிய மேதை கால்டுவெல் போன்றோர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டுகளெல்லாம் வரலாற்றில் நின்று நமக்கு எழுச்சியூட்டுகின்றன.

அக்கிறித்தவப் பெருமக்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, மண்ணில் மனிதநேயம் தழைக்க, “அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று; எனப் பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தமிழக அரசின் சார்பில் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

விமர்சனம்:

ஏற்கெனவே ஆங்கிலத்தில் பல கட்டுரைகளில் கருணாநிதியின் கிருத்துவ பாதிரிகளைப் பாரட்டும் போக்கை எடுத்துக் காட்டியுள்ளேன்.

குறிப்பிடப்பட்டுள்ள பாதிரிகளின் சரித்திரங்களை அவர்களே விவரமாக எழுதியுள்ளார்கள். அதாவது அவர்கள் ஏன் தமிழ் கற்றர்கள், எத்தனை தமிழ் நூல்களை அழித்தார்கள், எடுத்துச் சென்றார்கள், தமிழ் கலாச்சாரத்தைக் கெடுத்தார்கள் – முதலிய விழயங்கள்.

ஆனால் கருணாநிதியோ, இன்னும் பழங்கதைகளையே விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்துக்களை ஏளனம் பேசிவிட்டு, மற்றவர்களை வாழ்த்துவதே தமிழ் பண்பல்லாதது.

அந்நிலையில், சரித்திர ஆதாரமில்லாது, உண்மைகளை மறைத்து இப்படி புருடா விடுவது இன்னும் அயொக்கியத்தனமாகும்.

இங்குதான் பிரச்சினை வருகிறது!

Advertisements

ஒரு பதில் to “இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து!”

  1. குப்புசாமி Says:

    இந்த ஆளுக்கு சரித்திரம் தெரியாது என்று நன்றாஆகத் தெரியுது.

    சரித்திர ரீதியாக ஏசுவேயில்லை என்றநிலை வந்து விட்டது.

    பிறகேன்ன அவரது அடிசுவட்டைப் பின்பற்றுவது?

    தேவையில்லாமல், இம்மாதிரி இந்துக்களைத் தூண்டிவிடுகிறார் போலும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: