அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

செக்யூலரிஸம் பேசியோ, இஸ்லாம் பேசியோ விளக்கேற்ற மறுத்தது செக்யூலரிஸ நாட்டின் அமைச்சர் அஹமது!

அவர் மறந்தது தான் எல்லா இந்தியர்களுக்கும் இந்திய நிர்ணயச் சட்டத்தின் படி அமைச்சர் என்பதை!

அங்குதான் அவரது அசட்டுத்தனம் வெளிப்பட்டது!

செக்யூலரிஸத்தை மதிக்கும் / மித்திக்கும் போக்கையும் இந்தியர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த கருவைப் பற்றிப் பேசவே வேண்டாம்.

வயசானாலும், செக்யூலரிஸ விசயத்தில் பத்து அஹமதுக்களையும் மேலேயுள்ள நிலையில் உள்ளவர்.

அதில் ISO 9001, 10009 என்றெல்லாம் கொடுத்தாலும் தகும்!

அவர் சொல்கிறார், “ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது“, என்றெல்லாம்!

இங்கு வரிசையாக நின்றுகொண்டு பச்சைக் கொடிகள் ஏந்தியுள்ளனர்?

ஏன் சிவப்புக் கொடிகள் கூடாது?

கொடிகளைக் கவிழ்த்து ஆட்டுகிறார்களே?

ஏன் தூக்கி ஆட்டக்கூடாது?

இன்று இப்படியெல்லாம் பேசும் தேசியம், இன்றும் அப்படி-இப்படி மாநில சுய ஆட்சி என்ற பிரிவினையும் பேசுகிறதே, ஏன்?

இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இந்தியாவைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறே, அம்மாதிரி நடிக்க்கின்றனறே, அதுவும் இந்த பழுத்த, முதிர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவ்வ்வாறு பேசுகின்றனறே, அதை என்னவென்பது?

மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள் : முதல்வர் கருணாநிதி பேச்சு
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6030&ncat=&archive=1&showfrom=12/23/2009

Front page news and headlines todayசென்னை : “மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பல புதிய ரயில்களும் இயக்க வேண்டும் ,’ என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஆறு நாட்களுக்கும், ஜம்முதாவி – மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ஜம்முதாவி – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டும், திருநெல்வேலி – பிலாஸ்பூர் இடையே வாராந்திர ரயிலும், கன்னியாகுமரி – ராமேஸ்வரம் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் அதிவேக விரைவு ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இன்னும் பல ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு, புதிய ரயில்களை, பாதைகளை அமைத்து தரவேண்டும். ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பெட்டிகள் கழண்டு போய்விடாமலும், பிரிந்து போய்விடாமலும் ஒற்றுமைப்படுத்தி இலகுவாக இழுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நிலை இல்லாமல் போய்விடும். எனது சொந்த ஊரான திருக்குவளைக்கு, புதிய ரயில் பாதை அமைக்க திட்டம் உள்ளது. இதை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது விரைவாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

மதுரை: ஜம்முதாவி – நெல்லை வரை நீட்டிக்கப்பட்ட ரயிலை , மதுரையிலிருந்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கால் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஜினியர் தங்கராஜ், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் அப்துல்கபர் பங்கேற்றனர். ஜம்முதாவி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் (6788) ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரைக்கு பகல் 2.50 மணிக்கு வந்து சேரும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 க்கு திருநெல்வேலி சென்று அடையும். திருநெல்வேலி- ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் (6787) திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து பகல் 3.45 க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7க்கு வந்து சேரும். இரவு 7.15 க்கு புறப்படும். இவை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சியில் நின்று செல்லும். ஜம்மு தாவியில் நாளை, திருநெல்வேலியில் டிச.,25 லிருந்து முறைப்படி இயக்கப்படும்.

நெல்லை: திருநெல் வேலி – பிலாஸ்பூர் ரயில் துவக்க விழா நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. நெல்லை எம்.பி.,ராமசுப்பு, மதுரை மண்டல மூத்த வணிக அதிகாரி ஹோசியார்சந்த், மண்டல இன்ஜினியர் ராம்கிஷோர், நெல்லை நிலைய அதிகாரி கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisements

ஒரு பதில் to “அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!”

 1. குப்புசாமி Says:

  கருணாநிதிக்கு என்றைக்குமே இந்தியன் என்ற உணர்வில்லை.

  1970களில் மாநில சுய ஆட்சி கேட்டு கலாட்டா செய்து வந்தார்.

  வீரப்பன், பிரபாகரன், மற்றவர் உயிரோடு இருக்கும்போது, வேறுமாதிரி கனவு கண்டார்.

  இருவரும் இறந்தபிறகு, அமைதியாக இருந்து, பிறகு இப்பொழுது மறுபடியும் ஆரம்பித்து விட்டார்.

  கல்லக்குடி தண்டவாளத்தில் படுத்து கலாட்டா செய்தது எங்களுக்கெல்லாம் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. கண்ணதாசன் சொன்னதும் நினைவிருக்கிறது.

  இந்த அழகில். நோபல் பரிசு வாங்கவேண்டும் என்ற ஆசைவேறு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: