பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு நிலம்!

தஞ்சை வல்லத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,32,600 வீதம் 40 ஏக்கர் நிலம் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு தமிழர் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் முதலமைச்சருக்கு நேரில் நன்றி

http://viduthalai.periyar.org.in/20091222/news01.html

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரை இன்று (22.12.2009) அவரது இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணி சந்தித்து பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு நிலம் அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். உடன் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச்செயலாளர்கள் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு ஆகியோர் உள்ளனர்.

சென்னை, டிச. 22_ தஞ்சாவூர் வல்லம் வடக்கு சேத்தி கிராமத்-தில் பெரியார் மணி-யம்மை அறக்கட்டளை நடத்தும் கல்லூரிக்கு (தற்போது பெரியார் மணியம்மை பல்கலைக்-கழகம்) நிர்ணயிக்கப்பட்ட விலையில் 40 ஏக்கர் நிலம் வழங்கிட தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்-தில் முடிவு செய்யப்பட்-டது. அறக் கட்டளை-யின் தலைவர் கி. வீரமணி மற்றும் கழகப் பொறுப்-பா-ளர்கள் முதல் அமைச்-சர் கலைஞர் அவர்களை இன்று காலை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்-டனர். அமைச்சரவை முடிவு வருமாறு:

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வடக்கு சேத்தி கிராமத்தில் பெரியார் மணியம்மை அறக்கட்-டளைக்கு மகளிர் பொறி-யியல் கல்லூரி கட்ட நிலம் அளிப்பது குறித்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறு-வனத்தின் முறையீட்-டினை ஆய்வு செய்து_- மேற்படி நிலம் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக குத்தகை அடிப்-படையில் இந்நிறுவனத்-தின் இருப்பிலும், அனு-பவத்திலும் இருந்து வரு-வதாலும், மேலும் இந்த நிறுவனம் பெண்களுக்-கென தனியாக தொழில்-நுட்பக் கல்வி அளிப்ப-தென்ற சீரிய நோக்கி-னைக் கருத்தில் கொண்-டும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் 9.1.2009 நாளிட்ட அறிக்-கையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,32,600 என விலை நிர்ணயம் செய்துள்ளதை 40 ஏக்கர் முழுமைக்கும் கடைப்பிடித்து கணக்-கிட்டு மொத்தம் 53 லட்-சத்து 4 ஆயிரம் ரூபாயை நில மதிப்பாக வசூலித்-துக் கொண்டு வருவாய் நிலை ஆணை மற்றும் உரிய நிபந்தனைகளுடன் நில உரிமை மாற்றம் செய்-வதற்கு அமைச்சரவை முடிவெடுத்தது.

முதலமைச்சர் சந்திப்பு

தமிழ்நாடு அமைச்-சரவை எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் வகை-யில் இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்-சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து, அறக்கட்ட-ளையின் தலைவர்
கி. வீரமணி பொன்-னாடை அணிவித்து நன்-றியினைத் தெரிவித்துக் கொண்டார். கழகப் பொருளாளர் வழக்கறி-ஞர் கோ.சாமிதுரை, முத-லமைச்சருக்கு பூங்-கொத்து கொடுத்து நன்றி கூறினார்.

பெரியார் கல்வி நிறுவன வளர்ச்சிக்குத் தாங்கள் செய்துள்ள இந்த உதவிக்கு தங்களுக்-கும், அமைச்சரவைக்கும் நன்றியினையும், மகிழ்ச்-சியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறக்கட்டளைத் தலை-வர் கூறினார்.

தமிழர் தலைவருடன் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமி-துரை, பொதுச்செயலா-ளர்கள் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு ஆகி-யோ-ரும் சென்றிருந்தனர். முதலமைச்சரிடம் சிறிது நேரம் உரையாடி விடை பெற்றுத் திரும்-பினர்.

Advertisements

3 பதில்கள் to “பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு நிலம்!”

 1. குப்புசாமி Says:

  இப்படி ஏக்கர் ஒரு லட்சரோபாய் என்று கொடுத்தால், எல்லோருமே வாங்கிக் கொள்ளலாமே?

  ஒரு ரூபாய் அர்சி திட்டம் போல, இப்படி “ஒரு ஏக்கர் ஒரு லட்சம்” என்று அள்ளிக் கொடுத்தால் ஏன் நன்றி சொல்லமட்டார்கள்?

  “நிர்ணயிக்கப்பட்ட விலையில் 40 ஏக்கர் நிலம் வழங்கிட தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்-தில் முடிவு செய்யப்பட்-டது” – இது மாதிரி எல்லா அறக்கட்டளைக்கும் கொடுப்பதுதானே?

  ஏன் பெரியார் மணியம்மை அறக்கட்-டளைக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது?

 2. devapriyaji Says:

  The Trust was running the Periyar Maniyammai University- that was one of the 44 Deemed Universities which central government wants to be De-Recognised for Mismanagement and conducting courses without Authority.

  Then why TN Govt give such help to Fraudsters.

  • vedaprakash Says:

   In Tamilnadu context, the issue has to be analysed and investigated in three angles – land graabbing, financial frauds and commercialization of education. The overall nexus amomg the involved – the politicians (ruling and not-ruling), their kith and kin, slose-friends, benamis and others would gey exposed then only. Ypu may kindly note the irony of the Chancellor of that University! Instead of discussing about the serious issue of this problem, he has indulged in mudslinging of Bagawan Ramana Rishi!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: