பெரியாரின் “வைப்பாட்டிக் கதை”!

பெரியாரின் “வைப்பாட்டிக் கதை”!

“வைப்பாட்டிக் கதை” இன்று “விடுதலை”யில் வெளியிடப் பட்டுள்ளது! ‘-குடிஅரசு’, துணைத் தலையங்கம், 05.09.1926 என்ற குறிப்பும் உள்ளது.

வைப்பாட்டிக் கதை

http://viduthalai.periyar.org.in/20091220/news28.html

சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யம் வந்துவிட்டால் பார்ப்பனரல்லாத ஸ்திரீ-களைப் பார்ப்பனர் தங்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதாகவும், அது பார்ப்பனரல்லார் சமூகத்திற்கே அவமானமாகிவிட்டதாகவும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒரு கூட்டத்தில் நீலிக் கண்ணீர் விட்டார். இதைப் பார்த்து அவரது இரண்-டொரு பார்ப்பனரல்லாத சிஷ்யர்களும் பின்பாட்டுப் பாடி தங்கள் சமூகத்திற்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூலி மாரடித்துக் கொண்டார்கள்.

இவர்கள் உண்மையிலேயே நாயக்கர் சொன்னதற்-காக மாரடித்துக் கொண்டார்களா அல்லது அய்யங்-காரின் உப்புக்காக மாரடித்துக் கொண்டார்களா? என்பதைக் கவனிப்போம். பார்ப்பனரல்லாதார் ஸ்திரீகளைப் பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக இருக்க சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதில் என்ன தப்பு? இதற்கு முன்னமே அந்தச் சட்டம் அமலில் இருக்கிறதை இவர்கள் அறிந்தும் இன்றுதான் இதை நாயக்கர் சொல்லக் கேட்டவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள்.

இந்து உலகத்தில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள்? இந்துவாயிருந்தால் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கிற அய்ந்து வகுப்பில்-தான் சேர வேண்டும். கலியுகத்திலோ க்ஷத்திரி-யரும் வைசியரும் இல்லை என்கிறார்கள். ஓட்டல்களிலும் பிராமணன், சூத்திரன் என்றுதான் எழுதுகிறார்கள். ஆதலால் மீதி இருப்பது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய மூன்று வகுப்பார்கள்.

இதில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் தங்களை பிராமணர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அய்யங்கார் சிஷ்யர்கள் தங்களைப் பஞ்சமர்கள் என்றும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஆகவே இவர்கள் சூத்திரர் என்பதை மறுக்க முடியாது. சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்திற்கும் வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417ஆவது சுலோகங்-களில் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்-றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு இவர்கள் வசமுள்ள பொருள்களைப் பலாத்கார-மா-கவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

இது ஏன் நமது நாட்டில் சில பாகத்தில் மாத்திரம் அமலில் இல்லை என்றால், பார்ப்பனர் கோரும் சுய-ராஜ்-யம் இல்லாததால்தான் என்கிற பொருள் கொண்டே அன்று சொன்னோம் என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம். ஆனால் சில பாகத்தில் இன்னமும் அமலில் வைத்துக் கொண்டும் நமது சகோதரிகளை தங்கள் வைப்பாட்டிகளாக்கிப் பிள்ளைகள் பெற்று உல-கத்திலுள்ள ஓட்டல்களுக்கும் காப்பிக் கடைகளுக்கு மெல்லாம் எச்சில் எடுக்கவும், எச்சில் கிண்ணம் கழுவ-வும் அடிமைகளை வினியோகித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

இதனால் இந்த சிங்கங்களுக்கு மானக்கேடு வர-வில்லையா? அந்த சகோதரிகள் இவர்களுடைய சகோ-தரி-கள் அல்லவா? கிராமத்து ஜனங்கள் இந்தியன் பினல்-கோட் சட்டத்தைப் பற்றி வேடிக்கையாய்ப் பேசிக் கொள்வார்கள். அதாவது ஒரு மனிதனை ஒரு மனிதன் செருப்பாலடிப்பதாய்ச் சொன்னால் ஆறு மாதம் தண்டனை. அடித்து விட்டால் ஒரு மாதம்தான் தண்டனை என்பார்கள். (அதென்னவென்றால் அடித்தால் அது அசால்ட்டு குற்றமாய் விடுகிறதாம். சொன்னால் அது மானநஷ்டக் குற்றமாகி விடுகிறதாம்.) அதுபோல் நமது சகோதரிகளை வைப்பாட்டிகளாய் வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேல் கோபமில்லாமல் அவர்கள் பின்னால் திரிந்து வயிறு வளர்த்துப் பெருமை பெற்றுக் கொண்டு இக்கொடுமையை வெளியி-லெடுத்துச் சொன்னவன் மேல் கோபப்படுவதனால் இந்தச் சிப்பாய்களின் கோபத்தின் மதிப்பென்ன? என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

சட்டசபையில் மலையாளக் குடிவார மசோதாவைப் பற்றி ஸ்ரீமான் கே.வி.ரெட்டி அவர்கள் பேசும் போது நமது பெண்கள் ருதுவானால் அவர்களை முதல் முதல் பார்ப்பனர்தான் புணர வேண்டும் என்கிற சட்டம் மலை-யாள நாட்டில் அமலில் இருக்கிறது என்று சொன்னாரே அதைக் கேட்ட போது இந்த வீரர்-களுக்கு மானக்கேடு ஏற்படவில்லையா என்று நாம் கேட்கிறோம். இந்த சிப்பாய்களைப் பார்ப்பனர் காசும் பார்ப்பனர் தயவும் இன்னும் என்ன என்ன செய்யச் சொல்லும் என்பதை பொறுமையுடன் கவனிப்போம்.

‘-குடிஅரசு’, துணைத் தலையங்கம், 05.09.1926

Advertisements

2 பதில்கள் to “பெரியாரின் “வைப்பாட்டிக் கதை”!”

 1. vedaprakash Says:

  பெரியாரின் எழுத்துகள் ஆராய்ச்சிரற்குட்படுத்த வேண்டும், ஆகையால், “விடுதலையில்” வெளியிட்டது, இங்கு சேர்க்கப்படுகிறது.

  தேர்தல் படிப்பினை
  ‘குடிஅரசு’, துணைத் தலையங்கம், 05.09.1926

  http://viduthalai.periyar.org.in/20091220/news28.html

  இவ்வாரம் சென்னையில் நடந்த முனிசிபல் தேர்தல்களில் பார்ப்பனர் கட்சிக்கு இரண்டு ஸ்தானங்களும், பார்ப்பனரல்லாத கட்சிக்கு ஒரு ஸ்தானமும், இரண்டு கட்சிக்கும் பொதுவான கட்சி என்கிற சுயேச்சைக் கட்சி என்பாருக்கு ஒரு ஸ்தானமும் கிடைத்திருக்கிறது. பொதுப்படக் கூறும்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு சென்ற மாதத் தேர்தலில் ஜயம் கிடைத்தது போல் பூரண ஜயம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இப் பூரண ஜயம் பெறாததற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியாரின் அளவுக்கு மீறின நம்பிக்கையே அல்லாமல் பார்ப்பனக் கட்சியின் சாமர்த்தியமும் செல்வாக்கும் அல்லவே அல்ல. அம்மன் கோவில் வார்டில் ஜயம் பெற சுயேச்சைக் கட்சி என்று சொல்லிக் கொண்டவ-ராகிய டாக்டர் ஆசீர்வாத நாடார், தான் பார்ப்பன-ரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த-வன் என்றும் தன்னையே ஜஸ்டிஸ் கட்சி அபேட்-சகராய் நிறுத்தும் படியும் எவ்வளவோ தூரம் கேட்டுக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியார் கவனியாமல் ஒரே கட்சிக்கு இருவரை நிறுத்தியது போல் நடந்து கொண்டது ஒரு பிசகு என்றே சொல்லுவோம். அல்லாமலும் ஸ்ரீமான் ஆசீர்வாத நாடார் ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சி. அபிப்பிராயத்தில் மாறுபட்டாலும் எந்த விதத்திலும் அவர் பார்ப்பனர் கட்சியில் சேரவோ அவர்கள் கைப்பிள்ளையாய் இருக்கவோ ஒருக்காலும் உடன் படமாட்டார் என்பது உறுதி.

  ஆதலால் டாக்டர் நாடார் வெற்றி எவ்-விதத்-திலும் பார்ப்பனர் கட்சிக்கு அனுகூலம் இல்லை-யென்றே சொல்லுவோம். நிற்க, ஆர்பர் டிவிஷனில் கட்சிக்குப் போட்டியில் இரண்டு நபர்களை நிறுத்தியதும் ஜஸ்டிஸ் கட்சியாரின் யோசனை குறைவென்றே சொல்லுவோம் பார்ப்பனருக்கு எதிராக 200 பேருக்கு மேல் ஓட்டுச்செய்தும் அது பாகமாய்ப் பிரிந்ததால் 138 ஓட்டுக்கள் மாத்திரம் கிடைக்கப்பட்ட பார்ப்பனர் கட்சி ஆசாமிக்கு வெற்றி கிடைக்க இடமேற்பட்டு விட்டது. இதுபோல்தான் இந்தியா சட்டசபைக்கு சென்ற தேர்தலில் இரண்டு பார்ப்பனரல்லாதார் நின்றதால் ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரியாருக்குச் சுலபமாய் வெற்றி கிடைக்க இடமேற்பட்டது. இது தெரிந்திருந்தும் இம்மாதிரி செய்ததாலும் பார்ப்பனக் கட்சியின் ஆட்சியைச் சரியானபடி அந்த வார்டில் ஓட்டர்களுக்கு எடுத்துச் சொல்லாதாலும் பார்ப்பனர் தங்களுக்கு வெற்றி என்று சொல்லிக் கொள்ள இடமேற்பட்டு விட்டது. திருவல்லிக்கேணி வார்டில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு வெற்றி ஏற்பட்டதில் நமக்கு அதிசயம் ஒன்றும் இல்லை.

  ஏனெனில் ஆயிரத்துச் சில்லரை ஓட்டர்களில் 800த்துச் சில்லரை ஓட்டர்கள் பார்ப்பன ஓட்டர்கள். அந்த வார்டில் ஒரு பூணூல் போட்ட மரக்கட்டையை நிறுத்தி விட்டாலும் அதற்கெதிரிடையாய் மகாத்மா காந்தி வந்து நின்றாலும் ஒரு பார்ப்பன ஓட்டுக்கூட கிடைக்காது. ஆதலால் அந்த வார்டுக்கு ஜஸ்டிஸ் கட்சிக்காரர் அபேட்சகரை நிறுத்தாமல் இருந்தது புத்திசாலித்தனமென்றே சொல்லுவோம். அமீர் மகால் வார்டில் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமான் ரங்க ராமானுஜத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மொத்தத்தில் அய்ந்து தானங்களில் பார்ப்பனர் கட்சிக்கு இரண்டு தானங்கள் கிடைத்து விட்டது.

  இதை யோசிக்கும் போது நமது நாட்டில் இன்னமும் எந்த விதத்திலேயோ பார்ப்பனர் சூழ்ச்சிக்கு இடமிருக்கிறதென்றே சொல்லியாக வேண்டும். ராயப்பேட்டை டிவிஷன் தேர்தல் சட்ட சம்பந்தமான ஆட்சேபனையினால் ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றியேற்பட்டால் அதை நாம் வெற்றியாகக் கருதக் கூடாது. அந்த விஷயம் கோர்ட்டு மூலம் மறுபடியும் தேர்தலுக்கு வந்து பொது ஜனங்களிடையும் ஓட்டர்களிடையும் பார்ப்பன ஆட்சியை நன்றாய் எடுத்துச் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென்றே கோருகிறோம். இந்த ஒரு விஷயத்தை முக்கியமாய் உத்தேசித்தேதான் நாமும் தேர்தல் பிரசங்கங்களில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறோம். எப்படியாவது பார்ப்பன சூழ்ச்சியை வெட்டிப் புதைக்கிற வரையில் நமக்கு எத்தனை தோல்வி வந்தாலும் கூட நாம் அதைப்பற்றி மனம் தளரக் கூடாது உலகம் இன்றோடு முடிவடைந்து-விடப் போகிறதில்லை. ஆதலால் பந்து அடிக்க உயர-மாய்க் கிளம்புவது போல் அளவுக்கு மிஞ்சின நம்பிக்-கையில் இருந்தும், மமதையில் இருந்தும் தட்டி எழுப்ப இம்மாதிரி சிறு சம்பவங்களை மனப்பூர்வமாய் வரவேற்கிறோம்.

  _‘குடிஅரசு’, துணைத் தலையங்கம், 05.09.1926

 2. குப்புசாமி Says:

  என் போன்ற கிழங்கள் இதைப் படுக்கும்போதெல்லாம், தமாஷாகத் தான் இருகிறது.

  பிராமணர்-எதிர்ப்பு என்று எல்லோரும் சேர்ந்து மற்ற உயர்சாதிகள்- முதலியார், செட்டியார், நாயர், நாயுடு, ரெட்டி என்று கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க ஆரம்பித்தது, இன்றளவும் தொடர்கிறது.

  அந்த கொள்ளையை மறைக்க “திராவிடம்” என்ற முகமூடி அணியப்படுகிறது.

  இந்த 60-100 ஆண்டுகளில் திராவிடத்தால் சமூகத்தில் ஏற்பட்ட நன்மை, தீமைகளை நுண்ணமாக ஆராயவேண்டும்.

  இன்றைய நிலையில், பெண்மை சீரழுவு பெரிதும் தமிழகத்தில் காணப்படுகிறது. இதற்கு திராவிடம் காரணம் என்று கூறலாம். அதாவது கடவுள் மறுப்பு-எதிர்ப்பு என்ற நிலையில், பெண்களின் உரிமைகளில் பலவற்றில் தலையிட்டனர்.

  சினிமா போதையை வளர்த்து, இன்று அதனை தொழிலாக்கி அதற்கு வேண்டிய மூலப்பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க, பல சிறு-குறுதொழிலார்கள், தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளார்கள். அவைதான் இன்று விபச்சாரத்தை தொழிலாகச் செய்து வருகிறது. உண்மையில் பட்டியல் இல்லால், அல்லது ஒரு ஆரார்ச்சி மேற்கொண்டால் நிச்சயமாக இந்த உண்மை விளங்கும்.

  தமிழச்சி, கற்பு என்றெலாம் பேசி, “வைப்பாட்டித்தனத்தைத் தான்” திராவிட சினிமா வளர்த்டுள்ளது. அதனால்தான் குஷ்பு அது தேவையில்லை என்கிறாள். ஸ்ரீபிரியா என்ற நடிகையோ மற்றவர்களை “பாஸ்டர்டு” – தெவிடியாப்பயைன் என்று எல்லோர் முன்னிலையிலும் தைரியமாக திட்டுகிறாற்கள், மற்ற நடிகைகளும் கேவலாமாக நடிக்கிறாகள், வாழ்க்கை நடத்துகிறார்கள்……………..

  இன்று புடவைக் கட்டிய தமிழச்சியைப் பார்க்கமுடிவதில்லை……….

  ஐந்தும் உள்ள தமிழச்சிகளையும் காணப்படுவதில்லை………….

  ஒன்று தேவையில்லை என்ற பட்சத்தில் நான்காவது இருக்கிறதா, இல்லையா என்று ஆராய்ச்சி செய்துதான் பார்க்கவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: