கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது!

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழ‌ங்க‌ப்படு‌கிறது
செ‌ன்னை, சனி, 19 டிசம்பர் 2009( 16:28 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0912/19/1091219062_1.htm

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது! கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழங்கப்படு‌‌கிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் அமைக்கப்பட்ட மூத்த தமிழ்ச் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 70 ஆண்டுகளாக கொல்கத்தாவில் இயங்கி வருகிறது. இந்த சங்கம், இந்த ஆண்டு முதலமைச்சர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்” என்ற சிறப்பு விருதளிக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் அளிக்கிறது: இது குறித்து அ‌‌ச்ச‌ங்க‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழுக்கு செம்மொழி சீர்பெற்றுத்தந்த பெருந்தகையும், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு காணும் வரலாற்று பெருமை வாய்ந்தவரும், தமிழ் இன மொழி மேம்பாட்டுக்காக தம் வயதில் எழுபது ஆண்டுகளை அள்ளித் தந்தவரும், தமிழகத்தின் முதலமைச்சராய் ஐந்து முறை அரசாள்பவரும், தமிழில் தலைசிறந்த உலக படைப்பாளியுமான முத்தமிழறிஞர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு மூத்த தமிழ் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் தமிழ்த் தலைமகன் என்ற சிறப்பு விருதளித்து மகிழ்கிறது” என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

நாளைக்கு விழா: இ‌ந்த விருது வழங்கும் விழா, நாளை மாலை 6 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தொழில் அதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். தமிழ் சங்கத்தின் அமைப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி முதலமைச்சருக்கு விருது வழங்குகிறார்கள். ஆலோசகர் ஞானசேகரன் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கிறார். இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், முனைவர் அவ்வை நடராசன், நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் மகாலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார். செயலர் ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றுகிறார். பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நிறைவாக முதலமைச்சர் கருணாநிதி ஏற்புரை வழங்குகிறார்.

தமிழுக்கு உறவுமுறை கொண்டாடும் வழிகள்: ஏற்கெனவே கருணாநிதியை  தமிழுக்கு-தமிழுடன் ஒப்புமைப் படுத்தி விட்டாகி றது! தமிழே, தமிழின் உயிரே, உயிரின் நிலையே…….., வாழும் தமிழே……….என்றெல்லாம் குகாகிவிட்டது!

பிறகெப்படி கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்று பார்க்கவேண்டும்!

இவரே தமிழாகி, தமிழின் தலைமகனாவது எவ்வாறு?

இதென்ன புதிய புராணம் படைக்கின்றனரா?

முன்பு ஆதித்தனார் “தமிழர் தந்தை” என்று புகழ்ந்தபோது, சில கேள்விகள் எழுந்தன!

இப்பொழுது கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்றால், மற்ற மகன்கள் யார், தமிழ் ஆணா, பெண்ணா, ஆணென்றாலும்-பெண்ணென்றாலும், யார் தாய்-அவ்வாறே யார் தந்தை?

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு “தமிழ்த் தலைமகன்’’ விருது மடலை கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் த. ஞானசேகரன் வாசித்து வழங்கினார். உடன் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அய்ம்பெருங் குழு, எண்பேராயம் துணைத் தலைவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் அவ்வை நடராசன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சிவகுமார், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் இரா. சிறீதரன், ஆலோசகர் எஸ். மகாலிங்கம் ஆகியோர் உள்ளனர் (20.12.2009)..

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

3 பதில்கள் to “கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது!”

 1. பிடித்தவன் Says:

  அடுத்து வரும் பட்டங்கள் –

  தமிழ்க் கிழவன்

  தமிழ்க் கிறுக்கன்

  தமிழ்ப் பொறுக்கி

  தமிழ் …………….

  அடுத்து பட்டம் கொடுக்க விரும்புவோர்
  வைரமுத்துவை கலந்துகொண்டு செய்யலாம் என்று
  வள்ளுவர் கோட்டம்
  மேடையிலேயே நேற்று கூறியும் விட்டார்.

  எவ்வளவு திட்டினாலும் இவருக்கு சொரணையே கிடையாது.
  சாயங்காலம் ஆனால் எவனாவது ஜால்ரா கூட்டம்
  சேர்ந்து கொண்டு கலைஞர் புகழ் பஜனை பாட வேண்டும்.

  தகுந்த கூலி எந்த ரூபத்திலாவது கொடுக்கப்படும்.

  நேற்றைய கூட்டத்தில்
  கொல்கத்தா தமிழ்ச் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதிஉதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு
  உடனே ஏற்றுகொள்ளப்பட்டு ம் விட்டது.
  தமிழ்த் தலைமகன் பட்டத்தின் பின்னணி இந்த கோரிக்கை தான் !

  சீ – நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு !

 2. vedaprakash Says:

  இந்த நூற்றாண்டின் அழுத்தமான தமிழ் அடையாளம்!
  http://files.periyar.org.in/viduthalai/20091221/news05.html

  ஓர் இலக்கிய தலைமுறையை உருவாக்கிய படைப்பாளி!
  தமிழ்த்தலைமகன் விருது வழங்கி முத்தமிழறிஞர் கலைஞருக்கு கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் வாசித்து அளித்த விருது மடல்

  **முத்தமிழறிஞர் முதல்-வர் கலைஞருக்கு தமிழ்த் தலை-மகன் விருது 2009.

  **முத்தமிழிறிஞர் முதல்வர் கலைஞரை இந்த நூற்-றாண்டின் அழுத்த-மான தமிழ் அடையாளம் என்று அறிவுலகம் கருது-கிறது.

  **தந்தை பெரியார்_- பேரறிஞர் அண்ணா_- என்ற வரலாற்று வரிசை-யில் மூன்றாம் இடத்-தில் நின்றாலும், அந்தப் பெருமக்களின் தத்து-வங்-களைச் செயல்படுத்-திய திறத்தில் அவர் முதலிடம் வகிக்கிறார்.

  **எழுத்து. பேச்சு,- போர்க்-குணம் என்ற தன் தனிமனித ஆளு-மை-களைத் தனி மனித மேம்பாட்டுத் திறமை-கள் என்று கருதாமல் தமிழின மேம்பாட்டுக் கருவிகள் என்று கையாண்-டதில் இவர் வேறுபட்டு நிற்கிறார்; வெற்றியும் பெற்றிருக்-கிறார்.

  **1924 ஆம் ஆண்டு முத்துவேலருக்கும்_- அஞ்சுகத்தம்மையாருக்-கும் மகவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ-கத்-தில் பிறந்து, பிற்படுத்-தப் பட்ட இனங்களை மேடேற்றியது கலைஞ-ரின் இணை-யற்ற இனத் தொண்டா-கும்.

  **புதைந்துபோன அல்லது மறந்து போன தமிழ் இன மொழி அடையாளங்களை மீட்-டெடுத்தது இவர்தம் கலாச்சாரத் தொண்-டாகும்.

  **உரை இலக்கியத்தில்,- திரை வசனத்தில், பேச்-சில்,- தனிநடை கொண்ட கவிதைப் படைப்பில் பழந்தமிழின் புத்துரு-வாக்-கத்தில் இவர் செய்த புரட்சிகளால் ஓர் இலக்கியத் தலை-முறையை உண்டாக்கி-யது கலைஞரின் படைப்புத் தொண்-டாகும்.

  **வெற்றிகளால் தளும்-பா-மலும், தோல்வி-களால் துவளாமலும் இவர் கடந்து வந்த கல்-லும் முள்ளும் நிறைந்த அரசியல் பயணம் இவர்-தம் பொது வாழ்வுத் தொண்டாகும்.

  **தமிழுக்குச் செம்-மொழித் தகுதி பெற்றுத் தந்த பெரும் செயல் தமிழ் மொழி உள்ள-வரை-யில் கலைஞரின் பெருமை பேசப் போகும் தமிழ்த் தொண்-டாகும்.

  **அய்ந்து முறை தமிழக முதல்வராய் அரசாண்டு கொண்டு எண்பத்தாறு வயதிலும் தன் உழைப்-பின் அடர்த்தி குறையா-மல் இவர் ஆற்றி வரும் அரசுப் பணிகள் கலை-ஞரின் அளப்-பரிய ஆட்சித் தொண்-டாகும்.

  **2010 ஆம் ஆண்டு இவர் நிகழ்த்தவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு கலை-ஞரின் உலகத் தமிழ்த் தொண்டாகும்.

  **இத்தனை பெருங்-கீர்த்திகளால் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயர்ந்-தோங்கி நிற்கும் முத்-தமிழறிஞர் கலைஞ-ருக்கு _கொல்-கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்த் தலை-மகன் என்ற சிறப்பு விரு-தளித்து பொற்பதக்-கம் பூட்டிப் பூரித்து வாழ்த்-துகிறது.

 3. குப்புசாமி Says:

  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த கவிஞர்-நடிகக் கூட்டங்கள் கவித்துவ-வேசித்தனத்துடன் வெட்கம், மானம்,..எல்லாவற்றையும் இழந்து இறங்கியுள்ளனர்.

  தமிழைக் கொன்ற இந்த கருணாநிதிக்கு அத்தகைய விழாக்கள் நடத்துவதே கேடுகெட்ட செயலாகும்.

  தமிழ் என்ற பெயரை வைத்துக் கொண்டு என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்றால், பிறகு இதையும் செய்யலாம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: