கருணாநிதி காப்பாரா? இந்தியர்களின் சலூன் கடைகளை மூடும்படி மலேசியாவில் உத்தரவு!

இந்தியர்களின் சலூன் கடைகளை மூடும்படி மலேசியாவில் உத்தரவு
டிசம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5942

Front page news and headlines today
கோலாலம்பூர் : இந்திர்கள் நடத்தி வரும் சலூன் கடைகளை மூடும்படி, மலேசியாவில் உள்ள பெனாங் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு வசித்து வரும் இந்திய முடிதிருத்தும் தொழிலாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மலேசியா முழுவதும் மொத்தம் 2,000 சலூன் கடைகள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இவற்றில், பெனாங் மாகாணத்தில் மட்டும் 700 கடைகள் உள்ளன. முடிதிருத்தும் தொழிலில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து வந்து சலூன் கடைகள் நடத்தி வருவோரின் பணி அனுமதியை புதுப்பித்துத் தர, பெனாங் மாகாண அரசு மறுத்து வருகிறது. அவர்களின் கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள இந்திய முடி திருத்தும் தொழிலாளர்கள், பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதே போன்ற பிரச்னை, 2004ல் வந்தது என்றாலும், அப்போதைய தமிழ் அமைச்சர் டத்தோ எஸ்.சாமிவேலுவால் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்தியத் தொழிலாளர்கள் பிழைத்தனர்.

பெனாங் மாகாண இந்திய முடிதிருத்துவோர் சங்க கமிட்டி உறுப்பினர் செல்வக் குமரன் இதுபற்றி கூறுகையில்,””இந்த விவகாரம் எங்கள் வாழ்க்கைக்கு மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்,” என்றார்.

முடிதிருத்தும் கடைகள் மூடப்படும் அபாயம்

December 08, 2009, 11:20 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=28886

கூட்டசு அரசாங்கம் தலையிட்டாலன்றி, பினாங்கில் ஆண்கள் நீண்ட முடிகளை வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை விரைவில் உருவாகலாம். காரணம், இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் அந்நிய தொழிலாளர்கள் மீதான தடையை அரசாங்கம் அகற்றாதவரை, தாங்கள் நொடித்துப் போகலாமென, பெரும்பாலோரின் விருப்பத் தேர்வான, இந்திய முடி திருத்துவோர் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த முடக்கத்தால், மாபெரும் மனித ஆற்றல் பற்றாக்குறையை அத்தொழில் எதிர்நோக்கியுள்ளதாக பினாங்கு இந்திய முடி ஒப்பனை மற்றும் சலூன் உரிமையாளர் சங்கத் தலைவர் கே. சாத்தையா கூறியுள்ளார். பற்றாக்குறை மிக மோசமாக உள்ளதால், இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து, பினாங்கில் 50 உட்பட,  குறைந்தது 200 இந்தியர்களுக்குச் சொந்தமான சலூன்கள் மூடப்பட்டன என்றார் அவர். இந்தியாவிலிருந்து தொழில் திறமை பெற்ற தொழிலாளர்கள் மட்டுமின்றி, இங்குள்ள தொழிலாளர்களுக்கான பெர்மிட்டுகளைப் புதுப்பிப்பதற்கும் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. “கடுமையான பற்றாக்குறையை நாம் ஏற்கனவே எதிர்நோக்கியுள்ளதால்,  புதிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதல் மற்றும் பெர்மிட் புதுப்பிக்கப்படுதல் மீதான முடக்கம், நமது வாணிகத்தை நிலைகுத்தச் செய்துள்ளதாக”, இன்று ஜோர்க் டவுனில் அவர் கூறினார்.

உள்நாட்டினருக்கு இதில் ஈடுபாடு இல்லை: ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை தருவிப்பதற்கு, நாடளாவியநிலையில்  சுமார் 2,200 பெர்மிட்டுகளை இந்திய முடிதிருத்தும் சலூன்களுக்கு கூட்டரசு அரசாங்கம் வழங்கியது என சாத்தையா தெரிவித்தார்.

முடிதிருத்துவோர், இந்தியாவிலிருந்து குறைந்தது 5,000 தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதற்கு அனுமதிக்கும்படி, கூட்டரசு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் நாடளாவிய இயக்கத்தை தொடர்ந்து அந்த பெர்மிட்டுகள் வழங்கப்பட்டன என்றார் அவர். எனினும் அதை தொடர்ந்து,  முடிதிருத்துவோர், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வருவதற்கு இன்று வரை அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக, மனித ஆற்றல் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும்படி புத்ராஜெயா நிர்வாகம், முடிதிருத்துவோரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், உள்ளூர் இளைஞர்கள், இந்த தொழிலில் நாட்டம் காட்டவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது  பினாங்கில் 120 உட்பட, நாட்டில் 3,000 சலூன்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும், குறைந்தது மூன்று தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். பற்றாக்குறை காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ளன. காரணம் மாதமொன்றுக்கு 1,000 ரிங்கிட் முதல் 2,000 ரிங்கிட் வரையிலான வாடகையை, உரிமையாளர்களால் செலுத்த முடியவில்லை.

நாட்டில் பல்வேறு வாணிகங்களில், முடிதிருத்தும் தொழில்தான் தேவையைக் காட்டிலும் விநியோகம் குறைவாக உள்ளது. மனித ஆற்றல் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு  அரசாங்கம் முன்வர வேண்டும் என சாத்தையா கேட்டுக் கொண்டார். ஒரு  முடிதிருத்தும் சலூன், மாதமொன்றுக்கு சராசரி 4,000 ரிங்கிட்டுக்கும் 5,000ரிங்கிட்டுக்குமிடையிலான வருமானத்தை ஈட்டுகிறது. அதே வேளை  முடிதிருத்தும் ஒருவர் மாதமொன்றுக்கு 1,500ரிங்கிட் முதல் 2,000ரிங்கிட் வரை சம்பாதிக்கலாம்.

விமர்சனம்:

1. கருணாநிதிக்கு முடிதிருத்துவோர் என்றால் பாசம் அதிகம் எனத்தெரிகிறது.

2. சென்ற ஆண்டில் நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் “ரமேஷ் ஹேர்கட் சலூனை”த் திறந்து வைத்தார்.

3. அதே மாதிரி ஏன் மலேசியாவில் திறந்து வைக்கக் கூடாது? தமிழர்களுக்கு உதவக்கூடாது?

4. தமிழகத்திலிருந்து மெலேசியாவிற்கு தமிழக முடிதிருத்துவோரை அனுப்பி வைக்கக்கூடாது?

5. உள்ளூர் கூவத்தை மாற்றுவேன் என்று சிங்கப்பூர் சென்றாரே, அவர்கூட உதவலாம், ஏனெனில் மலேசியா பக்கத்தில்தான் உள்லது.

6. ஆகவே, அவர் உடனடியாக மலேசிய தமிழர்களைக் காப்பார் என்ரு நம்புவோமாக.

Advertisements

4 பதில்கள் to “கருணாநிதி காப்பாரா? இந்தியர்களின் சலூன் கடைகளை மூடும்படி மலேசியாவில் உத்தரவு!”

 1. thill Says:

  இன்னும் அந்த தழினத் துரோகியை நம்பாதீர்கள்…..
  தனது குடும்பத்தார் நலனைத்தான் கவனிப்பான்…
  தமிழினத் தலைவன் என்றால் பிரபாகாரன் மட்டுமே

 2. vms Says:

  tanathu naarkaliyai kappatrik kollane karunathikku neram sariya irikum pothu, avar tannai tamilinath thalavaina enru marbu mattum tattik kollalam

  • vedaprakash Says:

   “தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே கருணாநிதிக்கு நேரம் சரியாக இருக்கும்போது, அவர் தன்னைத் தமிழினத் தலைவர் என்று மார்பு மட்டும் தட்டிக் கொள்ளலாம்”, என்று பதிலிட்டுள்ளீர்கள் –

   நன்றி!

 3. vedaprakash Says:

  இன்றைய செய்தி, இப்படியுள்ளது:

  புத்ரஜெயா : மலேசியாவில் 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை, என அந்நாட்டு பிரதமர் முகமது நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர் ரசாக், மூன்று நாள் பயணமாக அடுத்த வாரம் டில்லி செல்கிறார்.

  அதில், “முடிவெட்டும் தொழில் செய்யவோ, கோவில் பூசாரியாக பணிபுரியவோ இந்தியர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை”, என்று பிரதமர் சொல்லியதாக உள்ளது!

  இதென்ன, வேடிக்கையாக இருக்கிறதே? ஆனால், முடிவெட்டும் தொழில் செய்வோர்க்குப் பிரச்சினை என்று முன்னர் செய்தி வந்துள்ளது.

  கோவில்கள் ஏற்கெனவே அங்கு இடிக்கப்படுகின்றன். பிறகு, பூசாரிகள் என்ன செய்வர்?

  மலேசிய மக்கள் தாம் விளக்கவேண்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: