திராவிடப் பெண்மையின் மதசார்பின்மை!

திராவிடப் பெண்மையின்  மதசார்பின்மை!

திராவிட பாரம்பரயம், சம்பிராதயம், கலாச்சாரம் மற்றும் நாகரிகம் பேசும் புரட்சிப் பெண், கலைஞரின் வழித்தோன்றல், சித்தர்களுக்கும் புதுவிளக்கம் கொடுக்கும் “வார்த்தை பெண்-சித்தர்”, திருமதி கனிமொழியின் சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை!

ஊடகங்கள் ஒரு தனிப்பட்ட பெண்ணிற்கு, அரசியல் ரீதியாக, மற்ற சமூக நிகழ்வுகள், மற்ற பிரச்சினகளில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதுவும் தமிழகத்லிருந்து தேந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அங்கத்தினராக இருக்கும் அவரது பேச்சு, எழுத்து மற்றும் சமூக உரையாடல்கள் முதலியவற்றை ஒதுக்கிவிடமுடியாது.

தமிழகப் பெண்களின் “பெண்களை”ப் பற்றிய மனப்பாங்கு அலாதியானது. “பெண்ணென்றால் பேயும் இரங்கும்” என்பது தமிழ் பழமொழி!

“பேய்” உள்ளதா இல்லையா என்பது திராவிட நாத்திகத்தில் சர்ச்சையில் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா முதலியோர்களின் ஆத்மாக்களை நம்புகிறார்கள்!  அவர்களது ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து வருகின்றன!

இந்நிலையில், கனிமொழி இந்த இடைத்தேர்தல் நேரத்தில் உலா வருகிறார். அதைப் பற்றி யாரும் கவலைப் படபோவதில்லை, ஆனால்  ரம்ஜான் கஞ்சி குடித்து உளறும் பணியில் அம்மையார் இப்பொழுது தந்தையைப் பின்பற்றுவதால், அவரது முக்கியத்துவம் வருகிறது.

kanimozhi-kaayalpatnam-muslims

கனிமொழி முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடுதல்!

இதே மாதிரி, சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மை ரீதியாக இவர் மற்ற மத / சமயப் பெண்களுடன் “கலந்துரையாடல்களை” மேற்கொண்டுவருகிறாரா என்று தெரியவில்லை!

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்

இது தேர்தல் “தேர்ந்தெடுப்பு”ப் பாரபட்சமா, அரசியல்-வேறுபாடா, மத-வித்தியாசமா, திராவிட-பாகுபாடா…..எந்த கொள்கை என்று தெரியவில்லை!

இச்சகோதரியின் “சகோதரித்துவம்’ புரியவில்லை!

Advertisements

3 பதில்கள் to “திராவிடப் பெண்மையின் மதசார்பின்மை!”

 1. குப்புசாமி Says:

  ஒரேடியாக கதை விடுகிறீர்களே?

  கஞ்சி ஊத்தும்போது, கூப்பிடனும்!

  துர்கா அம்மா, தேனாம்பேட்டையில், கூழ் ஊத்தும்போது, சரிடாக வந்துவிடுவார்!

  பிறகு, மச்சினியைக் கூப்பிட்ட வேண்டிதுதானே?

  • vedaprakash Says:

   நீர் சொல்வது சரிதான்.

   துர்காவின் நிலமை, அவரது மாமியாரைப் போன்றது தயாளு அம்மாள் / ராஜாத்தி.

   அவர்கள் சாமி கும்பிடலாம்.

   இவர்கள்தாம் கும்பிட மாட்டார்கள்.

   ஐயா, திருக்குவளையில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் சாமி கும்பிட்டதாக முன்னம் செய்திகள் வெளிவந்துள்ளன. தங்களைப் போன்ற பெரியவர்கள் இதைப் பற்றிய முழு விவரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

 2. vedaprakash Says:

  காயல்பட்டணம் கலந்துரையாடலில் கனிமொழி
  வெள்ளி, 11 டிசம்பர் 2009 17:45 சுந்தர்
  http://www.inneram.com/200912115121/2009-12-11-12-15-18

  திருச்செந்தூர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த கனிமொழி எம்.பி., முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் காயல்பட்டணத்தில் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். விலைவாசியை குறைக்க கனிமொழியிடம் பெண்கள் வலியுறுத்தினர்.

  அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான், கால்நடைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சமூகநலவாரிய தலைவர் சல்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெண்கள் பல்வேறுகருத்துக்களை கனிமொழியிடம் வலியுறுத்தினர். தமிழ்வழிக்கல்வியை அமல்படுத்த வேண்டும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

  காயல்பட்டணத்தில் இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் கனிமொழி பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு பதிலளித்த கனிமொழி, நான் இஸ்லாமியர்களிடம் வந்து தி.மு.க.,விற்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்க வேண்டியதில்லை. இஸ்லாமியர்கள் எப்போதுமே தி.மு.க.,வின் பக்கம் இருப்பீர்கள். இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் கட்டாயம் பங்கேற்பேன் என்றார். கூட்டத்தில் உயர்ந்து வரும் விலைவாசியால் பொதுமக்கள், ஏழைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என்கிற கோஷமும் ஒலித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: