செம்மொழி மாநாட்டுக்காக ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதி, ஆனால் தமிழுக்கு இல்லை!

செம்மொழி மாநாட்டுக்காக ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதி, ஆனால் தமிழுக்கு இல்லை!
செம்மொழி மாநாட்டுக்காக ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதி : ஸ்டாலின்
டிசம்பர் 11,2009,00:00  IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5909

Front page news and headlines todayகோவை : “”செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கோவையில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வரங்கங்கள் நடக்கவுள்ள, “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகம் உள்ளிட்ட பல இடங்களை நேற்று ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மாநாட்டு பேரணி துவங்கும் இடம், செல்லும் பாதை, முடியும் இடம், முதல்வர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், தமிழறிஞர்கள் பார்வையிடுவதற்கான மேடை ஆகியவற்றை எங்கே அமைப்பது என்பதற்காக சில இடங்களை இன்று ஆய்வு செய்தோம். “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தில் தான் ஆய்வரங்கம், கருத்தரங்கம், முகப்பு அரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கவுள்ளது. மொத்தம் 20 அரங்கங்கள் அங்கே அமைக்கப்பட உள்ளன. தமிழ் இணையதளத்துக்காக மட் டும் மூன்று அரங்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாடு தொடர்பாக கடந்த 25ம் தேதி, தலைமைச் செயலர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கோவை மாநகராட்சி மட்டுமின்றி, அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து, அப்போது ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்துக் கொடுக்குமாறு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளிடம் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 300 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு பெறப் பட்டுள்ளது. அது பற்றியும் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கான உத்தரவுகளை முதல்வரிடம் பெற்று, அந்த பணிகளும் விரைவில் துவக்கப்படும்.

இதே காலகட்டத்தில், கோவை மாநகராட்சியில் நடந்து வரும் ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டப் பணிகளும் துரிதப்படுத்தப்படும். செம்மொழி மாநாட்டுக்காக தற்போது பூங்கா அமைக்கும் பணி முதலில் துவங்கவுள்ளது. அப்போதே அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். செம்மொழி மாநாட்டுக்கு மத்திய அரசிடம் நிதி கோரும் அவசியமில்லை; எல்லா செலவையும் தமிழக அரசே ஏற்கும். இவ்வாறு, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisements

2 பதில்கள் to “செம்மொழி மாநாட்டுக்காக ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதி, ஆனால் தமிழுக்கு இல்லை!”

 1. vedaprakash Says:

  தினமலருக்கு அளித்த பதில்:

  மாநாடுகள் நடத்துகிறேன் என்று இப்படி கோடிக் கணக்கில் “பட்ஜெட்” போடுவது கொள்ளையடிப்பதற்க்குதான்.

  இதைவிட தமிழை உண்மையாக வளர்க்க, ஆராய்ச்சி செய்ய, பாதுகாக்க பல முறைகள் உள்ளன.

  * உள்ள பல ஓலைச்சுவடிகளை அரிய நூல்களை மறுபதிப்பு செய்யலாம்;

  * மேனாட்டவர் எடுத்துச் சென்ற அரிய-பல ஓலைச்சுவடி நூல்களைத் திரும்பக் கேட்கலாம், பதிப்பிக்கலாம்;

  * கோவில் குளங்களைச் சீர் படுத்தலாம்,

  * மொழிவெறி இல்லாமல், மதத்துவேஷம் இல்லாமல் கலைகள், விஞ்ஞானங்கள் முதலியவற்றை ஆராயலாம்,

  * மக்களுக்கு இன்றை நிலையிலும் அவற்றை உபயோகீக பரிந்துரைக்கலாம் (ஏனனில் அத்தகையவை இந்நாட்டில் உருவானமைதாம்)

 2. குப்புசாமி Says:

  எங்களுக்கு எல்லாம் ஒன்றுமே புரியவில்லை சாமி!

  கூவம் என்றால் 300 கோடி, மாநாடு என்றால் 300 கோடி, பாலங்கள் என்றால் பல நூறு கோடி!

  அம்மாடியோவ்!

  நாங்கள் இதெல்லாம் கேட்டதில்லை எங்கள் காலத்தில்.

  எங்கள் காலத்தில் லட்சாதிபதிகள், பிச்சாதிபதிகள் என்றுதான் சொல்லுவோம்!

  இப்பொழுது என்ன சொல்லவேண்டும் என் று தெரியவில்லை, ஏனெனில் பிச்சைக்காரனே லட்சங்கள் வைத்திருக்கிறான்.

  மாத சம்பளக்காரனோ, பிச்சையெடுக்கிறான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: