ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி: திருமாவளவன்!

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி: திருமாவளவன்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22401

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளளார்.

இதுகுறித்து அவர் மேலும் நாடாளுமன்றத்தில் பேசியதாவது,

நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப் பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் வழக்கமான கமிசன் அறிக்கைகளை போல இதுவும் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுவிடுமோ  என்கிற அய்யமும் பொதுமக்களிடையே உள்ளது.

எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியடையக்குடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார். அதற்காக அவரைப்பாராட்டுகிறேன். குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஸி போன்றவர்கள் பாபர் மசூதி  இடிப்புக்குக்க் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்ஸ், சிவசேனா, பாரதியஜனதா ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத்தரைமட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும்  லிபரான் கூறியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றிதெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இது முஸ்லீம்களுக்கு காங்கிர‌ஸ் கட்சி துரோகமிழைத்தாக அமையும், இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியைமட்டுமல்ல பௌத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி, அங்கே இந்த கோயில்களை எழுப்பியுள்ளனர்.

ராமனின் பெயரால் சிவபக்தனான இராவணனையே அழித்துருக்கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் வாஜ்பாய் ,அத்வானி, ஜோஸி, போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உட‌னே கைதுசெய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகக் கூறுகிறார்.எனவே இந்துத்துவப்பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் மதவெறியர்களுக்கு  இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று திருமாவளவன் பேசினார்.

Advertisements

ஒரு பதில் to “ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி: திருமாவளவன்!”

 1. vedaprakash Says:

  வாஜ்பாய் குறித்த காங் எம்பியின் அவதூறு பேச்சு- மன்னிப்பு கேட்டார் பிரதமர்
  புதன்கிழமை, டிசம்பர் 9, 2009, 12:09[IST]
  http://thatstamil.oneindia.in/news/2009/12/09/pm-says-sorry-cong-mp-s-foul-talk.html

  டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்யாப் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி குறித்து காங்கிரஸ் எம்.பி. பேனி பிரசாத் வர்மா அவதூறாகப் பேசியதற்காக இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டார்.

  நேற்று லோக்சபாவில் பேனி பிரசாத் வர்மா பேசுகையில், வாஜ்பாயையும், அத்வானியையும் கடுமையாக சாடிப் பேசினார். வாஜ்பாய் குறித்து அவர் பேசியது பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து அவற்றை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் மீரா குமார் நீக்கி உத்தரவிட்டார்.

  அதேசமயம், அத்வானியை பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த அகதி என்று குறிப்பிட்டு பேசியது பாஜகவினரிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

  அதேபோல வாஜ்பாய் குறித்த கருத்துக்கு வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜகவினருடன் சமாஜ்வாடிக் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

  இந்த நிலையில் இன்று லோக்சபாவில் வர்மா பேச்சுக்காக மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

  இதுகுறித்து இன்றுலோக்சபா கூடியதும் அவர் எழுந்து, நேற்று நான் அவையில் இல்லை. இருப்பினும் இங்கு விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியதை நான் அறிந்து கொண்டேன்.

  எங்களது கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், வாஜ்பாய் குறித்து கூறியுள்ளார். அவை தேவையற்ற கருத்துக்கள். எனது சார்பிலும், அரசு சார்பிலும் இதற்காக நான் சபையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: