கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு… கி. வீரமணி எழுதிக் கொள்வது!

கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு…

கி. வீரமணி எழுதிக் கொள்வது

http://viduthalai.periyar.org.in/20091209/news06.htmlகடவுள் பக்தர்களே, நீங்கள் கடவுள் மறுப்பாளர்களான சுயமரியாதை, நாத்திக, பகுத்தறிவாளர்களை வெறுக்-கிறீர்களே நியாயந்தானா?

எதையும் காரண காரியத்துடன் சிந்தித்து நம்ப வேண்டியவைகளை நம்புவதும், நம்ப வேண்டாதவைகளை_ மூடநம்பிக்கைகள் என்று மூளையில் சேர்ந்துள்ள குப்பைகளை அங்கேயே வைத்துக் கொண்டு அவதியுறாதீர்கள்; அறிவு விடுதலை பெற்று, முழு சுதந்திர அறிவுள்ள, தன்னம்பிக்கையாளர்களாக வாழுங்கள் என்று அவர்கள் கூறுவது தவறா? குற்றமா?

1. பானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரிக்கமாட்டீர்களா?

இருப்பது உண்மை; அஞ்ஞானிகள் கண்ணுக்கு அது தெரியாது, கண்ணால் பார்க்க முடியாது, உடம்பால் உணர முடியாது, உள்ளத்தாலும் அறிய முடி-யாது -‘மனோ’, வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லி நம்ப வைப்பதும், பானைக்குள் யானை இருக்-கிறது என்று கூறுவதும் ஒன்றுதானே? பானைக்குள் பூனை இருக்கிறது என்றால் நம்பலாம்; ஆனால் யானை இருக்கிறது என்றால் அது இல்லாத ஒன்றுதானே?

2. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் சந்-நிதியில் பூஜை செய்த ஒரு காமாந்-தகாரனின் காமலீலைகள் அதுவும் கரு-வறையில் ஒரு நாள் அல்ல, பல நாள்; ஒரு பெண்ணோடு மட்டுமல்ல, பல பெண்களுடன் சல்லாபித்து, உல்லாச-மாக இருந்ததோடு, அவற்றை செல்-போன் கேமிராமூலம் படம் பிடித்தும் உள்ள அந்த அர்ச்சகப் பார்ப்பானின் செயல்கண்டு, ஆத்திரப்படும் பக்தை-களே, பக்தர்களே, உங்கள் கோபம் அந்த காமாந்தகாரன்மீது பாய்வதற்கு-முன் இதுபற்றிக் கவலையே இல்லாத சாமியும் சாட்சியாக மாறிவிட்டதன்-மூலம் என்ன புரிய வேண்டும் உங்-களுக்கு? கோயில் உள்ளே, கருவறை உள்ளே இருப்பது எல்லாம்வல்ல கடவுள் அல்ல; அது ‘வெறும் கல்’தான் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டுமே!

அர்ச்சகப் பார்ப்பனன் மீது பாய்-வதை (விளக்குமாறு, பழஞ்செருப்பு) -விட அங்குள்ள கடவுள் மீது அல்-லவா பாய வேண்டும்_ ‘‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’’ என்று கூறிடும் எங்களுடன் அல்லவா வந்து சேரவேண்டும்?

3. அதே காஞ்சிபுரத்தில், காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சங்கர-ராமன் ரத்தம் வழிய வழியப் படு-கொலை செய்யப்பட்டாரே, அதனைத் தூண்டியவர்கள் என்று குற்றம்சாற்றி காஞ்சி மடத்தின் தலைவர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் என்பவர்-கள் மீது கொலை வழக்கு நடைபெறு-கிறதே, அதை காஞ்சி வரதராஜபெரு-மாள் வேடிக்கைதானே பார்த்தார்? தடுத்-தாரா? அல்லது கொலையாளிகளின் கொடூர செயலைக் கண்டு அவர்களை ‘கண்ணவித்து’ விட்டாரா? எதுவும் இல்லையே! ஏன்? அது ‘வெறும் கல்’ என்பதுதானே!

4. திருட்டு நடந்துவிட்டாலே, அலட்சியமாக இருந்த காவலாளியை நீக்குகிறீர்களே, அதுபோல வேடிக்கை பார்த்த சாமிகளை மீண்டும் வழிபட அந்தக் கோயிலுக்குச் செல்லலாமா? யோசியுங்கள்.

‘கோயில்கள் விபச்சார விடுதிகள்’ என்றார் ‘தேசபிதா’ அண்ணல் காந்தி-யார். அதற்கு காஞ்சிபுரம் சம்பவம்போல் வேறு பொருத்தமானது உண்டா?

இதுபோலவே அய்யப்பன் கோயில் அர்ச்சகர்கள் கதையும். அதைப் பற்-றியே கவலைப்படாமல், மீண்டும் ‘‘கன்னி சாமிகளாக’’, ‘‘குருசாமிகளாக’’, ‘‘பெரிய சாமிகளாக’’ அங்கு சென்று பொருளையும், அறிவையும் (ஏன் சிலர் உயிரையும் பறிகொடுக்கின்றனர்) இழந்து திரும்புகிறீர்களே_- அதைவிட வேறு கொடுமை பரிதாபத்திற்குரிய அசிங்கம் வேறு உண்டா?

5. எல்லாக் கோயில்களின் நுழைவு வாயில்களில் ‘‘மெட்டல் டிடெக்டர்கள்’’ வைத்து, பரிசோதித்த பின்பே, பக்தர்களாகிய உங்களை கோயிலுக்குள் காவல்துறையின் கண்காணிப்புக்கு உட்-படுத்தப்பட்டு அனுப்புகிறார்களே, அதிலிருந்து தெரிய வேண்டிய ஓர் உண்மை_ மனிதனை கடவுள் பாது-காக்கவில்லை; கடவுளை, கடவுளச்சி-களை மனிதர்கள்தான், அதுவும் 47 துப்பாக்கி முனையில், தீவிரவாதிகளிட-மிருந்து கடவுளையும் காவல்துறை-தானே பாதுகாக்கிறது என்பதுதானே!

6. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இனிமேல் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. ஏனெனில், தேங்காய்களுக்குள் ‘குண்டு’ வைத்திருக்க சாத்தியக் கூறு உண்டு என்று கூறுகிறார்களே; அப்படியானால் கடவுளுக்கு ‘‘சர்வசக்தி’’ என்பது இல்லாத ஒன்று என்பதுதானே! தனக்கு வரும் தோங்காய்க்குள் மறைந்திருக்கும் ‘‘குண்டினைக்’’ கண்டுபிடிக்க கடவுளால், கடவுளச்சிகளால் முடியாதா? முடியாது என்றால் அந்தக் கடவுளை நம்பி, கைப்பொருளை இழப்பதனால் யாருக்-கென்ன லாபம் என்று யோசித்தீர்களா?

7. திருப்பதி கோயில் அருகில், ‘‘திருமலை மேல் செல்போன் அனுமதி இல்லை’’ என்பது தீவிரவாத பயத்-தால்தானே? அங்கிருப்பது ‘‘நட்டகல்’’ என்று கூறினாரே திருமூலர்? அது சரிதானே?

பக்தி வந்தால் புத்தி போகும்;

புத்தி வந்தால் பக்தி போகும்

என்ற தந்தை பெரியார் அறிவுரை எவ்வளவு உண்மை என்பதை உணருங்கள்.

‘‘மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்’’ என்பது போல் சிந்திக்காமல், வழக்கம் என்ற பெயரால் கோயிலுக்குச் செல்லலாமா?

8. கோயில்கள் ஆதியில் இல்லை; பாதியில் வந்தது; அது அரசனுக்கு வரு-வாய் தேட என்று கவுடில்யரின் (சாணக்-கியர்) அர்த்த சாஸ்திரம் கூறு-கிறது. திருக்குறளில் கோயில் இல்லை. தமிழர்களே, வள்ளுவத்தைப் பாராட்டி-விட்டு கோயிலுக்குச் செல்லலாமா?

குறிப்பு: இதனை எவரும் அச் சிட்டு துண்டறிக்கையாக வழங்கலாம்.

ஒரு பதில் to “கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு… கி. வீரமணி எழுதிக் கொள்வது!”

 1. குப்புசாமி Says:

  வீரமணிக்கு இப்படி சொல்வதற்கு ஒன்றும் எந்த யோக்கியதை கிடையாது.

  மச்சேந்திர கோவில் சமாச்சாரம் முதன் முதலில் “விடுதலை”யில்தான் வந்ததாமே!

  அதெப்படி?

  தேவநாதனே, வீரமணியிடம் வந்து விவரங்களை சொன்னாரா அல்லது சிடிகளைக் கொடுத்தாரா?

  ஊழலில் ஈடுபட்டு உலகத்திற்கே தெரிந்த பின்னும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல், பல அரசியல்வாதிகள் மறுபடியும்-மறுபடியும் தேர்தலில் நின்றோ, நிற்காமலோ, அமைச்சராக அல்லது ஏதாவது ஒரு பதவியில் வந்து விடுகிறார்களே? அவர்களை என்ன செய்வது?

  இப்படி வீரமணி கடவுளைக் கேட்கும்போது, மூன்று பேர் மதுரை தினகரன் அலுவலகம் நெருப்பூட்டி செத்த வழக்கில், எல்லோருமே விடுவிக்கப் பட்டுள்ளனர்?

  அதெப்படி, அந்த மூவரும் சாகவேயில்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: