கருணாநிதி ஆட்சி பொற்காலம், அவர் ஓய்வு பெறக்கூடாது!

கலைஞரின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் – கனிமொழி

மன்னர்களின் பொற்கால ஆட்சி பற்றி பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் தான் முதல்வர் கருணாநிதியின் பொற்கால ஆட்சியை நேரடியாக பார்க்கிறோம்’ என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறிப்பிட்டார். வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்கையில் தெல்லாரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எலிக்கறியும், ஒரு ரூபாய் அரிசியும்: மேலும் அவர் பேசுகையில், பொன்விழையும் பூமி என ஒரு காலத்தில் புகழப்பெற்ற தஞ்சை தரணியில் மக்கள் எலிக்கறி சாப்பிட்டதை பார்த்தோம். அந்தக் கொடுமை கடந்த ஆட்சியில் தான் நடந்தது. பசி, பட்டினியால் மக்கள் வாடினார்கள்.  ஆனால் தற்போதைய முதல்வர் கலைஞர்  ஆட்சிக்கு வந்ததும்   உணவுக்குத் தேவையான 1 கிலோ அரிசியை 2 ரூபாவுக்கு வழங்கினார். அதுபோல் மக்களுக்கு நோய்வரும் போதுகளில் பெரிதும் துணையாக இருப்பது  கலைஞரின் காப்பீடு திட்டம்.

ஜீரோக்களும், ஹீரொக்களும்: இவ்வாறு மக்களுக்கு எது தேவையோ அதை  உணர்ந்து சிந்தித்து, மக்கள் கோரிக்கை வைக்காமலேயே  நிறைவேற்றும் அரசு திமுகவேதான். அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு  ‘ஜீரோ’ மதிப்பெண் போட்டார் ராமதாஸ். ஆனால் மக்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு  ஜீரோவை பதிலாகத் தந்தார்கள். கலைஞர் ஆட்சி பற்றி  தவறாகப் பேசிவரும்,  ஜெயலலிதாவை மக்கள் என்றோ புறக்கணித்து விட்டார்கள். இந்தத் தேர்தலிலும் மக்கள் அவரை  நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்றார்.

கருணாநிதி ஓய்வு பெறக்கூடாது-ஸ்டாலின்

ஓய்வுக்கே ஓய்வு கொடுக்கும்: ஓய்வுக்கே ஓய்வு கொடுக்கும் முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார். கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொது மக்களில் ஒருவரான இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் தெரிவி்த்திருந்தார்.

ஆஹா, இதென்ன திருப்பதிக்கே லட்டு கொடுப்பதைப் போல இருக்கிறது!

3 பதில்கள் to “கருணாநிதி ஆட்சி பொற்காலம், அவர் ஓய்வு பெறக்கூடாது!”

 1. vimarisanam Says:

  திருப்பதிக்கு லட்டு – வாக இருந்தாலும் சரி –

  திருநெல்வேலிக்கே அல்வா – வாக இருந்தாலும் சரி –

  கலைஞரை ஈடு கட்ட தமிழ் நாட்டில் வேறு ஆளே இல்லை !

  அவருக்கு ஈடு அவரே தான் …………

  மீண்டும் மீண்டும் துக்ளக் –
  http://www.vimarisanam.wordpress.com

  kavirimainthan@gmail.com

  • vedaprakash Says:

   கருணாநிதி ஒரு திறமைவாய்ந்த தமிழக அரசியல்வாதி என்பதில் சந்தேகம் இல்லை.

   ஆனால்,

   * திராவிட மாயையில் சரித்திர ஆதாரமில்லாத இனம், மொழி என சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு மக்களைப் பரித்தாளுவதாலும்,
   * நாத்திகம் என்ற போர்வையிலும் குறுகிய வட்டத்திற்குள் இருந்து இந்துவிரோதியாக செயல்படுவதாலும்,
   * தமிழ் பெயரைச் சொல்லிகொண்டு தமிழையை அழிக்கும் வேலை செய்வதாலும்,
   * குடும்ப-லாப அரசியலை வளர்த்து மக்களின் நலனை கொன்றதாலும்,………….

   இப்படி நிறைய விஷயங்கள் அவரது இலக்கியத் திறமையைக் குறைத்து, மற்றவர்களால் வெறுக்கத்தக்க நிலையை இன்றுள்ளார்.

   எனவே அவ்வாறு எடைபோடும்போது கலைஞரை ஈடு கட்ட தமிழ் நாட்டில் வேறு ஆளே இல்லை !

   அத்தகைய அழிவுவேலைகளைதொடர்ந்து செய்வதிலும் அவருக்கு ஈடு அவரே தான் …………நன்றி!

 2. குப்புசாமி Says:

  அதுதான் குஷ்பு வந்து விட்டாரே ஐயா!

  ஏன் கவலை படுகிறீர்கள்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: