தன் பக்தனையே காப்பாற்றாத அய்யப்பன்!

அய்யப்ப பக்தர்கள் 5 பேர் சாவு: தன் பக்தனையே  காப்பாற்றாத அய்யப்பன்!

http://viduthalai.periyar.org.in/20091207/news22.html

திருப்பத்தூர், டிச. 7_ நேருக்கு நேர் காரும், லாரியும் மோதியதில் சென்னை அய்யப்ப பக்தர்கள் 5 பேர் இறந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 9 பேர் ஒரு காரில் சபரிமலை அய்யப்-பன் கோவிலுக்கு பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் பிள்ளையார்பட்டிக்கு வந்தனர். இரவு அங்கேயே தங்கிவிட்டு, நேற்று அதிகாலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து, சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடிப்பட்டி விலக்கில் வந்தபோது, திருப்பத்தூரில் இருந்து நெல்மூடை ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு, நேர் மோதியது. மோதிய வேகத்-தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கோவிந்த-ராஜன் மகன் சுரேஷ், தங்கச்சாமி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் இந்த விபத்தில் காரில் இருந்த சங்கர் மகன் சசிக்குமார், துரைராஜ் மகன் லாரன்ஸ், கணேசன் மகன் கார்த்திக்கேயன், கீர்த்தனா, கார் ஓட்டுநர் முனியாண்டி, செல்வக்குமார், மதியழகன் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் அஜ்மீரும் காயம் அடைந்தார்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருப்-பத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரசு ஆம்புலன்ஸ் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தது. காயம் அடைந்த அய்யப்ப பக்தர்கள் 7 பேரும் அரசு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவ-மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்-கப்-பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியாண்டி-யும், ஓட்டுநர் மதியழகனும் இறந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. லாரி ஓட்டுநர் அஜ்மீர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே இதே விபத்தில் காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட பூமிநாதன் என்பவரும் இறந்தார். அவருடன் வந்த செல்வி என்று சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இவர்களும் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்தவர்கள். இவர்கள் திருச்சி திலகர்தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வந்த காரில் இவர்கள் எங்கு ஏறினார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உணர்வு வந்த பின்னர்தான் அவர்களை பற்றி முழுவிவரம் தெரியவரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: