புவனேஸ்வரி அரசியலில் குதித்தார்!

விபச்சார வழக்கில் கைதான நடிகை பிரபல கட்சியில் இணைந்தார் !

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைதாகி தமிழகத்தையே பரபரப்பாக்கிய நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பூனைக்கண் புவனேஸ்வரியை விபச்சார ஒழிப்பு போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடும் போராட்டத்திற்கு பின்பு, அவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், விபச்சார வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே இருக்கும் நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி சென்னை தியாகராயநகரில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக அலுவலகத்தில் அதன் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் இணைந்தார்.

நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கி டாக்டர் சேதுராமன் உத்தரவி்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் தமிழக திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சிகளியையே கடும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

சேதுராமன் கட்சியின் மகளிரணியில்’பூனைக்கண்’ புவனேஸ்வரி செயலாளர் விபச்சார வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த நடிகை ‘பூனைக்கண்’ புவனேஸ்வரி, திடீரென அரசியல் கட்சியின் மகளிர் அணி தலைவராக பதவி பெற்றுள்ளார்.

மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த மருத்துவர் சேதுராமனின் மூ.மு.க. வின் மாநில மகளிர் அணி செயலாளர் பதவியைப் பெற்றுள்ளார் அவர். நேற்று சென்னை தியாகராயர் நகரில் சேதுராமனைச் சந்தித்த புவனேஸ்வரிக்கு பதவியும் அளிக்கப்பட்டது என்று புவனேஸ்வரியின் வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

Advertisements

ஒரு பதில் to “புவனேஸ்வரி அரசியலில் குதித்தார்!”

 1. vedaprakash Says:

  பின்னர் புவனேஸ்வரி 10-12-2009 அன்று நிருபர்களுக்கு தந்த பேட்டி:

  3வருடத்துக்கு முன்பே நான் இந்த கட்சியில் சேர்ந்திருக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரவில்லை. இப்போது அரசியலில் சேரும் நேரம் வந்ததால் இணைந்துள்ளேன்.

  மூவேந்தர் முன்னணி கழகம் நான் சார்ந்த சமுதாய கட்சியாகும். டாக்டர் சேதுராமன் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியதால் கட்சி பணியில் தீவிரமாக செயல்படுவேன்.

  கடந்த கால சம்பவம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது விதியின் விளையாட்டு. போலீசார் எனக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்தார்கள். அதை நான் சட்டரீதியாக சந்திப்பேன். என் மீது போடப்பட்ட வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிப்பேன்.

  நான் கைது செய்யப்பட்டபோது வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. நான் சொன்னதாக வந்த அனைத்து தகவல்களும் தவறானது. நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று போலீஸ் கமிஷனரே கூறி இருந்தார்.

  நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை நேற்று சந்தித்து இது தொடர்பாக விளக்கம் தெரிவித்தேன். எனது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார். எந்த நடிகர்-நடிகை பற்றியும் நான் போலீசில் எதுவும் சொல்லவில்லை.

  பத்திரிக்கையாளர்கள் எனது நண்பர்கள். பத்திரிக்கையாளர்களை பற்றி நான் எதுவும் தவறாக எங்கும் பேசுவது கிடையாது. யாரோ சிலர் பேசினார்கள் என்றால் அது அவர்களுக்குள் விஷயமாகும்.

  நடிப்பு என் மூச்சு அதை நிறுத்த மாட்டேன். தற்போது அரசியலிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் இங்கும் பிரகாசிப்பேன்.

  பெண்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுப்பேன். எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சித் தலைமை முடிவுப்படி செயல்படுவேன்.

  திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை. விரைவில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறேன்.

  ஆளுங்கட்சிக்கு எதிராக எந்தப் போராட்டமும் நடத்தும் ‘ஐடியா’ இல்லை என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: