நாத்திக ஆட்சியாளர்களும் சீரழியும் கல்வியும்

நாத்திக ஆட்சியாளர்களும் சீரழியும் கல்வியும்

“நாத்திகம்” மற்றும் “பகுத்தறிவு” என்ற போர்வைகளுக்குள் புகுந்து கொண்டு தாங்கள் எல்லா மக்களுக்கும் ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் என்பதனை மறந்து எப்பொழுதும் இந்து-விரோத பேச்சுகளை பேசிக் கொண்டு, செயல்களை செய்து கொண்டு இருக்கும் இந்த திமுக ஆட்சியாளர்கள், கல்வியை ஏற்கெனவே வியாபாரமாக்கிவிட்டது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்பொழுது, பாடதிட்டத்துறையில் “சமச்சீர் கல்விமுறை” என்ற போர்வையில் தங்களது “நாத்திகம்” மற்றும் “பகுத்தறிவு” யுக்திகளை பயன்படுத்து, வருங்கால குழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனங்களை சலவைச் செய்ய அத்தகைய பொய்யான, பிரசார ரீதியிலான, பாரபட்ச பாடதிட்டத்தை வறையரைச் செய்துள்ளார்கள் என்று நன்காகவே தெரிகின்றது.

இதைபற்றி இங்கு மற்றும் கீழ்கண்ட தளத்தில் உள்ள பிரச்சினைகள் அலசப் பட்டன: http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ab0f9cdd…

http://indianhistoriographymethodology.wordpress.com/2009/10/24/தமிழக-சமச்சீர்-கல்விமுறை/

24-10-2009 அன்றே http://www.pallikalvi.in எனது மேற்கண்ட பதிலை பதிவுசெய்தேன்.

கார்த்திகேயன் என்பவரும் 01-12-2009 அன்று புதுக்கோட்டையிலிருந்து, அத்தகைய பாட-அமைப்பு இந்துமதத்திற்கு எதிராக உள்ளது என்பதனை உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.

நாத்திக அரசின் வரைவு பாடத்திட்டம் இந்துமதத்திற்கு எதிரானது!

உடனே அடுத்த நாளே, அமைச்சர் விளக்கத்துடன் வருகிறார்.

சமச்சீர் கல்விமுறை எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல மந்திரி விளக்கம்!

இதிலிருந்தே தெரிகிறது, நாத்திக அரசு படிப்பை அரசியல் ஆக்குகிறது.

இது நிச்சயமாக எல்லா கோணங்களிலும் மக்களுக்கு எதிரானதே, ஆகயால்
எதிர்க்கப்ப்டவேண்டியது ஒன்று.

Advertisements

2 பதில்கள் to “நாத்திக ஆட்சியாளர்களும் சீரழியும் கல்வியும்”

 1. vedaprakash Says:

  அமைச்சரின் பதிலே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல இருக்கிறது!

  சமச்சீர் கல்வி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: அரசு விளக்கம்
  டிசம்பர் 03,2009,00:00 IST

  http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15413

  சென்னை: “”சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்ட வரைவில், இந்து மதத்திற்கோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறவில்லை,” என அரசு விளக்கம் அளித்துள்ளது.

  இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த பொது பாடத்திட்ட வரைவு, இணையதளத்தில் கடந்த அக்டேபர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுப் பாடத்திட்ட வரைவு மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக்களையும் பெற்று பரிசீலனை செய்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மதச்சார்பற்ற தன்மையினைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத் திட்டத்தில் விழிப்புணர்வுப் பாடல்கள், மறுமலர்ச்சிப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள் ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போலவே இடம்பெற்றுள்ளன.

  இஸ்லாமியர் வருகை, அவர்களின் ஆட்சி முறை இந்திய வரலாற்றின் ஒரு கூறாகும். இதன் அடிப்படையில் அவற்றை பற்றிய பாடங்கள் வரைவுப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு மற்றும் சமுதாய சீர்திருத்தச் சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதன் அடிப்படையில் பொது பாடத்திட்டத்திலும் ஈ.வெ.ரா., பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. பொதுப்பாடத் திட்ட வரைவில் இந்து மதத்திற்கு எதிராகவோ அல்லது எந்த ஒரு மதத்திற்கு எதிரான கருத்துக்களோ இடம்பெறவில்லை, அத்தகைய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறுவது தவறானது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • vedaprakash Says:

   “தினமலருக்கு அனுப்பிய எனது பதில்:

   “அமைச்சரின் பதிலே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல இருக்கிறது. “நாத்திகம்” மற்றும் “பகுத்தறிவு” என்ற போர்வை / முகமூடி அணிந்து இந்து-விரோத பேச்சுகளைப் பேசிக் கொண்டும், செயல்களை செய்து கொண்டும் வருவது போல, இப்பொழுது, பள்ளிப் பாடத் திட்டங்களிலே இவ்வாறு விளையடுவது சரியல்ல, ஆகையால் மக்களால் எதிர்க்கத்தக்கதே. தாங்கள் என்ன படிக்கவேண்டும், கூடாது என்பதனை அரசு தீர்மானிப்பது என்ன வேடிக்கை?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: