திராவிட நாத்திகம்

திராவிட நாத்திகம்

“திராவிட நாத்திகம்” என்பது “நாத்திகம்” என்ற போர்வையில் பெரும்பாலும் இந்துமத எதிர்ப்பு, மறுப்பு, விரோத மற்றும் அவதூறு செய்யும் போக்காக உள்ளது. கடந்த மற்றும் நடப்பு நூற்றாண்டுகளில் அத்தகைய பேச்சுகள், எழுதுக்கள்,  ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், இணைத்தள பதிவுகள் முதலியவற்றைப் பார்க்கும்பொது அறியப்பட்டுள்ளது.

இதில் “நாத்திகம்” மற்றும் “கடவுள் – இறை மறுப்பு” முகமூடி அணிந்துகொண்டு சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்டுகள் மற்றும் அதன் உதிரிகள் ஒருபக்கம், மாற்றுமதத்தினரான கிருத்துவர்-முஸ்லிம்கள் மறுபக்கமும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.

இதைத் தவிர “தான் / நான் இந்து” என்று சொல்லிக் கொண்டு, இந்துக்களைக் குறைகூறும், எதிர்மறையாக விமர்சனிக்கும் “இந்துக்களும்” அதிகம் உள்ளனர். அதில் “விண்ணப்பப்படிவ இந்துக்கள்” என்பவர் அதிகம், அதாவது, தமது வாழ்க்கையில் பல நேரங்களில், பல இடங்களில் “விண்ணப்பப்படிவங்கள்” பூர்த்தி செய்யும்போது, “மதம் / சமயம்” என்பதற்கு எதிராக இந்து என்று எழுதும் “இந்துக்கள்”.

மேலாக “செக்யூலரிஸம்” பேசி, அதிநவீன, அதிகம்-படித்த முற்போக்கு “இந்துக்கள்” என்பவர்களும் உண்டு.

இப்படி, இவர்கள் எல்லோராலும் தாக்கப்படுவது – இந்து மதமே, இந்துமதக் கடவுளே, இந்துமத நூல்களே, ………….இந்துமதச் சின்னங்களே.

எப்பொழுது பார்த்தாலும் இந்து மதம், இந்துமத பண்டிகைகள், விழாக்கள், சம்பிரதாயங்கள், பாரம்பரிய நடைமுறைகள் முதலியவை, ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அவற்றை விமர்சனம் செய்ய கிளம்பி விடுவார்கள்.

“திராவிட” அடைமொழி வைத்துக் கொண்டுள்ளக் கூட்டங்களுக்கு / அமைப்புகளுக்கு ஏதோ தமக்கு எல்லையில்லாத ஒட்டுமொத்த அனுமதி, அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் கொடுத்துவிட்டது மாதிரி இந்து மதத்தைப் பற்றி என்னவேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம், என்று இருக்கும் –

திராவிட நிறுவனங்கள், திராவிட அமைப்புகள்,

திராவிட சித்தாந்திகள், திராவிட எழுத்தாளர்கள், திராவிட பேச்சாளர்கள்,

திராவிட நடிகர்கள், திராவிட இயக்குனர்கள், திராவிடத் தயாரிப்பாளர்கள்,

திராவிட முனைவர்கள், திராவிட பேராளர்கள்,

திராவிட தமிழச்சிகள்,………………………,

திராவிடப் பெருங்கவிக்கோக்கள், ………………………..

திராவிட ………..திராவிட……………..என்று பட்டாளங்கள் கிளம்பி விட்டன.

தங்களை யாரும் விமர்சனிக்க முடியாது, தாங்கள் சொல்வதுதான் சரி, சொன்னதைப் பற்றி யாரும் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்ற மமதையிலும் பலர் இன்னும் உள்ளனர்.

ஆகவே, இவர்களின் பொய்மையை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது.

ஊடகங்களின் தாக்கம், அவற்றின் திரிபுகள், திருத்தங்கள், மாற்றங்கள், ………….

தொழில் ரீதியாக பிரயோகிக்கும் நிலைகள் ……………..

முதலியவற்றைக் காணும்போது, தாக்கப்படுபவர்கள் தாங்கள் தாக்கப்படுகிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை தாங்கள் தாக்கப்படுகிறோம் என்று அறிந்தாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள “செக்யூலார் மாயை”யில் தாங்கள் எதுவும் சொல்ல/செய்ய முடியாது, சொன்னாலும் / செய்தாலும் எடுபடாது என்த நிலையும் உள்ளது.

அதைவிட “இந்து” என்றாலே, ஆஹா இவர்கள் “இந்துத்துவ-வாதி”, “ஆர்-எஸ்.எஸ் காரன்” என்று முத்திரைக் குத்தப்பட்டு தீண்டத்தகாதவனாக / தகாதாவராக ஒதுக்கப்பட்டுவிடுவர் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இத்தகைய பல முனை தாக்குதல்களில் அகப்பட்டுள்ள மக்களைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

அத்தகைய பன்முனைத் தாக்குதல்கள், நேரிடை-மறைமுகத் தாக்குதல்கள் மனோதத்துவ ரீதியில் மேலே குறிப்பிட்ட சாதனங்கலையும் இணைத்தும் செயல்படுகிறது.

அந்நிலையில்தான் இந்த “திராவிடம்”, “திராவிட நாத்திகம்” எல்லாம் வருகின்றன.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

3 பதில்கள் to “திராவிட நாத்திகம்”

 1. vedaprakash Says:

  திராவிட நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு, பழமைவாத மறப்பு என்ற முகமூடிகளை அணிந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலும் இந்து விரோத நாத்திகம், இந்து எதிர்ப்புவாதம் என்ற ரீதியில் இருந்து வருகிறது. பல நேரங்களில் இது கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்ற இந்து-அல்லாதவர் என்கின்றவர்களும் தமக்கு ஒரு ஆயுதமாகக் கொண்டு இந்துக்களுக்கு மட்டும் எதிராகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிலையில் இங்கு அது விமர்சனிக்கப் படுகிறது, அதன் முரண்பாடுகள் எடுத்துக் காட்டப் படுகின்றன.

 2. vedaprakash Says:

  இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கிறது?
  http://www.viduthalai.com/20100606/news07.html

  உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமூகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்-தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

  நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உல-கத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப் படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷை-கள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்-களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறித்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமூகத்தைப் பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்பந்தமில்லாமலிருக்கவு-முள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.

  வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கியருக்கும் ஆப்கானிதானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்-காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ ஒரு சமூகத்தையோ அடியோடு கொன்று ஒரு தேசத்தார் வாழத்துணியும்படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமூக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவு-களாகவும் ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும். கிறித்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறித்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரிகளாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.

  அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மத விஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறித்தவர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச்சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.

  இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச்சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்-தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்-காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்-களைவிட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமூகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம் முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும், தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்-றார்கள்.

  உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறித்தவர்களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலை-மைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்திக் கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக்கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில் அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களை போல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமை-யான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் மகமதியர்களையும் மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்-களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்ல-லாம். உதாரணமாக நடைஉடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுபட்டுக் கிடந்தாலும் இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றை-யாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீர அரசர்களான அமீருக்கும், பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.

  மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேசகுடி ஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங்களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின்பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால் புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலியுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள். இந்தியாவில் உள்ள மகமதிய சமூகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும், ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒருபுறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும் மற்றொருபுறம் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும் அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால் கூடு-மானவரை அந்த சமுக நன்மை சம்பந்தமான கவலை-யும் ஒற்றுமையுமேயாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமூக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்-போமானால் இதிலுள்ள மதப்பிரிவுகளோடு அவை-களிலுள்ள உட்பிரிவுகளும் ஜாதிப்பிரிவுகளும் அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும் அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும். இந்த உள்-பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன முதலாவது இந்துக்களுடைய மதக்கொள்கைகளின்படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால் ஒரு சிறு வகுப்பினர் – பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்-கூடாது. மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் – தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.

  படிப்பு மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரி-யான நிர்ப்பந்தம் இருப்பதோடு மாத்திரமல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒரு-வரை ஒருவர் தொடாமல் நெருங்காமல் காணமுடி-யாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவைகளையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீரவேண்டும் என்றும் அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுவிட்டது.

  ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்-குத்-தக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தர-மாய் பொருள் வருவாய் இருக்கத் தக்கதாக பதினாயிரக்-கணக்கான கடவுள்களை சிருஷ்டித்து ஆயிரக்கணக்-கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத்தாருக்கு வேண்டி-யவைகளையெல்லாம் அவசியமாக்கி அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்கவேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப்பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்-யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமானதென்றும் நாஸ்திகமென்றும் அப்படிப்-பட்ட நாஸ்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்ப்பந்தங்களையும் உண் டாக்கி வைத்திருக்கின்றார்கள்.

  இது மாத்திரமல்லாமல் யாராவது துணிந்து இக்கட்டுப்பாட்டையும் கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ்டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடி-யோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றைய-தினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்-கைகளாகவும், அவைகளைக் கொண்ட புத்தகங்களே மத ஆதாரங்களாகவும் அவைகளை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.

  உதாரணமாக இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடை உடை ஆச்சாரம் போகப் போக்கியம் முதலியவைகளில் பழைய கொள்கை-களையும் பழைய அனுபவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்திக் கொடுத்து அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டி-ருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும் ஆணவமும் இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறு-படுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.

  உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலை-வர்கள், பெரியோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரேமுகமாக விலக்க வேண்-டும் என்றும், ஒழிக்கவேண்டும் என்றும் அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்-திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.

  உதாரணமாக சமீபத்தில் பல இடங்களில் பார்ப்ப-னர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்-தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானத்-திருப்பதும் போதுமான உதாரணமாகும்.

  எனவே இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும் இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனீயம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?

  எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும்? என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.

  எனவே, இந்தியாவில் பார்ப்பனீயமற்ற மதமே இல்லை என்றும் இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும் சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லாது மக்கள் கடவுள் நிலை என்-பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்-காலமும் அடைய முடியாதென்றே சொல்லுவோம்.

  குடிஅரசு – துணைத் தலையங்கம்,
  14.04.1929

 3. vedaprakash Says:

  மலையாளமும் மாளவியாவும்
  http://www.viduthalai.com/20100606/news25.html

  தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசியலிலாவது மத இயலிலாவது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்துவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரச்சாரம் செய்வது வழக்கம். அது மாத்திரமல்லாமல் தாங்களாகத் தனித்து வெளியில் புறப்பட்டு பிரச்சாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடைமேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம். இதுவும் சமீபகாலம்வரை பாமர மக்கள் முழு மோசமாயிருந்த காலம் வரையில்தான் செல்லுபடியாய்க் கொண்டு வந்தது.
  இப்போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செலாவணி ஆவதற்கில்லாமல் செல்லுமிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல் அவர் சாயமும் வெளுத்து என் ராமன் வேறே; என் வருணாச்சிரமம் வேறே என்று சொல்லி கொண்டு தப்பித்துப் போகப்பட்டபாடு வெகு பாடாய்ப் போய்விட்டதும்; பிறகு திரு. பஜாஜ் அவர்களை தருவித்து அவர்களுடன் திரிந்ததில் உள்ள யோக்கியதையும் போய் அவர் தலையில் கைவைத்துக் கொண்டு திரும்பியதும் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்-சாரியார் முதலியவர்கள் தாங்கள் தனித்து போக முடியாமல் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாண-சுந்தரம், முத்துரங்கம், ஓ.கந்தசாமி, பாவலர், ஜயவேலு, ஷாபிமுகமது; பஷீர் அகம்மது முதலிய நபர்களை கூட்டிக் கொண்டு வெளியில் போவதும், அங்கும் இப்போது எந்த ஊருக்குப் போனாலும் எவ்வளவு பயந்து ஒடுங்கி அடக்கமாகப் பேசினாலும் இவர்-களைப் பேசஒட்டாமல் திருப்பி அனுப்பிக்கப்படுவதும்.

  பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிப் பத்திரிகைகளும் எவ்வளவுதான் மறைத்தாலும் தாராளமாய் வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றது. இந்த இரண்டு மூன்று வாரமாய் திரு.சீனிவாசய்-யங்கார் கம்பெனி செல்லுமிடங்கள் பலவற்றில் கூட்டம்போட முடியாமல் திரும்புவதும், கூட்டம் கலைக்கப்பட்டுவருவதும் அவர்கூடச் செல்பவர்-களுக்கு நடக்கும் மரியாதைகளும் சேலம், திருச்சி, கோயமுத்தூர் முதலிய ஊர்களில் நடந்த சம்பவங்களே போதுமானது. இவ்வளவும் போதாமல் இந்த வருஷத்திற்கு திரு பண்டிட் மாளவியா அவர்-களைத் தருவித்து கடவுளுக் கும் கோயிலுக்கும் மதத்-திற்கும் ராமாயணத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதென்று சொல்லி பிரச்சாரம் செய்யச் செய்ததில் அவர் சென்ற-விடங்களிலெல்லாம் சரமாரி-யாகக் கேள்விகள் கேட்டுத் திணறவைத்து கடைசியாகக் கூட்டம் கலைந்து வீட்டுக்குத் திரும்பும் படியாகிவிட்டது. பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் பண்டிதரைப் பிடித்து அவர் தலையில் வருணாசிரமத்தையும் கோவிலையும் மதத்தையும் இராமனையும் இராமாயணத்தையும் தூக்கி வைத்து எவ்வளவோ விளம்பரம் செய்தும் ஒரு காசுக்குக் கூட விற்க முடியாமல் போனதோடு திரு.மாளவியாவுக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த யோக்கியதையும் அடியோடு கவிழ்ந்து விட்டதென்றே சொல்லலாம்.

  உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில் பிரவேச மகாநாட்டில் தலைமைவகித்து பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம். ஆனால் அந்த விஷயங்களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது. அதாவது 11-ஆம் தேதி இந்து பத்திரிகை வேண்டுமென்றே அயோக்கியதனமாய் அடியோடு மறைத்துவிட்டு உணர்ச்சியுள்ள வாதங்கள் நடந்தன என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.

  10ஆம் தேதி சுயராஜ்ஜியாவில் மாளவியாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆட்-சேபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களிலிருந்து புறப்பட்டன என்றும் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டாயிற்று என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது.

  12ஆம் தேதி மித்திரனில் திரு.மாளவியா பேசின கான்ஃபரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர்மானம் செய்திருப்பதாகவும் பிரீபிரஸ்சின் பேரால் போடப்பட்டிருக்கின்றது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இன்னவையென்று ஒரு பத்திரிகையாவது எழுத-வில்லை என்றாலும் திரு.மாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம். திரு.மாளவியா ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்; எனக்கு சாத்திரம் தெரியும் என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிறித்தவனையோ மகமதியனையோ இந்து வாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன் மாளவியாஜி அதற்குச் சாத்திரம் பார்த்துதான் சொல்ல வேண்டுமென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.

  மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜி நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவியாஜியை மூர்ச்சையடையச் செய்துவிட்டது. எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர் எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக் கூடும்.

  குடிஅரசு தலையங்கம் – 12-05-1929

  இப்பொழுது மதம் எங்கே?

  திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாட சாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பன-ரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று மகந்துவும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல்லாதார்களை விலக்கிவிட்டார்கள். இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாசமும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளை களுக்கும் எல்லாப் பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே, இப்பொழுது அந்த மதம் இருக்கிறதா என்று கேட்கின்றோம். பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் பேய் இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குப் பேய் ஓடிப்-போகும் என்பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவதாகத் தெரிகிறது.

  குடிஅரசு, செய்தி விளக்கக்குறிப்பு, 16.06.1929

  ஒத்திப் போடுதல்

  இந்திய சட்டசபை, மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷகாலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரச்சாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்திப் போட்டு விட்டார்கள். அதுபோலவே, திரு. கல்யாண சுந்தரமுதலி-யாரது ஆஸ்திகப் பிரச்சாரமும் சைவப் பெரியார்கள் மகாநாடுகளும் அநேகமாக ஒத்திபோடப்பட்டு விடும். திரு.வரதராஜுலுவின் உத்தியோக மேற்கும் பிரச்சாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன் மூலம் ஒத்திப்-போடப்பட்டாய் விட்டது. இதுமாத்திரமல்லாமல் திரு.சக்கரவர்த்தி இராஜ-கோபாலாச்சாரியாரின் மதுவிலக்குப் பிரச்சாரமும் திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரச்சாரமும், திரு.-சங்கர்லால் பாங்கரின் அந்நியத்-துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்-படலாம். அன்றியும் தேசமே பிரதானமென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமான பிரச்சாரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்-பட்டுவிடும்.

  இவற்றையெல்லாம் விட, 1929ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு 12 மணி 5-நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாய் ஒத்துழையாமை நடத்துவது என்கின்ற திரு.-காந்தியின் வாய்தாவும் கண்டிப்பாய் யார் தடுத்-தாலும் நிற்காமல் ஒத்திப் போட்டாய்விடும்.

  குடிஅரசு, துணைத் தலையங்கம், 02.06.1929

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: